நுகர்வோர் புகார் கொடுப்பது எப்படி?
பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு, நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றங்கள், பொருளின் தயாரிப்பாளர்களிடமிருந்து உரிய நிவாரணம் பெற்றுத் தருவதைப் பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்கிறோம். ஆனாலும், அவை பற்றிய தேவையான விபரங்களை பலர் அறியாததால் நுகவர்வோர் நீதிமன்றங்களில் #புகார் (#Complaint) கொடுப்பதில்லை. எனவே, நுகர்வோர் பாதுகாப்புக்கு அரசு செய்துள்ள சில ஏற்பாடுகள் பற்றி பார்ப்போம்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986:
1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (#Consumer_Protection_Act)நுகர்வோர் என்பவர் யார்? அவருக்குள்ள உரிமைகள் யாவை? நுகர்வோரின் குறைகளைப் போக்க நிறுவப்பட்டுள்ள அமைப்புகள் என்னென்ன? போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
நுகர்வோர் (#Consumer) என்பவர் யார்?
மேலே சொல்லப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நுகர்வோரை இரண்டு வகையாகப் பிரிக்கிறது.
1.பொருளை பொருத்தவரை,
எவர் ஒருவர் மற்றொருவரிடமிருந்தோ அல்லது ஒரு நிறுவனத்திடமிருந்தோ விலை [பணம்] கொடுத்தோ அல்லது கொடுக்க ஒப்புக் கொண்டோ ஒரு பொருளை வாங்குகிறாரோ அவர் அந்தப் பொருளைப் பொருத்தவரை நுகர்வோர் ஆவார். [உதாரணம்: ஒரு வாகனம், தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றை விலை கொடுத்து வாங்குபவர்.]
2.சேவையை பொருத்தவரை:
மற்றவரிடமிருந்தோ அல்லது ஒரு நிறுவனத்திடமிருந்தோ தனக்குத் தேவையான சேவையை அதற்குண்டான தொகையைக் கொடுத்தோ அல்லது கொடுக்க ஒப்புக்கொண்டோ சேவையைப் பெறுபவரும் நுகர்வோராவார். [ஒருவருக்குத் தேவையான வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைக் கட்டிக் கொடுத்த கட்டிட நிபுணரைப் பொறுத்தவரை அந்த வீட்டின் உரிமையாளர் நுகர்வோர் ஆவார்.]
நுகர்வோர் குறைதீர்க்கும் அமைப்புகள்:
மத்திய சட்டமான “நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986” இல் நுகர்வோர் குறை தீர்க்கும் அமைப்புகள் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் என மூன்றடுக்கு முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய அளவில், தேசிய ஆணையம் எனப்படும், “தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் குழு அல்லது அமைப்பு” செயல்படுகிறது. ரூபாய் ஒரு கோடிக்கு மேல் நிவாரணம் அல்லது நஷ்டஈடு கோரும் புகார்களை இந்த அமைப்பு விசாரிக்கும்.
மாநில அளவில் மாநில ஆணையம் “மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் குழு” ரூபாய் 20 லட்சத்துக்கு மேற்பட்டு, ரூபாய் ஒரு கோடிக்கு உட்பட்டு நிவாரணம் கோரும் புகார்களை விசாரிக்கும்.
மாவட்ட அளவில், மாவட்ட பொதுமன்றம் எனப்படும் “மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் குழு” ரூபாய் 20 லட்சத்துக்கு உட்பட்டு நிவாரணம் கோரும் புகார்களை விசாரிக்கும்.
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சபை – தமிழ்நாடு:
தமிழ்நாட்டைப் பொருத்தவரை இம்மூன்று அமைப்புகள் அல்லாமல் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சபை [“District Consumer Protection Council”] என்ற ஒரு அமைப்புத் தனியாக தமிழக அரசால், நுகர்வோர் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு அங்கமான இந்த அமைப்பு, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேரடி தலைமையின் கீழ் இயங்குகிறது. இதனுடைய முக்கிய குறிக்கோளே, பொருள் வாங்கியதிலோ அல்லது சேவையைப் பெறுவதிலோ பாதிக்கப்பட்டு புகார் செய்யும் நுகர்வோருக்கு உதவுவதுதான்.
கொடுக்கப்படும் புகார்களின் அடிப்படையில் நுகர்வோருக்குக் கொடுத்த குறையுள்ள பொருளை மாற்றி, வேறு புதிய பொருளை கொடுக்கவோ அல்லது விலையாகக் கொடுத்தப் பணத்தை திரும்பப் பெற்றுக்கொடுக்கவோ இந்த அமைப்பு முயற்சிக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அமைப்பு தீர்வு காணாவிட்டால் மாவட்ட ஆட்சித்தலைவர் [கலெக்டர்] தலையிட்டு நுகர்வோரின் பிரச்சனையை தீர்த்து வைப்பார்.
நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தில் பதிவு செய்யப்படும் பலவிதமான புகார்கள்:
- ஒரு கடையில் வாங்கிய பொருள் தரக்குறைவாக இருத்தல்;
- கடைக்காரர் செய்த முறை தவறிய செயலால் நுகர்வோருக்கு இழப்பு அல்லது கஷ்டம் நேரிடுதல்;
- நுகர்வோருக்கு கொடுக்கப்பட்டச் சேவை [Service] குறையுள்ளதாகவும், அவருக்கு திருப்தி அளிக்காததாகவும் இருத்தல்;
- பொருளில் குறிப்பிட்டுள்ள விலையைக் காட்டிலும் அதிகமாக, விற்பனை செய்பவர் கேட்டல்;
- குறிப்பிட்டப் பொருளின் விலை, அரசால் அல்லது சட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட அதிகமாக இருத்தல்;
- பொதுமக்களுக்குத் தகுந்தப் பாதுகாப்பு இல்லாமல் விற்கப்படும் அபாயம் விளைவிக்கக் கூடிய பொருள்கள்.
நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் [Consumer Dispute Redressal Forum] புகார் கொடுப்பது எப்படி?
மேலே கூறப்பட்ட இனங்களில் எவற்றிலாவது, எந்தவகையிலாவது பாதிக்கப்பட்ட நபர், நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் நேரடியாக புகார் கொடுக்கலாம். அவ்வாறு எந்த ஒரு வியாபாரி அல்லது நிறுவனத்தின் மீது புகார் கொடுக்கும் நுகர்வோர்,
தங்களுடைய புகாரை ஒரு சாதாரண வெள்ளைக் காகிதத்தில் எழுதி குறை தீர்க்கும் அமைப்பில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம்.
புகார் மனு கொடுப்பதற்கு முத்திரைத்தாள் தேவையில்லை.
அவ்வாறு புகார் கொடுக்கும் நுகர்வோர் தரக்குறைவான பொருளை, அவர்கள் வாங்கியதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக புகார் கொடுப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கொடுக்கப்பட வேண்டிய தகவல்களும், ஆவணங்களும்:
கொடுக்கப்பட்ட புகார் மீது, குறை தீர்க்கும் மன்றம், தக்க நடவடிக்கை எடுக்க ஏதுவாக, அவர்களுக்குத் தேவையான கீழ்க்கண்ட விவரங்களையும், ஆவணங்களையும் எழுத்து மூலம் புகார் கொடுப்பவர்கள் அளிக்க வேண்டும்.
எழுத்து மூலம் கொடுக்கப்படும் புகாரில் நுகர்வோரின் சரியான பெயர் மற்றும் முகவரி இடம்பெற வேண்டும்.
எந்தவொரு வியாபாரி அல்லது நிறுவனத்திற்கு எதிராக புகார் கொடுக்கப்படுகிறதோ அவருடைய பெயர் மற்றும் முகவரி கொடுக்கப்பட வேண்டும்.
தரக்குறைவான பொருள் வாங்கப்பட்டத் தேதி அல்லது திருப்தி அளிக்காத சேவை பெறப்பட்டத் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட வேண்டும்.
அந்தப் பொருளை வாங்கவோ அல்லது சேவையை பெறவோ செலவிடப்பட்டத் தொகை குறிப்பிடப்பட வேண்டும்.
அத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களான பட்டி [Bill] அல்லது இதர ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
புகாரில் சம்பந்தப்பட்ட பொருள் அல்லது சேவையைப் பற்றிய குறிப்பிடத்தக்க விபரங்கள் அல்லது தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும்.
புகாரின் விபரம் பற்றி தெளிவான விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். அத்தகைய புகார்கள் கீழ்க்கண்ட காரணங்களால் இருக்கலாம்:
- வியாபாரியின் முறையற்ற அல்லது தவறான செய்கை;
- தரக்குறைவான பொருள் கொடுத்தல்;
- சேவை அளித்ததில் உள்ள குறைபாடு;
- உரிய விலையை விட அதிகமாகக் கேட்டல்.
நுகர்வோருக்கு கிடைக்கக்கூடிய நிவாரணம்:
குறை தீர்க்கும் மன்றம் புகாரின் தன்மையை ஆராய்ந்து, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு உட்பட்டு கீழ்க்கண்ட நிவாரணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க உத்தரவிடும்.
- விற்கப்பட்டத் தரக்குறைவான பொருளை முழுமையாகத் திரும்பப் பெற்று வேறு புதிய பொருளைக் கொடுத்தல்.
- பழுதுபட்ட பாகத்தை மட்டும் மாற்றிக் கொடுத்தல்.
- பொருளுக்குக் கொடுக்கப்பட்ட விலைத் தொகையை திரும்ப கொடுத்தல்.
- தரக்குறைவான பொருளை பெற்றதால் நுகர்வோருக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் கஷ்டங்களுக்குப் பொருளை விற்ற வியாபாரி நிவாரணத் தொகை வழங்குதல்.
- நுகர்வோருக்கு அளிக்கப்பட்ட சேவையில் உள்ள குறைபாடுகளைக் களைதல்.
- பொருளுக்கு அதிக விலை வாங்கிய வியாபாரி, அவ்வாறு அதிக விலை வாங்குவதை நிறுத்தச் செய்தல்.
- தகுந்த பாதுகாப்பு இல்லாமல் விற்கப்படும் அபாயகரமான பொருள்களை நீக்கி விடுதல்.
- புகார் கொடுப்பதற்கு நுகர்வோர் செய்த செலவுத் தொகையை வழங்குதல்.
நுகர்வோர் குறைதீர்க்கும் குழுவின் முகவரி [சென்னை]
மாநில அளவிலான, மாநில நுகர்வோர் குறை தீர்க்கும் குழு மற்றும் சென்னையின் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் குழுக்களின் முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- தலைவர், மாநில நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம்,
எண்.212, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை- 600 004. - தலைவர், மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் [சென்னை-தெற்கு]
எண்.212, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை- 600004. - தலைவர், மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் [சென்னை-வடக்கு]
எண்.212, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை- 600004.
புகார் கொடுக்கும் போது செலுத்த வேண்டிய கட்டணம்:
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986 ஆனது கொண்டு வரப்பட்டபோது புகார் கொடுப்பதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால், பின்னர் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தங்களின்படி புகார் கொடுக்கும்போது செலுத்தவேண்டிய கட்டணம் பின்வருமாறு:-
மாவட்டக் குறை தீர்க்கும் நீதிமன்றங்களில் கட்டணம்:
- ரூபாய் ஒரு லட்சம் வரை நிவாரணம் கோருபவர்கள் செலுத்தவேண்டிய கட்டணம் ரூ.
- ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை ரூ.
- ரூபாய் 5 லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை ரூ.
- ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 20 லட்சம் வரை ரூ.
மாநிலக் குறை தீர்க்கும் நீதிமன்றங்களில்:
- ரூபாய் 20 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை ரூ.
- ரூபாய் 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை ரூ.
தேசிய கமிஷனில்:
- ரூபாய் ஒரு கோடிக்கு மேல் ரூ.
(வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு விலக்கு உண்டு.)
கட்டணத் தொகை, புகார் கொடுக்கும்போது செலுத்தப்பட வேண்டும். அந்த கட்டணத் தொகையானது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், நீதிமன்ற பதிவாளர் என்ற பெயரில் எடுக்கப்பட்ட குறுக்குக் கோடிட்ட கேட்பு வரைவோலையாக [Crossed Demand Draft] இருக்க வேண்டும்.
புகார் கொடுப்பதற்கு வழக்கறிஞர் தேவையா?
நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார் கொடுப்பவர்கள் ஒரு வழக்கறிஞர் மூலம் அதனை செய்தால், அவர்களுக்கு உதவிகரமாக இருந்தாலும், வழக்கறிஞர் மூலம் தான் புகார் கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
தமிழகத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் தொலைபேசி எண்
மெயில் ஐடி :-
1 STATE CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION
Chennai Registrar,
044-25340040 044-25340050 tn-sforum@nic.in
மற்ற மாவட்டங்கள்:
பெரும்பாலான மாவட்டங்களில் நுகர்வோர் குறைதீர்க்கும் குழுக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திலேயே செயல்படும். ஒரு சில மாவட்டங்களில் வேறு இடங்களில் அவர்களின் முகவரியை ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்தே பெறலாம்.
2 Circuit Bench of Madurai Assistant Registrar,
0452 -2533120 scdrcmaduraibench@gmail.com
DISTRICT CONSUMER DISPUTES REDRESSAL FORAM (#DCDRF)
3 Chengalpattu DCDRF
044- 27428832
9444051772
chengalpattu.dcdrf@gmail.com
4 Chennai (North) DCDRF
044 – 25340083
9444206369
chennai.north@gmail.com
5 Chennai (South) DCDRF
044 – 25340065
9380101110
chennaisouth.dcdrf@gmail.com
6 Coimbatore DCDRF
0422 – 2300152
9942332340
coimbatore.dcdrf@gmail.com
7 Cuddalore DCDRF
04142 – 295926
cuddalore.dcdrf@gmail.com
8 Villupuram DCDRF (Combined with Cuddalore)
04142 – 295926
villupuram.dcdrf@gmail.com
9 Dindigul DCDRF
0451 – 2433055
9789377528
dindigul.dcdrf@gmail.com
10 Erode DCDRF
0424 – 2250022
erode.dcdrf@gmail.com
11 Karur DCDRF
04324 – 260193
9894291990
karur.dcdrf@gmail.com
12 Madurai DCDRF
0452 – 2533304
madurai.dcdrf@gmail.com
13 Nagapattinam DCDRF
04365 – 247668
9443021244
nagai.dcdrf@gmail.com
14 Nagercoil DCDRF
04652 – 229683
nagercoil.dcdrf@gmail.com
15 Namakkal DCDRF
04286 – 224716
9445675801
9944622172
namakkal.dcdrf@gmail.com
16 Perambalur DCDRF
04328 – 276700
perambalur.dcdrf@gmail.com
17 Salem DCDRF
0427 – 2413279
9443106811
salem.dcdrf@gmail.com
18 Sivagangai DCDRF
04575 – 241591
9994444202
sivaganga.dcdrf@gmail.com
19 Ramanathapuram DCDRF (Combined with Sivagangai)
04575 – 241591
ramanathapuram.dcdrf@gmail.com
20 Virudhunagar Dist. @ Srivilliputhur
04563 – 260380
virudhunagar.dcdrf@gmail.com
21 Thanjavur DCDRF
04362 – 272 507
thanjavur.dcdrf@gmail.com
22 Pudukkottai DCDRF (Combined with Thanjavur)
04362 – 272 507
pudukkottai.dcdrf@gmail.com
23 The Nilgiris DCDRF
0423 – 2451500
nilgiris.dcdrf@gmail.com
24 Theni DCDRF
04546 – 269801
theni.dcdrf@gmail.com
25 Tiruchirapalli DCDRF
0431 – 2461481
trichy.dcdrf@gmail.com
26 Tirunelveli DCDRF
0462 – 2541134
tirunelveli.dcdrf@gmail.com
27 Tuticorin DCDRF (Combined with Tirunelveli)
0462 – 2572134
thoothukudi.dcdrf@gmail.com
28 Tiruvallur DCDRF
044 – 27664823
thiruvallur.dcdrf@gmail.com
29 Tiruvarur DCDRF
04366 – 224353
tiruvarur.dcdrf@gmail.com
30 Vellore DCDRF
0416 – 2254780
9994444202
vellore.dcdrf@gmail.com
31 Thiruvannamalai DCDRF (Combined with Vellore)
04175 – 232395
tiruvannamalai.dcdrf@gmail.com
32 Krishnagiri DCDRF
04343 – 225223
9940054882
krishnagiri.dcdrf@gmail.com.
