உங்கள் விவசாய நிலத்தில் எல்லைக்கல்லை பிடுங்கி விட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா? காவல் நிலையத்திற்கு இதுபோல புகார் மனுவை வழங்குங்கள் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்
மனுதார்:
………………………………………..
s/o……………………………………
………………………………………….
…………………………….(அஞ்சல்)
…………………………….( தாலுகா )
………………………………மாவட்டம்
கைபேசி எண்.
பெறுநர்:
திரு. காவல் ஆய்வாளர் அவர்கள்,
சீர்மிகு காவல் நிலையம்,
…………………………….
…………………………….மாவட்டம்.
எதிர் மனுதார்:
திரு…………………………..
த/பெ………………………..
……………………………….
………………………..தாலுகா,
………………………….மாவட்டம்.
பொருள்:
குற்ற விசாரணை முறை சட்டம் 1973 இன் 2(4) இன் படி குற்றமுறையீடு.
1) மனுதாரராகிய நான் மேலே காணும் முகவரியில் குடியிருந்து வருகிறேன்………………. மாவட்டம்,………………………வட்டம்,……………….கிராமம், பட்டா எண்…………. சர்வே எண்…………….பரப்பளவு…………………. என்ற எனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.
2) மேற்காணும் எதிர் மனுதாரர் ஆனவர்………………………………மாவட்டம்,…………………… வட்டம்,…………………………கிராமம், பட்டா எண்………….சர்வே எண்………………என்ற எனது விவசாய நிலத்துக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் எனது விவசாய நிலத்தில் உள்ள சர்வே எல்லை கல்லை பிடுங்கி எறிந்து விட்டு எனது விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகிறார்.
3) மேற்காணும் சங்கதிகள் ஆனது இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 441,447,403,489 ஆகிய பிரிவுகளின் படி சட்டப்படி தண்டிக்கக்கூடிய குற்றங்களை செய்துள்ளார்.
4) ஆகையால் அருள் கூர்ந்து மேற்காணும் குற்றச்சங்கதி குறித்து விசாரணை செய்து குற்ற விசாரணை முறை சட்டம் 1973 இன் 154(1) இன் படி குற்ற முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மனுதாரரின் நீதியின் நோக்கம் நிறைவேற உதவ வேண்டுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கிறேன்.
மனுதார்
தேதி:
இடம்: