Wrong CIBIL score

Fault cibil core penalty 4 lakhs | தவறாக சிபில் பட்டியலில் சேர்த்ததற்கு 4 லட்சம் அபராதம்.

தந்தை ஏற்ற வீட்டுக்கடனை தெரிவிக்காமல், மனைவி, மகனை சிபில் பட்டியலில் சேர்த்த வங்கி ரூ 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும். நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு.

தந்தை பெற்ற வங்கிகடனை தெரிவிக்காமல் அவர் இறந்த பின்னர் மனைவி மகனை சிபில் பட்டியலில் சேர்த்த வங்கி ரூ 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நுகர்வோர் கோர்ட் தீர்பளித்தது.

கரூர் மாவட்டத்தை சேந்தவர் பழனிச்சாமி, இவர், கரூரில் அரசுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரூ 20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றிருந்தார். அந்த கடனுக்கு மாத தவணைத்தொகை செலுத்திவந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் திரு பழனிச்சாமி உயிரிழந்துவிட்டார். பழனிச்சாமி கடன் பெற்றபோது கடன் தொகையை செலுத்தி வரும்போது, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அந்த கடன் தொகையை காப்பீட்டு நிறுவனம் மூலம் ஈடு செய்யும் வகையில் கடன் தொகைக்கு காப்பீடும் எடுத்து, அதற்கான மாத சந்தாவும் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், பழனிச்சாமியின் மனைவி லட்சுமி, மகன் சதீஷ்குமார் ஆகியோருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் வங்கி தரப்பில், இருவரையும் தங்கள் கடந்தாரராக அறிவிப்பு செய்தது.

இது குறித்து தகவல் அறிந்த சதீஷ் குமார் வாங்கியை தொடர்புகொண்டபோது கடன் தொகை பற்றி அவர்களிடம் தெரிவிக்காமல், கடன் தொகையை திரும்ப செலுத்தாதவர்கள் சதீஷ் குமார் பெயர் பட்டியலில் சேர்க்கபட்டது.

வங்கியில் நடவடிக்கையால், மிகுந்த மன உளைச்சல் அடைந்த சதீஷ்குமார், கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ரூ 9 லட்சத்து பத்தாயிரம் நஷ்ட ஈடு, மற்றும் செலவுத்தொகை கேட்டு புகார் ஒன்றை அளித்தார்.

இதனை விசாரணை செய்த நுகர்வோர் ஆணையத்தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் நேற்று வழங்கிய உத்தரவில், காப்பீடு குறித்து விபரம் தெரிவிக்காத காரணத்திற்காக ரூ 1 லட்சமும், சிபிலில் சதீஷ்குமார் மற்றும் அவரது தாய் பெயரை தவறாக சேர்த்ததற்காக ரூ 3 லட்சமும் , மொத்தம் 4 லட்சம், அத்துடன் வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து 7.5 சதவீதம் வட்டியுடன் வழங்கவேண்டும், அத்துடன் செலவுத்தொகை ரூ 7 ஆயிரம் சேர்த்து வழங்கவண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்தார்.

AIARA

🔊 Listen to this தந்தை ஏற்ற வீட்டுக்கடனை தெரிவிக்காமல், மனைவி, மகனை சிபில் பட்டியலில் சேர்த்த வங்கி ரூ 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும். நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு. தந்தை பெற்ற வங்கிகடனை தெரிவிக்காமல் அவர் இறந்த பின்னர் மனைவி மகனை சிபில் பட்டியலில் சேர்த்த வங்கி ரூ 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நுகர்வோர் கோர்ட் தீர்பளித்தது. கரூர் மாவட்டத்தை சேந்தவர் பழனிச்சாமி,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *