ஒரு நிறுவனத்தின் பொறுப்பாளராக இருப்பவர் லெட்டர்ஹெட் பயன்படுத்தி RTI மூலமாக தகவல்களை கேட்கலாமா ? எனக்கு RTI பற்றி பயிற்சியளித்த ஒரு சமூக அமைப்பில் பொறுப்பு வகிக்கும் நண்பர் லெட்டர்ஹெட் – ல் தகவல் கேட்க கூடாதுன்னு சொல்றார்.. சட்டப்படி எதுசரி என்று சரியான விளக்கம் தரமுடியுமா யாராவது ?
S. நாகேந்திரன். பெருந்துறை, ஈரோடு மாவட்டம்.
உங்களுக்கான சட்டப்பூர்வ பதில் :-
தலைவர்,
மாநில சட்டம்-ஒழுங்கு அணி,
மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம்,
( தமிழ்நாடு -புதுச்சேரி )
📲 : +919626669371
மிக முக்கியமான கேள்வியை கேட்டுள்ளீர்கள்… உங்களுக்கான தெளிவான சட்டப்பூர்வ பதில் : ✒️👇
பார்வை :- தகவல் பெறும் உரிமை சட்டத்தின் சட்டப்பிரிவுகள் :
✒️🔎👉 சட்டப்பிரிவு : 3
இச்சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு, குடிமக்கள் அனைவரும் ( all citizens) தகவல் பெறும் உரிமையை பெறுகிறார்கள்.
✒️🔎👉 சட்டப்பிரிவு 6(2)
தகவல் கோரும் விண்ணப்பதாரரிடம் அவரை தொடர்பு கொள்வதற்கு தேவைப்படக்கூடிய விவரங்களை தவிர்த்து, தகவல் பெறுவதற்கான காரணங்கள் அல்லது இதர தனிப்பட்ட விவரங்கள் எதையும் ( any other personal details ) கேட்கப்படக் கூடாது.
மேற்கண்டவாறு RTI ACT -2005 சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔎✒️👉ஒரு நிறுவனத்தில் அல்லது அமைப்பில் பொறுப்பாளராக இருக்கும் ஒரே காரணத்தினால்
அவர் இந்திய குடிமகன் என்ற அடிப்படை தகுதியை இழந்து விடப்போவதில்லை…
எனவே சட்டப்பிரிவு : 6(2) வரையறுத்துள்ளபடி சங்கம், நிறுவனம், அமைப்புகளின் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் அடிப்படையில் ஒரு இந்திய குடிமகன்/குடிமகள் ஆவர் எனவே இந்திய குடிமகன் ஒருவருக்கு சட்டம் வழங்கியுள்ள தகவல் பெறும் உரிமையை யார் மறுத்தாலும் தவறு…!
இந்திய அரசியலமைப்பு சட்டம், ( Indian constitution Law ) சட்டப்பிரிவு 14 -ல் “சட்டத்தின் முன்னர்ச் சமன்மை” – என்ற தலைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளபடி
அரசு, சட்டத்தின் முன் சமன்மையும், சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமன்மையையும் எவர் ஒருவருக்கும் மறுத்தல் ஆகாது – என தெளிவுபடுத்துகிறது.
எனவே அமைப்பு , சங்கம், நிறுவனம் இவைகளின் பொறுப்பாளர்கள் அடிப்படையில் இந்திய குடிமகன்/மகள் ஆவதால் அவர்களுக்கான தகவல் பெறும் உரிமையை மறுத்துரைக்க, பின்வரும் சட்டவிதிகளின் படி வாய்ப்போ உரிமையோ இல்லை…!
🔎👉 தகவல் பெறும் உரிமை சட்டம் -2005., பிரிவு : 3 , பிரிவு : 6(2) , பிரிவு : 2(F)
🔎👉 இந்திய அரசியலமைப்பு சட்டம் : 14 மற்றும் 13(3)(a)
🔎👉 இந்திய சாட்சிய சட்டம் பிரிவு : 76
🔎👉மேலும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின், சட்டப்பிரிவு -6(2)-ல் கூறிய படி , ஒரு அமைப்பு அல்லது நிறுவனத்தின் பொறுப்பாளர் பயன்படுத்தும் லெட்டர்ஹெட் – டிலும் அவரது பெயர், பொறுப்பு, மற்றும் முகவரி முதலான தொடர்பு விவரங்கள் மட்டுமே குறிப்பிடப்படுகிறது…!
பொதுத்தகவல் அலுவலருக்கு தேவையானது சட்டப்பிரிவு 6(2)-கூறுவது போல மனுதாரரின் பெயர் , தொடர்பு விவரங்கள் மட்டும்தான்… அப்படியிருக்க அவர் பொறுப்பாளரா ? சாதாரண நபரா? அமைப்பில் உள்ளாரா? இல்லையா? என்ற தேவையற்ற வீணான ஆராய்ச்சிகளை பொதுத்தகவல் அலுவலர் செய்வதும், அதனடிப்படையில் குடிமகன் ஒருவருக்கு தகவல் மறுப்பதும் “”சட்டவிதிமீறல்”” ஆகும்.. மேலும் இது உள்நோக்கத்துடன் தகவலை மறுக்கும் செயலாகும்…
ஒரு நிறுவனத்தின் பொறுப்பாளர் தனது லெட்டர் ஹெட் RTI-கடிதத்திற்கு தகவல் மறுக்கப்பட்டது தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்… அதற்கு மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பு இதோ…✒️🔎👇
ஒரு நிறுவனத்தின் அலுவலகப் பொறுப்பாளர் இந்தியாவின் குடிமகனாக இருந்தால், நிறுவனத்தின் சார்பாக RTI சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறலாம். அவர் தன்னை நிறுவனத்தின் அலுவலகப் பொறுப்பாளராக அடையாளப்படுத்திக் கொள்வது அல்லது நிறுவனத்தின் லெட்டர்ஹெட்டில் விண்ணப்பத்தை தாக்கல் செய்வது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகளை எழுப்பும் உரிமையைப் பறிக்காது…!
அவர் ஒரு நிறுவனத்தின் பொறுப்பாளர் என்பதாலேயே, அவரை இந்திய குடிமகன் அல்லாதவரை போல கருதி தகவல் மறுப்பது மிகவும் தவறானது… என்று தீர்ப்பளித்துள்ளது.
( PSPA )