மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வ தேசிய அளவில் சிந்தனை செய்ததின் விளைவே சர்வ தேசிய மனித உரிமை பிரகடணம்- 1948 ( UNIVERSAL DECLRATION OF HUMAN RIGHTS-1948) 10.12.1948 உருவாக்கப்பட்டது.
மனித குலத்தைச் சார்ந்த ஒவ்வொரு நபரின் அங்கீகரிக்கப்பட்ட இயற்கையாய் அமையப் பெற்ற கடமையும், சமமான மாற்ற முடியாத உரிமைகளும், சுதந்திரம், நீதி, அமைதி ஆகியவற்றிற்கான அடிப்படையாகும்.
மனித உரிமைகள் மீதான அலட்சியப்போக்கும் அவமரியாதையும் நாகரீகமற்ற செயல்களாக அமைந்தன , மனித சமுதாயம் உலகம் என்ற அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டபோது பேச்சுரிமை, அச்சமற்றநிலை, நிறைவேற்றிக்கொள்ள விரும்பும் தேவை போன்றவை மக்களின் உயர்ந்த விருப்பமாக பிரகடணப் படுத்தப்பட்டன
மனிதன் தனக்கென ஒரு உறைவிடம் வைத்துக்கொள்ள அனுமதிக்காத போதும் கொடுங்கோன்மைக்கு எதிரான கலவரத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கும் சட்ட விதிகளின்படி ,மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அவசியமாகும். நாடுகளுக்கிடையில் நட்புறவில் முன்னேற்றத்தைக் கொண்டு வருதல் அவசியமாகும்.
"A man who treats a man is a man is a man among men" மனிதனை மனிதனாக மதிப்பதே மனித உரிமை மற்றவர்கள் உன்னை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அதே மதிப்பை நீயும் அவர்களுக்கு அளி என்பதே மனித உரிமையின் அடிப்படைத் தத்துவம்
“Live and let live” நாம் மகிழ்வாக வாழ்வதும் மற்றவர்கள் மகிழ்வாக வாழ இடையூறாக இல்லாதிருப்பதும் அவசியம். அடுத்தவர் வாழ்வில் அத்துமீறி ஆதிக்கம் செய்ய தன் அதிகாரத்தை உபயோகிப்பதும், அதில் ஆனந்தம் காண்பதும் மனிதாபிமானமல்ல அதற்குப் பெயர்தான் மனித உரிமை மீறல் என்று வகைப்படுத்தியுள்ளனர்.
“அஞ்சி நிற்கும் எளியோரை பலம் விஞ்சி நிற்கும் வலியோர் அடிமைப் படுத்த முனையும்போது அத்தகைய குடிமக்களின் உரிமைப் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளித்து உதவிக்கரம் நீட்ட வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு.”
தனி மனித உரிமைகளுக்கு எவ்விதப் பாதிப்புகளும் இல்லாத நிலையொன்றே ஒருசமுதாயத்தை நகரீகமுடையது என நம்மிடையே நயந்து பேசுவதற்கு வாய்ப்பளிக்கும்/மனிதனுக்கு மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய மனித உரிமைகளும், மனித மேம்பாடும் ஒரு நாணயத்தின் இரண்டுப் பக்கங்கள்
சுடரிலிருந்து சூட்டையும், ஒளியையும் அகற்ற நினைப்பவர்கள் அதனை ஊதி அணைப்பதன்றி சுலபமான உபாயம் வேறு ஒன்றில்லை.
தனி மனிதனிடனிடம் இருந்து மனித உரிமைகளை மறுத்து தட்டிப் பறிப்பது என்பது அம் மனிதனை கொல்லுவதற்கு ஈடான கொடுஞ்செயலாகும்
இந்தியாவில் மனித உரிமைக் கோட்பாட்டின் வளர்நிலை
புராணங்களிலும், இதிகாசங்களிலும் மனித உரிமை மறுக்கப்பட்டதற்கான சான்றுகளும், அதற்கான எதிர்ப்புக் குரல்களும் எழுந்த வண்ணம் இருந்த நிலைகளை அறிய முடிகிறது அன்றைய மனித உரிமைப் போராளியாக நந்தன், நல்லதங்காள், நளாயினி,கர்ணன், ஏகலைவன் போன்றோரது வரலாறுகளை மேற்சொன்னவற்றை உண்மை என்று அறிய முடிகிறது
மனுநீதி ஆணுக்கும் – பெண்ணுக்கும் உரிமைகளில் பேதத்தைக் காட்டியது. பெண்களை இரண்டாம் தரத்தில் இருத்தி ஆண்களின் ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்தது இதன் மிச்ச சொச்சமாக – காலி பெருங்காய டப்பா வாசனை போல இன்றும் பொது மக்களின் வாழ்வியல் நடைமுறை பெண்களை இரண்டாம் தரமாக தரம் இறக்கியே மனித உரிமை மீறலை கொண்டுள்ளது
திருக்குறள் ” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ” என்று முழங்கி, சட்டத்தின் முன் சகலரும் சமம் என்று வலியுறுத்தியது
11 ஆம் நூற்றாண்டில் இராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணுல் அணிவித்து கோயில்களை அவர்களுக்காக திறந்து விட்டார். தாழ்குடியினர் ஓதக்கூடாது என மறுக்கப்பட்ட “ரகசியார்த்தம் ” மந்திரத்தை கோபுரத்தின் மீது ஏறி நின்று எல்லோருக்கும் ஓதினார்
1848ஆம் ஆண்டு மே ஜோதிபா பூலே தன் மனைவி சாவித்திரிபாய்க்கு கல்வி புகட்டி அவர் மூலம் தம் வீட்டில் பெண்களுக்கான முதல் பள்ளியை துவங்கினார். தீண்டத்தகாதவர்களுக்காக துவங்கப்பட்ட முதல் பள்ளி என்ற பெருமையும் இதற்குண்டு
கபீர்தாஸர், சைதன்யர், துகாராம், போன்ற சமயப் பெரியோர்களே பக்தி மார்க்கத்தின் வாயிலாக மனித உரிமை குரல் எழுப்பி போராளியாகவே வாழ்ந்துள்ளனர்.
அகத்தியர்,திருமூலர் முதலான சித்தர்கள் மனித உரிமைக்கான கருத்தேற்றங்களை உருவாக்கியுள்ளனர்
1936 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திருவிதாங்கூர் மன்னர் சுசீந்திரம் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முதன் முதலாக அனுமதித்தார்
இராமலிங்க அடிகளார், பாரதியார், பாரதிதாசன் போன்றோர் மனித உரிமைக்கான முழக்கங்களை கவிதைகள் வாயிலாக வழங்கினார்கள்
மதம் சார்ந்து உருவான ஒடுக்குமுறைகளை எதிர்த்து இயக்க களங்களை ஈ வெ .ரா. பெரியார் உருவாக்கினார்
அர்த்த சாஸ்த்திர அடிப்படை கட்டமைப்பை அரவணைத்து காப்பதே ஆதிக்க நலனுக்கு உகந்தது என்ற அரசியல்தந்திரத்தை ஆங்கிலேயர்கள் கைக்கொண்டனர்.
இந்தியாவில் மனித உரிமைக் கோட்பாட்டின் வளர்நிலை
புராணங்களிலும், இதிகாசங்களிலும் மனித உரிமை மறுக்கப்பட்டதற்கான சான்றுகளும், அதற்கான எதிர்ப்புக் குரல்களும் எழுந்த வண்ணம் இருந்த நிலைகளை அறிய முடிகிறது அன்றைய மனித உரிமைப் போராளியாக நந்தன், நல்லதங்காள், நளாயினி,கர்ணன், ஏகலைவன் போன்றோரது வரலாறுகளை மேற்சொன்னவற்றை உண்மை என்று அறிய முடிகிறது
மனுநீதி ஆணுக்கும் – பெண்ணுக்கும் உரிமைகளில் பேதத்தைக் காட்டியது. பெண்களை இரண்டாம் தரத்தில் இருத்தி ஆண்களின் ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்தது இதன் மிச்ச சொச்சமாக – காலி பெருங்காய டப்பா வாசனை போல இன்றும் பொது மக்களின் வாழ்வியல் நடைமுறை பெண்களை இரண்டாம் தரமாக தரம் இறக்கியே மனித உரிமை மீறலை கொண்டுள்ளது
திருக்குறள் ” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ” என்று முழங்கி, சட்டத்தின் முன் சகலரும் சமம் என்று வலியுறுத்தியது
11 ஆம் நூற்றாண்டில் இராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணுல் அணிவித்து கோயில்களை அவர்களுக்காக திறந்து விட்டார். தாழ்குடியினர் ஓதக்கூடாது என மறுக்கப்பட்ட “ரகசியார்த்தம் ” மந்திரத்தை கோபுரத்தின் மீது ஏறி நின்று எல்லோருக்கும் ஓதினார்
1848ஆம் ஆண்டு மே ஜோதிபா பூலே தன் மனைவி சாவித்திரிபாய்க்கு கல்வி புகட்டி அவர் மூலம் தம் வீட்டில் பெண்களுக்கான முதல் பள்ளியை துவங்கினார். தீண்டத்தகாதவர்களுக்காக துவங்கப்பட்ட முதல் பள்ளி என்ற பெருமையும் இதற்குண்டு
கபீர்தாஸர், சைதன்யர், துகாராம், போன்ற சமயப் பெரியோர்களே பக்தி மார்க்கத்தின் வாயிலாக மனித உரிமை குரல் எழுப்பி போராளியாகவே வாழ்ந்துள்ளனர்.
அகத்தியர்,திருமூலர் முதலான சித்தர்கள் மனித உரிமைக்கான கருத்தேற்றங்களை உருவாக்கியுள்ளனர்
1936 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திருவிதாங்கூர் மன்னர் சுசீந்திரம் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முதன் முதலாக அனுமதித்தார்
இராமலிங்க அடிகளார், பாரதியார், பாரதிதாசன் போன்றோர் மனித உரிமைக்கான முழக்கங்களை கவிதைகள் வாயிலாக வழங்கினார்கள்
மதம் சார்ந்து உருவான ஒடுக்குமுறைகளை எதிர்த்து இயக்க களங்களை ஈ வெ .ரா. பெரியார் உருவாக்கினார்
அர்த்த சாஸ்த்திர அடிப்படை கட்டமைப்பை அரவணைத்து காப்பதே ஆதிக்க நலனுக்கு உகந்தது என்ற அரசியல்தந்திரத்தை ஆங்கிலேயர்கள் கைக்கொண்டனர்.மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் – 1993 இன் சட்டஎண். 10/1994 அத்தியாயம் 1
முன்னுரிமை
பிரிவு 2 பொருள் வரையறைகள்
(1) இந்தச் சட்டத்தில் தறுவாயின் தேவை வேறானாலன்றி
அ) ஆயுதப்படை என்பது கடற்படை, தரைப்படை, வான்படை என்று பொருள்படும் மற்றும் ஒன்றியத்திலுள்ள பிற ஆயுதப்படை எதனையும் உள்ளடக்கும்
ஆ) தலைமையாளர் என்பது ஆணையத்தின் அல்லது நேர்வுக்கேற்ப மாநில ஆணையத்தின் தலைமையாளர் என்று பொருள்படும்
இ) ஆணையம் என்பது பிரிவு 3 இன்படி அமைக்கப்பட்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்பது பொருள்படும்
ஈ) “மனித உரிமைகள் என்பது அரசமைப்பின் வாயிலாக உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அல்லது பன்னாட்டு முத்திரை ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள மற்றும் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களினால் செல்லுறத்தக்க தனிநபரின் உயிர், தன்னுரிமை, சமண்மை, கண்ணியம் ஆகியவை தொடர்பான உரிமைகள் என்று பொருள்படும்
(உ) மனித உரிமைகள் நீதிமன்றம் என்பது பிரிவு 30 இன் படி குறித்துரைக்கப்பட்ட மனித உரிமைகள் நீதி மன்றம் என்று பொருள்படும்
ஊ) பன்னாட்டு முத்திரை ஒப்பந்தங்கள் என்பது உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான பன்னாட்டு உரிமை ஒப்பந்தம் என்றும்.. ஐக்கிய நாட்டு பொதுப்பேரவையினால் 1966 டிசம்பர் 16 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளியல் சமுதாய மற்றும் பன்னாட்டு உரிமைகள் மீதான பன்னாட்டு முத்திரை ஒப்பந்தம் என்றும் பொருள்படும்
எ) உறுப்பினர் என்பது ஆணையத்தின் அல்லது நேர்வுக்கேற்ப மாநில ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் என்று பொருள்படும் மற்றும் தலைமையாளரையும் உள்ளடக்கும்
ஏ) தேசிய சிறுபான்மையினர் ஆணையம் என்பது தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 1992 இன் பிரிவு 3 இன்படி அமைக்கப்பட்ட தேசிய சிறு பான்மையினர் ஆணையம் என்று பொருள்படும்
ஐ) தேசிய பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆணையம் என்பது அரசமைப்பின் உறுப்பு 338 இல் சுட்டப்பட்டுள்ள பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் என்று பொருள் படும்.
ஒ) தேசிய மகளிர் ஆணையம் என்பது தேசிய மகளிர் ஆணையச் சட்டம் 1990 இன் பிரிவு 3 இன்படி அமைக்கப்பட்ட தேசிய மகளிர் ஆணையம் என்று பொருள்படும்
ஓ) அறிவிக்கை என்பது அதிகாரமுறை அரசிதழில் வெளியிடப்பட்ட ஓர் அறிவிக்கை என்று பொருள்படும்.
ஔ) வகுத்துரைக்கப்பட்ட என்பது இந்தச் சட்டத்தின்படி வகுக்கப்பட்ட விதிகளால் வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்படும்.
ஔ- 1) பொதுப்பணியாளர் என்பது இந்திய தண்டணை தொகுப்புச் சட்டத்தின் பிரிவு 21 இல் அதற்கு குறித்தளிக்கப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும்.
ஔ- 2) மாநில ஆணையம் என்பது பிரிவு 21 இன்படி அமைக்கப்பட்ட மாநில மனித உரிமைகள் ஆணையம் என்று பொருள்படும்.
(2) ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் செயலாற்றலில் இல்லாத சட்ட நெறி ஒன்றிற்கான இந்த சட்டத்திலுள்ள கட்டுகை எதுவும் அந்த மாநிலம் தொடர்பாக அந்த மாநிலத்தில் செயலாற்றலில் உள்ள நேரிணையான சட்ட நெறி ஏதேனும் இருப்பின் அதற்கான கட்டுகை ஒன்றாக பொருள் கொள்ளப் படுதல் வேண்டும்.
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் – 1993 இன் 14வது பிரிவு மனித உரிமை மீறல் தொடர்பான புலன் விசாரணை குறித்து “புலனாய்வு” என்ற தலைப்பில் விளக்கமளித்துள்ளது.
(1) ஆணையம், விசாரணை தொடர்புற்ற புலனாய்வு எதனையும் நடத்தும் நோக்கத்திற்காக மைய அரசாங்கத்தின் அல்லது நேர்வுக்கேற்ப மாநில அரசாங்கத்தின் ஒருங்கிசைவுடன், மைய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கம் எதனின் அலுவலர் அல்லது புலனாய்வு முகமை எதனின் பணியத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
(2) விசாரணையுடன் தொடர் புற்ற பொருட்பாடு எதனையும் புலனாய்வு செய்யும் நோக்கத்திற்காக உட்பிரிவ (1) இன் படி எவரது பணியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அந்த அலுவலர் அல்லது முகமை எதுவும் ஆணையத்தின் பணிப்புரைக்கும் கட்டாள்கைக்கும் உட்பட்டு :-
(அ) நபர் எவரது வருகையையும், அழைப்பாணையிட்டு வருமாறு செய்விக்கலாம் மற்றும் அவரை விசாரணை செய்யலாம்:
(ஆ) ஆவணம் எதனையும் வெளிக்கொணரவும் முன்னிலைப்படுத்தவும் வேண்டுறுத்தலாம்; மற்றும்
(இ) அலுவலகம் எதிலிருந்தும் பொதுப் பதிவு ஆவணம் அல்லது அதன் படி எதனையும் கோரி பெறலாம்.
(3) பிரிவு15இன் வகையங்கள், ஆணையத்தின் முன்னர் நபர் ஒருவரால் சான்றளிக்கப் படுகையில் கொடுக்கப்பட்ட வாக்குமூலம் எதுவும் தொடர்பாக பொருந்துவதைப் போன்று உட்பிரிவு (1) இன் படி எவரது பணியங்கள் பயன்படுத்தப் பட்டனவோ அந்த அலுவலர் எவர் முன்பும் அல்லது முகமை எதன் முன்பும் நபர் ஒருவரால் கொடுக்கப்பட்ட வாக்குமூலம் எதன் தொடர்பாகவும் பொருந்துதல் வேண்டும்.
(4) உட்பிரிவு (1) இன் படி எவரது பணியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவோ அந்த அலுவலர் அல்லது முகமை எதுவும், விசாரணை தொடர்புற்ற பொருட்பாடு எதனையும் புலனாய்வு செய்தல் வேண்டும்; மற்றும் இதன் பொருட்டு ஆணையத்தால் குறித்துரைக்கப்படலாகும் கால அளவிற்குள் அதன் மீதான அறிக்கை ஒன்றை ஆணையத்திற்கு மேலனுப்புதல் வேண்டும்.
(5) ஆணையம் தெரிவிக்கப்பட்ட பொருண்மைகளின் சரியான தன்மை குறித்தும் உட்பிரிவு (4) இன் படி அதற்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் இருந்து எட்டப்பட்ட முடிவு எதுவும் இருக்குமாயின் அது குறித்தும் தான் தெளிவுறக் காணுதல் வேண்டும் மற்றும் இந்த நோக்கத்திற்காக ஆணையம் ( புலனாய்வு நடத்திய அல்லது நடத்துவதற்கு உதவிய நபரை அல்லது நபர்களை விசாரணை செய்வது உள்ளடங்கலாக) அது பொருத்தமென கருதுகிற அத்தகைய விசாரணையைச் செய்யலாம் .
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் – 1993 இன் 4 வது அத்தியாயம் “நெறிமுறை” என்ற தலைப்பில் பிரிவு 17 இல் முறையீடுகளை விசாரணை செய்தல் குறித்து விளக்கியுள்ளது.
மனித உரிமைகள் மீறப்பட்டதற்கான முறையீடுகளை விசாரணை செய்கையில் ஆணையம்…
(1) மைய அரசாங்கத்திடம் இருந்து அல்லது மாநில அரசாங்கம் எதனிடம்இருந்தும் அல்லது அதற்கு கீழமை அமைவனத்தின் பிற அதிகாரி எவரிடம் இருந்தும் தகவலை அல்லது அறிக்கையை அதனால் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் அனுப்புமாறு கேட்டுப் பெறலாம்.
வரம்புரையாக.
(அ) ஆணையத்தினால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அந்த தகவலோ அறிக்கையோ பெறப்படவில்லை எனில் அந்த முறையீட்டினை அது தாமே விசாரணை செய்ய முற்படலாம்
(ஆ) தகவலோ அறிக்கையோ பெறப்பட்டதன் பேரில் மேலுமான விசாரணை எதுவும் கோரப்படவில்லை என்றோ அல்லது கோரப்பட்ட நடவடிக்கையானது தொடர்புடைய அரசாங்கத்தினால் அல்லது அதிகாரியால் தொடங்கப்பட்டுள்ளது அல்லது எடுக்கப்பட்டுள்ளது என்றோ ஆணையம் தெளிவுற காணுமாயின் அது முறையீட்டை விசாரணை செய்ய முற்படாமல் அதனை அவ்வாறு முறையீட்டாளருக்கு தெரிவிக்கலாம்.
(2) கூறு 1 இல் அடங்கியுள்ள எதற்கும் குந்தகமின்றி முறையீட்டின் தன்மையை கருத்தில் கொண்டு அது தேவையென கருதுமாயின் விசாரணை ஒன்றை தொடங்கலாம்.
…. என்று முறையீடுகளை விசாரணை செய்வது பற்றி தெளிவாக விளக்கமளித்துள்ளது.மனித உரிமைகள் நீதி மன்றங்கள் குறித்து மனித உரிமை பாதுகாப்பு சட்டம் -1993 இன் பிரிவு 30 இல் தெளிவு படுத்தி உள்ளது இது குறித்து இன்று பார்ப்போமா?
மனித உரிமைகள் மீறப்பட்டதில் இருந்து எழும் குற்றச் செயல்களை விரைந்து விசாரணை செய்வதற்கு வகை செய்யும் நோக்கத்திற்காக மாநில அரசாங்கம் உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியின் ஒருங்கிசைவுடன் மேற் கூறப்பட்ட குற்றச் செயல்களை விசாரணை செய்வதற்கு மாவட்டம் ஒவ்வொன்றிற்கும் அமர்வு நீதி மன்றம் ஒன்றை மனித உரிமைகள் நீதிமன்றம் என்று அறிவிக்கை வாயிலாக குறித்துரைக்கலாம்.
வரம்புரையாக. இந்தப் பிரிவிலுள்ள எதுவும்
(அ) அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதி மன்றம் ஒன்றாக குறித்துரைக்கப் பட்டிருக்கிறது என்றால்: அல்லது
(ஆ) சிறப்பு நீதி மன்றம் ஒன்று ஏற்கனவே அமைக்கப் பட்டிருக்கிறது என்றால்
அப்போதைக்கு செயலாற்றலில் உள்ள பிற சட்டம் எதன்படியுமான அத்தகைய குற்றச் செயல்களுக்கு பொருந்துதல் ஆகாது.
என மிக அழகாக குறித்துரைத்துள்ளது. இந்தச் சட்டப்பிரிவின்படி
காவல் துறையினராலோ, நீதித்துறையினராலோ, அரசுத்துறையினராலோ மனித உரிமை மீறல்களால் காவல் நிலைய சித்திரவதை இதர மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ள மனித உரிமை மீறல்களுக்கு அதன்பாதிப்புகளுக்கு ஆளான நபர் அவரவர் குடி இருக்கும் பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் கு.வி.மு.ச – 1973 இன் 200 வது பிரிவுப்படி இது குறித்து தனிப்பிராது வழங்கினால் மனித உரிமை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கான பரிந்துரை வழங்கப்படும்.
மாநில மனித உரிமைகள் ஆணைய விதிகள் 1997 இன் அத்தியாயம் 2 இன் விதி 9 இல் பொதுவாக ஏற்கப்படத் தகாத புகார்கள் குறித்து விளக்கி உள்ளது.
கீழ்க்கண்ட தன்மை கொண்ட புகார்களை ஒட்டு மொத்தமாக தள்ளுபடி செய்திடலாம்.
அ) தெளிவற்ற பெயர் இல்லாத அல்லது புனைப் பெயரில் அல்லது புரியாத அல்லது சிறிய அற்பமான,
ஆ) சட்டத்தின் பிரிவு 36 (1) இன் கீழ் தடுக்கப்பட்டது.
இ) சட்டத்தின் பிரிவு 36 (2) இன் கீழ் தடுக்கப் பட்டது.
ஈ) சொத்துரிமைகள் ஒப்பந்த கடப்பாடுகள் உரிமையியல் பூசல் தொடர்புடையது.
உ) பணி விஷயங்கள் அல்லது தொழிலாளர் அல்லது தொழிற் பூசல் தொடர்புடையது.
ஊ) மனித உரிமைகள் குறிப்பாக மீறுதல் எதனையும் கொண்டிராத குற்றச்சாட்டுக்கள்.
எ) நீதிமன்றம் அல்லது தீர்ப்பு ஆயம் ஒன்றின் முன்பு நீதி பரிசீலனையில் உள்ள விஷயம்.
ஏ) ஆணையத்தின் நீதி சார் தீர்ப்புரை ஒன்றினால் அல்லது முடிவினால் அடக்கப்பட்ட விஷயம்.
ஐ) வேறு ஏதேனும் அதிகார ஆயத்துக்கு முகவரி இடப்பட்ட புகாரின் நகலானது ஆணையத்தினால் பெறப் பட்டிருக்கிற விடத்து.
ஒ) ஆணைகத்தின் உள்ளீட்டெல்லைக்கு அப்பாற்பட்டன.
போன்ற வகைப்பாடு இல்லாத புகார்மனுக்கள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியாத புகாராக மேற்காணும் மாநில மனித உரிமைகள் ஆணைய விதிகள் 1997 இல் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
ஆகையால் மனித உரிமைகள் ஆணையத்திற்கு வழங்கும் புகார் மனுக்களை ஜாக்கிரதையாக தயாரிக்கலாமா?
இனிய பகல் வணக்கம்
இரா.கணேசன், பாதிக்கப்பட்டோர் கழகம்
அருப்புக்கோட்டை
9443920595