சீமைக்கருவேள மரங்களை பொறுத்த வரையில், மிக தவறான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. அரபு நாடுகளில் எப்படி எரிபொருள் பூமிக்கடியில் தொடர்ச்சியாக கிடைக்கிறதோ, அதே போல் பூமிக்கு மேல் தொடர்ச்சியாக கிடைக்ககூடிய ஒரு எரிபோருள்தான், இந்த சீமைக்கருவேள மரங்கள்.
சீமைகருவேள மரங்களை மக்கள் சுலபாக பயன்படுத்தும் விதமாக, எப்படி எரிபொருளாக மாற்றி, மக்களுக்கு சென்றடைய வைக்க வேண்டும் என்ற தெளிவு இல்லாத காரணத்தால், குறிப்பிட்ட மரங்களை பெரிய தொந்தரவாக கருதுகின்றனர்.
தமிழக அரசு எத்தனை ஆண்டுகள், எத்தனை கோடிகள் செலவு செய்தாலும், அவற்றை முற்றிலும் அழிக்க முடியாது. ஆனால், அந்த மரங்கள் ஒரு பொன் முட்டையிடும் வாத்து.
- குறிப்பிட்ட மரங்கள் மூலம் எப்படி அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும், என்பதை புரிந்துகொண்டால், அவற்றை அழிக்க நினைக்கவே மாட்டார்கள்.
- அழித்தே ஆகவேண்டும் என்றால், அறிவுசார் திட்டங்கள் போடவேண்டும். இவர்கள் போடும் திட்டங்களால், பல கோடிகள் செலவு செய்து இயந்திரங்கள் வைத்து அழிக்க அழிக்க முயற்சித்தாலும், முழு வெற்றி பெறவே இயலாது.
- நான் மேலே குறிப்பிட்ட இருவகை யோசனைகளையும், அரசுக்கு தர தயார். கேட்குமா அரசு.