PIDPI (Public Interest Disclosure and Protection of Informers) மூலம் எப்படி புகார் கொடுக்கலாம்.
- யாருக்கு புகார் கொடுக்கலாம்?
மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், அரசு துறைகள் போன்றவற்றில் ஊழல் / முறைகேடு நடந்தால் → மத்திய விழிப்புணர்வு ஆணையம் (CVC), நியூடெல்லி க்கு புகார் அனுப்பலாம்.
மாநில அரசு தொடர்பான புகார் என்றால், அந்த மாநிலத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
CVC இணையதளம் மூலமாக தங்கள் அனுப்பினால் அந்த மனு சம்பந்தப்பட்ட மாநில CVC அலுவலருக்கு மாற்றம் செய்யப்படும்
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அவர்களின் முகவரி
இயக்குனர் அவர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை,
293, எம்.கே.என் சாலை, அலந்தூர், சென்னை-600016.
- புகார் கொடுக்கும் முறை.
கடிதம் (Letter) மூலமாக அனுப்ப வேண்டும்.
Website link: https://portal.cvc.gov.in/
கடிதத்தில் குறிப்பிட வேண்டியது:
உங்கள் பெயர், முகவரி (அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்).
குற்றச்சாட்டு தொடர்பான முழு விவரங்கள் (எந்த அலுவலகம், எந்த அதிகாரி, என்ன தவறு நடந்தது என்பதையும் விளக்கம்).
சான்றுகள் இருந்தால், அவற்றையும் சேர்க்கலாம்.
- எங்கு அனுப்ப வேண்டும்? 7598671737
மத்திய விழிப்புணர்வு ஆணையர் (Central Vigilance Commission),
Satarkta Bhavan,
GPO Complex, Block A, INA,
New Delhi – 110023.
கடிதம் அனுப்பும்போது, வெளிப்புறத்தில் (envelope-இல்):
“PIDPI Complaint” என்று எழுத வேண்டும்.
- புகார் கொடுத்த பின் என்ன ஆகும்?
CVC அந்த புகாரை ஆய்வு செய்து, சரியான துறைக்கு விசாரணைக்காக அனுப்பும்.
புகாராளரின் பெயர் எங்கும் வெளியிடப்படாது (அடையாளம் காப்பாற்றப்படும்).
விசாரணை முடிந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்