அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் செல்வம் பழனிசாமி.
நம்ம தமிழ்நாட்டுல, போலி ஆவணங்கள் மூலமா, என்னுடைய நிலத்தை அபகரிச்சி, மோசடி செஞ்சி என்னுடைய சொத்தை ஆக்கிரமிச்சிட்டாங்கன்னும், ஆள்மாராட்டம் செஞ்சு என்னுடைய சொத்தை வித்துட்டாங்கன்னும், இப்படி பாதிக்கப்பட்ட பல பேரு, இதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கணும்னும், சமூக வலைதளங்களில் கேள்விகளை கேட்கிறாங்க.
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பல பேரும் சொல்லக்கூடிய பதில், முதல்ல போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளைன்ட் பண்ணுங்க என்பது தான். ஆனால் இது சரி கிடையாது. அப்படின்னா தப்பா? தப்புன்னா எந்த வகையில் தப்பு? அப்படின்னா இதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கணும்? யார்கிட்ட போய் புகார் கொடுக்கணுங்கறத பத்திதான் நாம இந்த வீடியோவில் பார்க்க போறோம்.
ஒருத்தருடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலமா வேற ஒருத்தர் அபகரிச்சிட்டாலோ, மோசடி செஞ்சு ஒருத்தருடைய சொத்தை இன்னொருத்தர் ஆக்கரமிச்சிட்டாரோ, ஒருத்தருடைய சொத்தை ஆள்மாராட்டம் செஞ்சு இன்னொருத்தர் வித்துட்டாலோ, போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்க போகாதீங்க.
இந்த காரியங்கள் எல்லாமே சட்டப்படி செய்யப்பட்ட அதாவது ஒரு கவர்மெண்ட் அலுவலகத்து மூலமா நடந்திருக்கிற காரியங்கள். அதாவது, நடந்த அந்த காரியத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ அந்த கவர்மெண்ட் ஆபீஸ் ஒரு முக்கியமான காரணமா ஆயிருக்கு. அதனால, அது சம்பந்தமாக போலீஸ் ஸ்டேஷன்ல நீங்க போய் புகார் கொடுத்தா, அவங்க பெருசா எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கப் போறதில்லை.
அதனால மோசடி நடந்த, அல்லது ஆள்மாறட்டும் நடந்த, அல்லது போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட அரசு அலுவலகத்திற்கு போய்தான் நீங்க முதல்ல புகார் கொடுக்கணும். இறப்புச் சான்றிதழ் சம்பந்தமாக, வாரிசு சான்றிதழ் சம்பந்தமாக, பட்டா சம்பந்தமாக, போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டிருந்தால், அந்த ஆவணங்களை வழங்கிய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு போய்தான், நீங்க முதல்ல புகார் கொடுக்கணும்.
அவங்க உங்களுடைய புகாரை விசாரிப்பாங்க, அதுல உண்மையிலேயே மோசடி நடந்திருந்தால், அந்த அலுவலகத்தை போல ஆவணங்கள் மூலமாகவோ, பொய்யான தகவல்கள் மூலமாகவோ, மோசடியான ஆவணங்கள் மூலமாகவோ, ஆள்மாரட்டங்கள் மூலமாகவோ, ஏமாத்துனவங்க மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி, அவங்கதான் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுப்பாங்க. அதுதான் சரியான நடைமுறை. உதாரணத்துக்கு நான் ஒன்னு சொல்றேன், உங்க வீட்ல பொருள்கள் திருடு போயிருந்தா, அது சம்பந்தமா நீங்க தான் போலீஸ் ஸ்டேஷன்ல போயி புகார் கொடுக்க முடியும். அடுத்த வீட்டில் பொருள்கள் திருட்டு போயிருந்தா, நீங்க போயி போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க முடியுமா? அது மாதிரி தான் இதுவும். ஒரு அரசு அலுவலகத்தில் உதாரணமாக, ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் மோசடியாகவோ அல்லது ஆள்மாரட்டம் மூலமாகவோ, அல்லது போலி ஆவணங்கள் மூலமாகவோ, ஒரு மோசடி நடந்திருக்குன்னு வச்சுக்கோங்க. நீங்க அது சம்பந்தமா இந்த மாவட்ட பதிவாளர் கிட்டதான் புகார் கொடுக்கணும். அவரு அந்த ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு விசாரணை நடத்துவாரு. உங்களுடைய புகார் உண்மைதான்னு தெரிஞ்ச பிறகு, அதுக்கான அந்த ரிப்போர்ட்ட பதிவுத்துறை டி.ஐ.ஜி.க்கு அனுப்புவாரு. பதிவுத்துறை அந்த ரிப்போர்ட்டை சரி பார்த்துட்டு, குற்ற செஞ்சவங்க மேல போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கச் சொல்லி, மாவட்ட பதிவாளருக்கு உத்தரவு போடுவாரு. அதுக்கு அப்புறமா சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு, அந்த உத்தரவை மாவட்ட பதிவாளர் ஃபார்வேர்ட் செய்வார்கள். சார்பாக போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் செய்வார். அதுக்கு அப்புறமா போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து நடவடிக்கை எடுத்து, அந்த குற்றம் செஞ்ச உங்களை கைது செய்வாங்க. இப்படி செய்யாம நீங்களா நேரடியா போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளைன்ட் கொடுத்தீங்கன்னா, ஒரு காரியமும் நடக்காது. யாரையும் கைது செய்ய மாட்டாங்க, கட்டப்பஞ்சாயத்துதான் நடக்கும்.