
RTI Question and Replies from Police for Barricade | காவல் துறையிடமிருந்து இரும்பு தடுப்புக்காக த.பெ.உ. கேள்விகளும் பதில்களும்.
-
by admin.service-public.in
- 199
இந்தியாவில் அதிக இடங்களில் ரோடுகளில் போடப்பட்டுள்ள BARRICADE எனப்படும் இரும்பு தடுப்பால், வாகன ஓட்டிகளுக்கு பலவகையான சிரமங்களும், பல வேளைகளில் விபத்துக்களும், அதில் சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆனால், இரும்பு தடுப்புகளால், ஏற்படும் விபத்துகளும், உயிரிழப்புக்களும், காவல் துறையில் வழக்காக பதியபடுவதில்லை. அதனால், விபத்துக்களின் எண்ணிக்கை குறைவாக கணக்கிடப்படுகிறன>
பொதுவாக போலீஸ் ஒரு செயலை செய்துவிட்டால் அது சட்டப்படியானது, மற்றும் சரியானது என்றே மக்கள் நினைகிறார்கள். ஆனால், நாட்டில் இருக்கும் துறைகளிலேயே அதிகமாக சட்டத்தை மீறும் துறை காவல்துறைதான். இந்த உண்மை தெரிந்தும் பலர், தட்டிகேட்க திராணி இல்லாமல், ” எத்தனை விபத்துக்கள் நடந்தாலும், எத்தனை சாவுகள் நடந்தாலும், தான் மட்டும் பாதுகாப்பாக இருப்பதாக கருதி சென்றுவிடுகின்றனர்.
ஆனால், ஒரு உண்மையான சமூக ஆர்வலரால்,அப்படி செல்ல மனம் வராது, அப்படி களத்தில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான சமூக ஆர்வலர்களால் தான் கொஞ்சமாவது சட்டம் நடைமுறையில் உள்ளன.
காரைக்கால் மாவட்டத்தில் BARRICADE அதிகளவில் போடப்பட்டு இருந்தது, அதை அகற்றசொல்லி மனு கொடுக்கப்பட்டது, அந்த மனு அலட்சியபடுத்தப்ட்டது. அதன் பின் சட்ட அறிவிப்பு ஒன்று கொடுக்கப்பட்டது, அதனால், தேவையற்ற இடங்களில் இருக்கும் BARRICADE கள் அகற்றப்பட்டன, அதனை RTI மூலம் உறுதிப் படுத்துக் கொண்டேன்.
RTI Act-2005
Ref: AAPKKLvsPOLICE 20220613 தேதி: 13-06-2022
அனுப்புனர்:
- MMY. ஹமீது (7667 303030)
- மாவட்ட தலைவர் ஆம் ஆத்மி கட்சி
- 46 வள்ளல் சீதக்காதி வீதி
- காரைக்கால்-60902
பெறுனர்:
- பொது தகவல் அலுவலர்
- முதல் நிலை காவல் கண்காணிப்பாளர்
- காவல் கண்காணிப்பு அலுவலகம்
- காரைக்கால்-609602
தகவல் பெரும் உரிமை சட்டம் 2005 ன் படி, கீழ்கண்ட தகவல்களை எனக்கு வழங்கிட பணிக்ககப்படுகிரீர்கள்.
- காரைக்கால் மாவட்டம் முழுவதிலும், ரோடுகளில் குறுக்கே முறையின்றி வைக்கப்பட்டுள்ள (Barricade) இரும்பு தடுப்புக்களை அகற்ற கோரி (நீதிமன்ற உத்தரவு இணைப்புடன்) நான் தங்களுக்கு 29-03-2022 அளித்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த முழு விபரம் தேவை.
- ரோடுகளில் வைக்கப்படும் இரும்பு தடுப்புக்களின் இடக்குறிப்பு பற்றி காவல் நிலையங்களில் முழு விபரம் பராமரிக்க வேண்டும். அப்படி தங்கள் காவல் நிலைய வரம்பிற்குள் வரும் இடங்களில் இருக்கும் தடுப்புக்கள் விபரங்கள் பராமரிக்க படுகின்றனவா? ஆம் எனில்.
- காரைக்கால் மாவட்டம் முழுவதிலும், எத்தனை இடங்களில் இரும்பு தடுப்பு வைக்கபட்டுள்ளது? அதன் இடக்குறிப்புடன் விபரம் தேவை.
- காரைக்கால் மாவட்டம் முழுவதிலும் வைக்கப்பட்டுள்ள இருப்பு தடுப்புகளில் எத்தனை தடுப்புக்கள், காவல் துறை நிதியில் செய்யப்பட்டது. எத்தனை தடுப்புக்கள் விளம்பர நிறுவனங்களால் செய்து தரப்பட்டது என்ற விபரம் தேவை.
- இரும்பு தடுப்புக்களில் இருக்கும் விளம்பரங்களுக்கு, விளம்பரத் தாரர்களிடமிருந்து கட்டணங்கள் வசூலிக்க படுகின்றனவா? ஆம் எனில் ஒரு தடுப்பிற்கு எவ்வளவு என்ற விபரம் தேவை.
- ரோடுகளில் குறுக்கே பாதுகாப்பின்றி இருக்கும் இரும்பு தடுப்புக்களால், பல விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் எத்தனை வழக்குகள் இரும்பு தடுப்புக்களால் நடந்தன என்ற விபரம் தேவை.
- எதிர் ஒளிக்கும் ஸ்டிக்கர் மற்றும் விட்டு விட்டு எரியும் எச்சரிக்கை மின் விளக்கு பொருத்தாத இருப்பு தடுப்புக்களை, பொது மக்களின் உயிர் பாதுகாப்பு கருதி, உயர் நீதி மன்றம் தடை விதித்துள்ளது, காரைக்கால் மாவட்டத்தில் போடப்பட்டுள்ள இரும்பு தடுப்புக்களில் எத்தனை இடங்களில் இந்த நீதி மன்ற இத்தரவுப்படி, ஸ்டிக்கர் மற்றும் மின் விளக்கு உள்ளன என்ற விபரம் தேவை.
MMY ஹமீது – மாவட்ட தலைவர் – ஆம் ஆத்மி கட்சி

🔊 Listen to this இந்தியாவில் அதிக இடங்களில் ரோடுகளில் போடப்பட்டுள்ள BARRICADE எனப்படும் இரும்பு தடுப்பால், வாகன ஓட்டிகளுக்கு பலவகையான சிரமங்களும், பல வேளைகளில் விபத்துக்களும், அதில் சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆனால், இரும்பு தடுப்புகளால், ஏற்படும் விபத்துகளும், உயிரிழப்புக்களும், காவல் துறையில் வழக்காக பதியபடுவதில்லை. அதனால், விபத்துக்களின் எண்ணிக்கை குறைவாக கணக்கிடப்படுகிறன> பொதுவாக போலீஸ் ஒரு செயலை செய்துவிட்டால் அது சட்டப்படியானது, மற்றும் சரியானது என்றே மக்கள்…