Legal Notice | What is that? Who can serve? for what | சட்ட அறிவிப்பு என்றால் என்ன? யார் அனுப்பலாம்? எதற்கு அனுபலாம்.
-
by admin.service-public.in
- 77
- வக்கீல் நோடீஸ் என்ற சட்ட அறிவிப்பு என்ற லீகல் நோட்டிஸ்.
- அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் செல்வம் பழனிச்சாமி.
- எண்ணமோ எதோன்னு எல்லாரும் நினைக்கக்கூடிய பலரும் பயப்படக்கூடிய வக்கீல் நோட்டீஸ் என்று சொல்லக்கூடிய வழக்கறிஞர் அறிவிப்பு பத்தி நீங்க ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கலாம்.
- பொதுவாக இதுக்கு லீகல் நோட்டீஸ்னுதான் பேரு, அதாவது சட்ட அறிவிப்பு, வழக்கு தொடுக்குறத்துக்கு முன்னால எதிர் தரப்பினருக்கு இதை நாம அனுப்பினால் அது நமக்கு ரொம்ப ரொம்ப நல்லது.
- அதை பத்திதான் இந்த வீடியோவுல நாம பாக்கப் போறோம்.
- நாம ஒருத்தர் மேலேயோ அல்லது பல பேர் மேலேயோ நீதிமன்றத்துல வழக்கு தொடிகிறதா இருந்தால், அதற்கு முன் கூட்டியே தெரியபடுத்துகிற லட்டர்தான் இந்த நோடீஸ்.
- அவங்களுக்குஅனுப்புற நோட்டீஸ் அந்த வழக்கில் சிவில் வழக்காக இருக்கலாம் அல்லது கிரிமினல் வழக்காக இருக்கலாம்.
- நமக்கு அவங்களால ஏற்பட்டிருக்கிற ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்காக அவங்கள ஒரு செயலை செய்யச் சொல்லி அல்லது ஒரு செயலைச் செய்யக் கூடாது என்று சொல்லி அல்லது அவங்களால செய்யப் போற சில செயல்களால் பின்னால ஏற்படும் பின்விளைவுகள் அறிவுறுத்தி நாம அவங்களுக்கு எழுத்து மூலமாக கொடுக்கிற எச்சரிக்கை தான் இந்த சட்ட அறிவிப்பு.
- சட்ட அறிவிப்பை வழக்கறிஞர் மூலமாக தான் அனுபனுமா?
- அப்படி எல்லாம் ஒன்னுமில்ல, எப்படி எழுதணும் தெரிஞ்சிருந்தா நாமலே இதை எழுதி எதிர் தரப்பினருக்கு அனுப்பலாம்.
- ஆனா ரொம்ப கவனமா எழுதணும் கொஞ்சம் தப்பா எழுதினாலும் அதை வைத்து எதிர்தரப்பு வக்கீல் நம்மள மடகிடுவாறு, நம்ம கேஸ் தோத்துடும்.
- அதனாலதான் பல பேரு எதுக்கு வம்பு நினைச்சுகிட்டு வக்கீல் மூலமாக இந்த நோட்டீசை அனுப்புறாங்க, வக்கீல் மூலமாக அனுபுரதால இதை, வக்கீல் நோட்டீஸ் என்று சொல்கிறார்கள்.
- பொதுவா நாம நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னால், எதிர் தரப்பினருக்கு வழக்கு சம்பந்தமான விபரத்தை எழுத்து மூலமா எழுதி அனுப்பி அவர்களுடைய பதிலை வாங்கிக்கிறது நல்லது .
- நாம எதற்காக இந்த சட்ட அறிவிப்பை, எதிர் தரப்பினருக்கும் அனுப்பனும்?
- எதற்காக அனுபுரோம்னா, எதிர்தரப்பினர் செஞ்ச தப்பை அவர்களுக்கு உணர்த்தி, வருந்துவதற்கும், திருந்துவதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தான்.
- இதைப் பார்த்த உடனே அவங்க நம்மகிட்ட சமாதானத்துக்கு வருவதற்கும் வாய்ப்பு அதிகமா இருக்கு.
- அதனால சில சமயங்களில் நாம வழக்கு தொடுக்க வேண்டிய வேலையே இல்லாமல் போய்விடும் பிரச்சனைகளும் சுமூகமாக முடியும் நமக்கு நிம்மதி கிடைக்கும்.
- இந்த அறிவிப்புல எத்தனை வகை இருக்கு?
- மொத்த ரெண்டு வகை இருக்கு 1 சட்டப்படி கண்டிப்பா கொடுத்தே ஆகணும் என்கிற அறிவிப்பு இன்னொன்னு சும்மா ஒப்புக்கு கொடுக்கவேண்டிய அறிவிப்பு.
- இதுல முதல்ல சொன்ன சட்டப்படியான அறிவிப்பை எதிர் தரப்பினருக்கு கொடுக்கலைன்னா உங்க வழக்கு தள்ளுபடி ஆகுரத்துக்கு அதுவே காரணமாக அமையலாம்.
- ஆனால் இரண்டாவதா சொன்ன அறிவிப்பை கொடுக்காமலும் நீங்க ஒருத்தர் மேல வழக்கு தொடரலாம். இருந்தாலும் சட்ட அறிவுப்பு கொடுகிறது நல்லது.
- சட்ட அறிவிப்பு கண்டிப்பா கொடுத்தே ஆகணும்கிற அறிவிப்பு பத்தி கொஞ்சம் விவரமா சொல்லுங்க.
- இதுல மொத்தம் மூன்று இருக்கு ஒன்னாவது அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு முன்னால் உரிமையியல் நடைமுறை சட்டம் பிரிவு 80 என்பது இன்படி, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளில் உயர் அதிகாரிக்கு நாம அனுப்பவேண்டிய அறிவிப்பு.
- இரண்டாவது சொத்துரிமை மாற்றுச் சட்டம் 106 வது பிரிவின்படி கொடுக்க வேண்டிய அறிவிப்பு அதாவது ஒரு நிலத்தை குத்தகைக்கு கொடுத்த வரும் குத்தகைக்கு அந்த நிலத்தை வாங்கியவரும், அது சம்பந்தமான வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னால், எதிர் தரப்பினருக்கு கொடுக்க வேண்டிய அறிவிப்பு.
- மூன்றாவது ரயில்வே சட்டத்தின் பிரிவு 106ம் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு. அதாவது ரயில்ல நாம பயணம் செய்யும்போது நமக்கோ அல்லது நம்ம பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டால் அல்லது ரயில் மூலம் பார்சல் அனுப்பும் போது அதன் மூலமாக நமக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால், அது சம்பந்தமா ரயில்வே நிர்வாகத்தின் மேல நாம சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன், கண்டிப்பா ரயில்வே சட்டம் பிரிவு 106 ன் படி, சம்பவம் நடந்த ரயில்வே ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட மண்டல மேலாளர் சட்ட அறிவிப்பு ஒன்று அனுப்பனும். இந்த அறிவிப்பை அந்த சம்பவம் நடந்த நாளில் இருந்து, ஆறு மாதங்களுக்கு உள்ள குடுக்கணும். இல்லன்னா ரயில்வே நிர்வாகத்துக்கு எதிராக நாம எடுக்குற எந்த ஒரு நடவடிக்கையும் செல்லாது. எடுத்த எடுப்பிலேயே நீதிமன்றத்தில் நம்ம வழக்கை தள்ளுபடி செய்துடுவாங்க.
- ஒரு சட்ட அறிவிப்புன்னா எப்படி இருக்கணும்?
- இப்படித்தான் ஒரு சட்ட அறிவிப்பு இருக்கணும்னு எந்த ஒரு கண்டிசன் கிடையாது. அதனால நாமளே அதை எழுதலாம், நம்ம பிரச்சனையை நம்மள விட நல்ல வேற யாருக்கும் தெரியாது இருந்தாலும் நமக்கு வந்த சட்ட அறிவிப்பு பதில் நாம கொடுக்கிற தான் இருந்தாலும் வேற யாருக்காவது சட்ட அறிவிப்பு நாம எழுதற தான் இருந்தாலும் கண்டிப்பாக அதுக்கு நமக்கு சட்ட அறிவு வேண்டும்.
- என்னோட வாழ்க்கையில பல சட்ட அறிவிப்புகளை , நானே பதில் கொடுத்திருக்கேன் அதே மாதிரி பலருக்கு சட்ட அறிவிப்பு நானே தயார் செய்ய அனுப்பி இருக்கேன்.
- ஒரு சட்ட அறிவிப்பு அனுப்பணும்னா அது சம்பந்தமா நம்மக்கு என்னென்ன தெரிஞ்சு இருக்கனும்?
- ஒரு சட்ட அறிவிப்பு அனுப்பணும்னா, முதலில் எதிர் தரப்பினர் வீட்டு முகவரி கண்டிப்பாக ஒரு தேவை. அவர் எங்கேயாவது வேலை பார்க்கிற வராக இருக்கலாம், அல்லது அவரது மனைவியும் வேலைக்கு போறவங்களாக இருக்கலாம்,
- அந்த மாதிரியான ஆட்களுக்கு சட்ட அறிவிப்பு அனுப்புனா, டோர் லாகுடுனு, நாம அனுப்புன அறிவிப்பு நமக்கே திரும்பி வந்திடும்.
- உங்களுடைய அறிவிப்பை எதிர் தரப்பினரை சரியான முகவரிக்கு அனுப்பலேன்னா எந்த பிரயோஜனமும் உங்களுக்கு இல்லை.
- இந்த மாதிரி நேரத்துல அவங்க வேலை பாக்குற ஆபீஸ்க்கோ அல்லது தொழிற்சாலைக்கோ உங்களுடைய சட்ட அறிவிப்பு அனுப்பலாம் அப்படி அனுப்பும் போது அவளுடைய செல் ஃபோன் நம்பர் அட்ரஸ் எழுதி அனுப்பினால் ரொம்ப நல்லது.
- அவங்களோட ஈமெயில் அட்ரஸ் தெரிஞ்சிருந்தா அதுக்கு கூட உங்க சட்ட அறிவிப்பு அனுப்பலாம்.
- சட்ட அறிவிப்பு எழுதிர விபரத்தை சுருக்கமா சொல்லுங்க?
- சட்ட அறிவிப்புனு தலைப்பு போட்டுக்கோங்க, அதுக்கு கீழே வலது பக்கம் தேதி எழுதிகோங்க, அறிவிப்பு அனுப்புற உங்க பேரு உங்க அப்பா பேரு மற்றும் உங்களோட வீட்டு முகவரியை முதலில் தெளிவாக எழுதிக் கொங்க.
- அதுக்கப்புறமா எதிர்தரப்பினர் அவர்களோட முகவரியை தெளிவா எழுதணும், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால் அவர்களுடைய பேருக்கு பக்கத்திலேயே ஒன்னு ரெண்டு மூணு நம்பர் குடுக்கணும்.
- அப்புறமா உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள பிரச்சனையை சுருக்கமா அதே நேரத்தில் தெளிவா சொல்லணும் இந்த சட்ட அறிவிப்பு கிடைச்ச பிறகு உடனடியாக என்ன செய்யணும்னு சொல்லணும்.
- அடுத்து அப்படி அவங்க செய்யலைன்னா நீங்க என்ன நடவடிக்கை எடுப்பீங்க என்பதயும் சொல்லணும்அ.
- ஒரு சட்ட அறிவிப்பை கடைசியா எப்பாடு எழுதி முடிக்கணும்?
- உங்களுடைய சட்ட அறிவுப்புக்கு, அவங்க எத்தனை நாளைக்குள் பதில் கொடுக்கணும்னு சொல்லணும்.
- சில பேரு ஒரு வாரத்துக்குள்ள தங்களுடைய சட்ட அறிவிப்புக்கு ஒரு வாரத்துல பதில் கொடுக்கணும்னு குறிப்பிட்டு அனுப்புறாங்க. ஆனால் குறைந்தது 15 நாட்களாவது கொடுக்கணும்னு என்னுடைய அபிப்பிராயம்.
- அவங்க பதில் அறிவிப்பு கொடுக்கலைனா நாம என்ன நடவடிக்கை எடுப்போம் என்ற கதையும் சொல்லணும்.
- சட்ட அறிவிப்பின் தலைப்பில் ,தேதி எழுதி இருந்தாலும் அறிவிப்போடு கடைசியில் இடது பக்கம் உங்களுடைய பெயரையும் தேதியையும் குறிப்பிட்டு, அதற்கு நேரம் வலது பக்கம் உங்களுடைய கையெழுத்தை போடணும். அதுக்கு கீழ ப்ராகட்ல சட்ட அறிவிப்பாளர்கள் என்று எழுதுங்க. இப்படிக்கு அல்லது தங்கள் உண்மையுள்ள அப்படின்னு எழுதக்கூடாது.
- சட்ட அறிவிப்பு யார் யாருக்கெல்லாம் அனுப்பனும்?
- எத்தனை பேர் மேல நீங்க குற்றம் சுமத்தி இருக்கீங்களோ அத்தனை பேரோட முகவரிக்கும் தனித்தனியா அந்த நோட்டீஸ் அனுப்பவும். உங்களோட சட்ட அறிவிப்பை எழுதுவதைவிட டைப்பிங் செய்து அனுப்புவது ரொம்ப நல்லது. சட்ட அறிவிப்பு எப்பயுமே எதிர்தரப்பினர் ஓட முகவரிக்கு பதிவு தபால் மூலமான போறதுதான் நல்லது அப்படி அனுப்பும் போது அக்னாலேஜ் மென்ட் அதையும் சேர்த்து அனுப்பவும்.
- அதான் ஈசியா நம்மளால கோர்ட்டில் அதை நிரூபிக்க முடியும் அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நீங்கள் சட்ட அறிவு பல எதிர் தரப்பினர் மேல சொல்லியிருக்கிற குற்றச்சாட்டு எல்லாத்துக்கும் ஆதாரம் வச்சுக்கோங்க ஆதாரமில்லாமல் யூகத்தின் அடிப்படையில் யாரையும் குற்றம் சொல்லாதீங்க.
- ஏன்னா இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 101 இன்படி அடுத்தவங்க மேல ஒரு குற்றம் சுமத்தினால் அதை நீங்க தான் நிரூபிக்கணும்.
- வேற யாராவது உங்களுக்கு சட்ட அறிவிப்பு அனுப்புனா என்ன செய்யணும்?
- நீங்க கண்டிப்பா பதில் அறிவிப்பு கொடுக்கணும் விளக்கம் கொடுக்க முடியும் என்றாலும்கூட உங்களோட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் மறுக்கிறேன் என்று அவர்களுக்கு பதில் எழுதி அனுப்புங்க ஏன்னா மறுக்கப்படாத சங்கதிகள் ஒப்புக்கொண்ட ஒப்புக்கொள்ளப்பட்ட சங்கதிகளாக நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும்.

🔊 Listen to this வக்கீல் நோடீஸ் என்ற சட்ட அறிவிப்பு என்ற லீகல் நோட்டிஸ். அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் செல்வம் பழனிச்சாமி. எண்ணமோ எதோன்னு எல்லாரும் நினைக்கக்கூடிய பலரும் பயப்படக்கூடிய வக்கீல் நோட்டீஸ் என்று சொல்லக்கூடிய வழக்கறிஞர் அறிவிப்பு பத்தி நீங்க ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கலாம். பொதுவாக இதுக்கு லீகல் நோட்டீஸ்னுதான் பேரு, அதாவது சட்ட அறிவிப்பு, வழக்கு தொடுக்குறத்துக்கு முன்னால எதிர் தரப்பினருக்கு இதை நாம…