பயன்படுத்துவீர்.! #பயனடைவீர்..!
G.O.(Ms).No.99 Dated 21-09-2015
(Ref. High Court order W.P.No.20527/2014)-ன் படி, எந்தவொரு அரசு அலுவலரும் தங்களுக்கு வரும் மனுவிற்கு,
மனு கிடைக்கப் பெற்ற 3- நாட்களுக்குள், மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையையும், 30 நாட்களுக்குள் உரிய தீர்வையும் வழங்க வேண்டுமெனவும்,
அவ்வாறு வழங்க முடியாத பட்சத்தில் உரிய காரணங்களை விளக்கமாக மனுதாரருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிறது.
இதை எந்த அரசு அலுவலரும் பின்பற்றலாம்.
ஆனால் அவ்வாறு செயல்படுபவர்களை இதுவரை கண்டதில்லை.
தீர்வைத் தேடும் மனுதாரர்,
தன் மனுவின் மீதான நடவடிக்கை இன்மையையும், கால தாமத்தையும் மட்டுமே சமயங்களில் மாதங்களில் தொடங்கி ஆண்டுகளைக் கடந்தும் (நிலுவையை) தீர்வாகப் பெறுகிறார். இந்நிலை மாற வேண்டுமெனில், மனு செய்யும் பொழுது மேற்குறிப்பிட்டுள்ள அரசாணை எண்னைக் குறிப்பிட்டு மனு செய்யுங்கள். மேலும், 1973- தமிழ்நாடு அரசுப் பணியாளர் நன்னடத்தை விதி 20 பிரிவு (1), ஒவ்வொரு அரசு ஊழியரும் நேர்மையுடனும், கடமையாற்றல் பற்றுடனும் எப்பொழுதும் பணி செய்யவும்;
பிரிவு (2) மேற்படி பொறுப்புகளுடன் எப்பொழுதுமே கட்டுப்பாடுகளுடனும்; பிரிவு (3) தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரையறைக்குள்ளும் மற்றும் உயர் அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கை, எழுத்துப் பூர்வமாக அறிவுறுத்தல்களின் படியும் செயல்பட வேண்டும் என்கிறது. அவ்வாறு செயல்படாமை விதி மீறல் என்கிறது.
எனவே எந்தவொரு அரசு அலுவலகத்திற்கு மனு செய்யும் போது அரசாணை எண். 99, நாள்: 21-09-2015 -ஐ குறிப்பிட்டு மனு செய்யுங்கள், உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்,
1973- தமிழ்நாடு அரசுப்பணியாளர் நன்னடத்தை விதி 20-ன் கீழ் நடவடிக்கை கோரப்படும் என்பதையும் குறிப்பிட்டு மனு செய்யுங்கள். மேற்படி விதி, கடமை தவறும், கடமையை மீறும் அனைவருக்கும் மேலும் அரசுத்துறை அனைத்திற்கும் பொருந்தும். வழக்கங்கள் மாற வாய்ப்புகளை, பயன்படுத்துவீர்! பயனடைவீர்!