GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் தாய் பத்திரம் மூல பத்திரம் ஆதி பத்திரம் முழு விளக்கம்.

தாய் பத்திரம் மூல பத்திரம் ஆதி பத்திரம் முழு விளக்கம்.

(இந்த பதிவு இன்னும் சரியாக திருத்தம் செய்யப்படவில்லை. எனவே, ஒலி வடிவில் கேட்பது சிரமம் )

தாய் பத்திரம் மூல பத்திரம் ஆதி பத்திரம் பற்றி தெரிந்து கொள்வோம்

பத்திரம் எழுதும் போது சொத்தினை எழுதி கொடுப்பவர், தனக்கு சொத்துக்கள் எப்படி வந்தது, எந்த வழியாக வந்தது, என்று விளக்கமாக பத்திரத்தில் சொல்லி இதன் மூலம் கிடைத்த சொத்து உரிமைகளை, தான் வேறொருவருக்கு மாற்றம் செய்வதை விளக்கி இருப்பார்கள். இப்படி பத்திரம் எழுதும் போது, சொத்தின் உரிமையாலருக்கு, மேற்படி செத்து உரிமை கொடுத்த பத்திரம் தாய் பத்திரம் என்பதாகும். பாட்டி முப்பாட்டி கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி என்று தாய் பத்திரம் நீண்டு கொண்டே இருக்கும்.

ஒரு நபருக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கி இருந்தால், அந்த இடத்தை அவர் வேறு ஒரு நபருக்கு சில காலங்களுக்கு பிறகு கிரயம் செய்து கொடுக்கின்றார் எனறால், அவருக்கு மூலப்பத்திரம் எதுவும் கிடைக்காது. ஏனென்றால் அரசு புறம்போக்கு இடத்திற்கு, அரசு பட்டா வழங்கியது மூலமாக நிலத்தின் உரிமையை பெற்றவர், தன்னுடைய நில உரிமையை வேறு ஒருவருக்கு சட்டப்படி பதிவுத்துறை பத்திர பதிவு அலுவலகத்தில், பத்திரம் செய்து நில உரிமையை மாற்றிக் கொள்கின்றார் என்றால், இந்த நிலத்திற்கு தற்பொழுது தான் முதல் முறையாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரு பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. எனவே இந்த பத்திரம் தாய் பத்திரங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும். இதற்கு பின்னிட்டு பல்வேறு ஆவணங்கள் பத்திர பதிவு அலுவலகத்தில் இந்த சொத்து தொடர்பாக நடைபெறுகின்ற பொழுது கடைசியாக பதியப்பட்ட பத்திரத்திற்கு அது முந்தைய பத்திரங்கள் அனைத்தும் தாய்ப்பத்திரங்கள் ஒவ்வொரு பத்திரத்திலும் அந்த பத்திரத்தின் சொத்து உரிமையாளர் எந்த பக்கத்தில் வாயிலாக எந்த அடிப்படையில் தனக்கு சொத்து கிடைத்தது என்ற விவரத்தை சொல்லி இருப்பார் எப்படி ஒவ்வொரு பாத்திரத்தையும் கண்டறிந்து அதற்கு முந்தைய பத்திரத்தை தேடி அதில் உள்ள முந்தைய சொத்துரிமை விஷயத்தையும் பத்திரத்தையும் கண்டறிந்து கொண்டேன் சென்றால் கடைசியாக ஒரு புள்ளியில் போய் நிற்கும் அந்த இடத்தில் சொத்தின் உரிமையாளர் தனக்கு சொத்து வந்த விஷயத்தை சொல்லுகின்ற பொழுது சொத்தானது தனக்கு பூர்வீகமாக ஒன்று சேர்ந்து அரசு பட்டா வழியாக கொடுத்த சொத்து என்று நிற்கும் அதுவரை இருக்கக்கூடிய அனைத்து பத்திரங்களும் உங்களுக்கு அந்த சொத்துக்கு தாய் பத்திரமாகும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் தேடி கண்டுபிடிக்க முடியும்.

மிக எளிமையாக சொல்வதென்றால் உங்களுக்கு உங்கள் தாயார் பெயர் தெரியும் தாயாரின் தாயார் பெயர் அவர்களின் தாயார் பெயர் அவருக்கு முந்தைய தயார் பெயர்….
என்று நீங்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்து முன்னோக்கி உங்கள் பரம்பரையை கண்டுபிடிக்கும் முயற்சி செய்தால் ஏதாவது ஒரு இடத்தில் உங்களின் வம்சாவடி பெயர் தெரியாமல் நின்று விடுவீர்கள் இப்படித்தான் பத்திரமா தம்பியை உரிமை மூலத்தை தான் பிறந்த கதையை சொல்லிக் கொண்டே போகும் ஒரு இடத்தில் நின்றுவிடும் எங்கு நிற்கின்றதோ அது எல்லா பதிகங்களுக்கு தாய் பத்திரமாகும்

தாய்பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்???

தற்பொழுது நீங்கள் வாங்கப் போகும் சொத்திற்கு தாய்பத்திரங்கள் அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் ஒரு தாய் பத்திரம் 2010-ல் உருவாக்கப்பட்டது. அதனுடைய தாய் பத்திரம் 2003-ல் உருவாக்கப்பட்டது, அதனுடைய தாய் பத்திரம் 1995-ல் உருவாக்கப்பட்டது. இப்படி தாய் பத்திரங்கள் ஆண்டுகள் பின்னோக்கிப் போய் கொண்டே இருக்கும்.

இப்படி ஆண்டுகள் பின்னோக்கி போய்க் கொண்டே இருக்கின்ற தாய் பத்திரங்களுக்குப் பின்னோக்கிய ஏதாவது ஒரு ஆண்டில் முற்றுப் புள்ளி இருக்கும் அல்லவா அதனைப் பற்றி பார்ப்போம்.

1800க்கு முன்பு இந்தியாவில் யாருக்குமே இந்த நிலம் எனக்கு உரிமையானது என்று பட்டாவும் கிடையாது, பத்திரமும் குடியானவர்களுக்கு கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1800-களுக்கு முன்பு ஜமீன்கள், ஜாகீர்கள், சௌத்திரிகள், குரோரிகள் போன்றவர்களுக்கு செப்பேடுகளாக, ஓலைச்சுவடிகளாக, தங்கபட்டயங்களாக கூட நிலத்தின் மீதான மேல் வாரி உரிமை கொடுக்கப்பட்டு இருக்கிறது, ஆனால் அதற்கெல்லாம் இப்பொழுது இருப்பது போல முத்திரைத் தாள் பத்திரங்க்கள் கிடையாது.

1800-களுக்கு முன்னாள் அரசு நிர்வாகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கின்ற வருவாய் துறை ஊழியர்களான கர்ணம், ஜேம்ஸ்பாண்டு, மஜும்தார்,பவுஸ்தார் போன்றவர்களுக்கு சம்மளத்திற்கு பதிலாக இந்தகிராமங்களின் மேல்வாரி உரிமையை இனாமாக அரசு கொடுத்திருக்கும் அந்த இனாம் உரிமைக்கானபட்டயங்கள் ஓலைச்சுவடிகள் மூலமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் இப்பொழுது இருப்பது போல முத்திரைத்தாள் பத்திரங்கள் கிடையாது.

1800 களுக்கு முன்பு சமஸ்கிருத வேதபடிக்கின்ற பிராமணர்களுக்கு ஸ்தோத்திரியம் என்றும், மசூதிகளில் இருக்கின்ற ஹாஜிக்களுக்கும் சில கிராமங்களின் மேல்வாரி உரிமையை இனாமாகபட்டயங்கள் மூலமும் ஓலைச்சுவடிகள் மூலமும் அரசுகொடுத்திருக்கும். அதற்கும் இப்பொழுது இருப்பது போல முத்திரைத்தாள் பத்திரங்கள் கிடையாது.
1800-களுக்கு முன்பு கிராமத்தில் வேலை செய்கின்ற வெட்டியான்கள், தச்சர்கள், நாவிதர்கள், கருமான்கள், கிராமகோவில் பூசாரிகள் ஆகியோர்களுக்கு சம்மளத்திற்கு பதிலாக மேல்வாரி உரிமை உள்ள சிறு அளவிலான நிலங்கள் அந்தந்த கிராமத்திற்குள்ளேயே இனாமாக கொடுக்கப்பட்டது. அதனுடைய விவரங்கள் எல்லாம் 1800-களுக்கு முன்னாள் பராமரிக்கப்பட்ட கர்ணம் பதிவேடுகளில் இருக்கிறது.

1800-க்கு பிறகு தான் காரன் வாலீஸ் பிரபுகாலத்திற்கு பிறகு சாஸ்வத செட்டில்மெண்ட் (PERMANENT SETTLEMENT)-ற்குபிறகு அனைத்து குடியானவர்களுக்கும் இந்த நிலம் உனக்கு தான் என்ற நிரந்தர பட்டா வழங்கப்பட்டது. ஆக 1800-க்கு முன்பு வரை எந்த ஒரு குடியானவருக்கும் இந்த நிலம்உனக்கு தான் என்ற பட்டாவே இல்லாத போது செப்பேடுகளோ, ஓலைச்சுவடிகளோ, பட்டயங்களோ இருப்பதற்கு வாய்ப்பில்லை.அதே போல முத்திரைத் தாள் பதித்த பத்திரங்களும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

1800-க்கு பிறகு தான் குடியானவர்களுக்கு பட்டா கொடுக்கபட்டதால் அவர்கள் அதனை பிற குடியானவர்களுக்கு கிரையம் கொடுப்பதற்கும் தானம் அளிப்பதற்கும், பாகப் பிரிவினை செய்வதற்கும், இன்னும் பிறவகையான பத்திரங்களை போடுவதற்கும் அவசியம் ஏற்பட்டது.

அதனால் 1840-களில் கல்கத்தாவில் முதன் முறையாக பத்திரப்பதிவு உருவாக்கப்பட்டது. நம் தமிழ்நாட்டில் 1865-களில் பத்திரப்பதிவு உருவாக்கப்பட்டது.
ஆக தமிழ்நாட்டில் குடியானவர்களுக்கு பழைய பத்திரம் வைத்திருந்தால் கண்டிப்பாக 1865-க்கு முன்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை.

எனவே இன்று இருக்கும் எல்லா சொத்துக்களுக்கும் தாய் பத்திரங்கள் பெரும்பாலும் பின்னோக்கி சென்றால் 1865-யோடு முடிந்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சரி 1865-க்கு முன்னாள் சில பத்திரங்கள் இருக்கிறது என்றால் நன்கு ஆராய்ந்து பார்த்தால் அது குடியானவர்களுடைய பத்திரங்களாக இருக்காது, ஒரு ஜமீந்தாரரோ அல்லது ஒரு இனாம் தாரரின் மேல்வாரி உரிமை சம்மந்தப்பட்ட பத்திரங்களாக இருக்கும். அந்த பத்திரங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் பதிந்தவைகளாக இருக்கும், ஏனென்றால் அப்பொழுது சார்பதிவகம் என்று ஒன்று இல்லவே இல்லை.

1793 முதல் 1865 வரை நீதிமன்றத்தில் இருக்கின்ற திவான் இ அதாலத் என்ற நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் தான் மேற்படி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது. ஆக சார்பதிவகத்திற்கு முன்பு நீதிமன்றம் தான் பதிவு அலுவலகமாக இருந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக 1865-க்கு பிறகு தான் குடியானவர்களூடைய நிலங்களுக்கான பத்திரங்கள் பதியப்பட்டு இருக்கிறது. 1865-க்கு முன்னாடி இருக்கின்ற பத்திரங்கள் ஜமின் மற்றும் இனாம் தாரருடைய மேல்வாரி உரிமை சம்மந்தப்பட்ட பத்திரங்கள் அவை நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது. எனவே நீதி மன்றத்தில் பதியப்பட்ட பத்திரங்கள் எல்லாம் நீதிமன்ற ஆவண காப்பகங்களில் தேடிப்பார்த்து இருக்கின்ற பத்திரங்களின் மெய்த் தன்மையை உறுதிசெய்து கொள்ளலாம்.

1865-க்கு பிறகு ஆன பத்திரங்களை எல்லாம் பத்திரபதிவுத்துறையில் உறுதிசெய்து கொள்ளலாம். இறுதியாக இப்பொழுது இருக்கின்ற பத்திரங்களுக்கெல்லாம் முதல் தாய்பத்திரம் தமிழ்நாட்டில் 1865-ம் ஆண்டு வரை தான் இருக்கும் என்பதை மனதில் வைத்திருங்கள்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

வழக்கஞர் இன்றி, தன் வழக்கிலும் பிறர் வழக்கிலும், மனுதாரருக்காவும் எதிர் மனுதாரருக்காவும் வாதாடலாம்.வழக்கஞர் இன்றி, தன் வழக்கிலும் பிறர் வழக்கிலும், மனுதாரருக்காவும் எதிர் மனுதாரருக்காவும் வாதாடலாம்.

Views: 261 சட்டம் ஒர் அலசல்: 1) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 70 குவிமுச(Cr.P.C.) பிரிவு 302(2) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 1-ன் படி வழக்கறிஞர்

Village council | Complete information about | கிராமசபைக்கூட்டம் பற்றிய முழுமையான தகவல்கள்Village council | Complete information about | கிராமசபைக்கூட்டம் பற்றிய முழுமையான தகவல்கள்

Views: 7 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Filing procedure in civil courts

Filing procedures in civil Courts for plaint| உரிமையியல் நீதி மன்றங்களில் வாதி வழக்கு தாக்கல் செய்யும் முறைகள்Filing procedures in civil Courts for plaint| உரிமையியல் நீதி மன்றங்களில் வாதி வழக்கு தாக்கல் செய்யும் முறைகள்

Views: 17 Presentation of plaint Plaint – வாதி நீதிமன்றத்திற்கு சமர்க்கும் வழக்கை இரண்டு பிரதிகள் தயார் செய்ய வேண்டும். அவை CONQUER SHEET பச்சை தாளில் இருக்கவேண்டும், எந்த நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதாக இருந்தாலுல் ORDER-7,