Written Statement, Set-Off and Counter Claim | பதிலுரை எதிரீடு மற்றும் எதிருரை
-
by admin.service-public.in
- 57
- Points / குறிப்புகள்:
- ஒரு பிரச்னையை முன்னிறுத்தி வாதி பிரதிவாதிக்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார்.
- அதன் பேரில் நீதிமன்றம் மூலமாக ஒரு அழைப்பாணை பிரதி வாதிக்கு அனுப்பபடுகிறது.
- அழைபானையில் குறிப்பிட்ட தேதியில் ஒரு வழக்கறிஞர் மூலமாகவோ, அல்லது தானே முன் வந்து வழக்கை சந்திக்கவோ ஆஜராக வேண்டும்.
- அன்றைய தினம் அந்த வழக்கிற்கான பதிலுரையை தாக்கல் செய்ய வேண்டும்.
- அல்லது, பதிலுரையை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு, கூடுதலாக 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
- தாக்கல் செய்யப்படும் பதிலுரையில், சங்கதிகள் மிகத்தெளிவாக இருக்கவேண்டும். மாறாக மழுப்பலாக எவ்வித பதிலும் இருக்ககூடாது.
- தாக்கல் செய்யப்படும் பதிலுரையில் ஏதாவது கோரிக்கைகள் இருந்தால் தவறாமல் குறிப்பிடவேண்டும்.
- அந்த கோரிக்கைகளுக்கு ஏதேனும் நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டி இருந்தால், பதிலுரையுடன் செலுத்தப்படவேண்டும்.
- கடைசியாக பதிலுரையையும், இரு தரப்பு விசாரணையையும் பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும்.
- இரு தரப்பினருக்கும் தீர்பானை வழங்கப் படவேண்டும்.
- Order-8 Rule-1, 6 and 6A in CPC

🔊 Listen to this Points / குறிப்புகள்: ஒரு பிரச்னையை முன்னிறுத்தி வாதி பிரதிவாதிக்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார். அதன் பேரில் நீதிமன்றம் மூலமாக ஒரு அழைப்பாணை பிரதி வாதிக்கு அனுப்பபடுகிறது. அழைபானையில் குறிப்பிட்ட தேதியில் ஒரு வழக்கறிஞர் மூலமாகவோ, அல்லது தானே முன் வந்து வழக்கை சந்திக்கவோ ஆஜராக வேண்டும். அன்றைய தினம் அந்த வழக்கிற்கான பதிலுரையை தாக்கல் செய்ய வேண்டும். அல்லது, பதிலுரையை…