Crpc sec 340 – நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ஆள்மாறாட்டம் மற்றும் பொய் சாட்சியம் அளித்தல் போன்ற குற்றங்கள் நிகழுமேயானால் அவற்றை கு. வி. மு. ச பிரிவு 340 ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தான் விசாரிக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நடைபெறும் குற்றங்கள் குறித்து Crpc sec 195(1)(b)(i)ல் கூறப்பட்டுள்ளது. அந்த சட்டப் பிரிவில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 193 முதல் 196வது பிரிவு முடிய, 199,200,205 முதல் 211வது முடிய மற்றும் 228வது பிரிவு வரை அடங்கும். இந்த மாதிரி குற்றங்களை காவல்துறையினர் விசாரிக்க முடியாது. ஆனால் நீதிமன்றங்களில் நடைபெறும் குற்றங்களுக்காக தலைமை எழுத்தர் காவல்துறையிடம் FIR பதிவு செய்யக் கோரி புகார் மனு கொடுப்பது தவறானது ஆகும். Crpc sec 195ன் கீழ் நீதிமன்ற விசாரணையின் போது நடைபெறும் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கு ஒரு தடையை ஏற்படுத்தி உள்ளது. எனவே நீதிமன்ற விசாரணையின் போது ஆள்மாறாட்டம் மற்றும் பொய் சாட்சியம் அளித்தால் அவர்கள் மீது சம்பந்தப்பட்ட நீதிமன்றமே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர காவல்துறையில் புகார் அளிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRL. RC. NO – 233/2011, V. Lawrence and A. Mahendhiran Vs Inspector of police, Pollachi P. S (2011-2-LW-CRL-53)
நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது.
Categories:
ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.