Original Title : #humanrights | Hon’ble District Judge Mr.Murugan MA.,LL.B, Kuzhithurai | Win Law Chamber
Courtesy : WIN LAW CHAMBER
பகுதி 1: மனித உரிமை என்றால் என்ன?
- மனிதர்கள் நாகரீக வாழ்க்கை வாழ அவசியமான அடிப்படை உரிமைகள் தான் மனித உரிமைகள்.
- உணவு, உடை, இருப்பிடம் — ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை தேவைகள்.
- மனித உரிமை என்பது மனிதனின் உயிர், சுதந்திரம், கண்ணியம், நற்பெயர் ஆகியவற்றை பாதுகாக்கும் உரிமை.
பகுதி 2: மனித உரிமைகள் ஏன் அவசியம்?
- ஒருவரின் உரிமையை மற்றொருவர் மதிக்க வேண்டும்.
- சமுதாயத்தில் அமைதி நிலைக்க மனித உரிமைகள் அவசியம்.
- நாகரிக சமூகத்திற்கு செல்ல மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- இதற்காகத்தான் உலகம் முழுவதும் டிசம்பர் 10 – உலக மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது.
பகுதி 3: இந்திய அரசியலமைப்பில் உள்ள மனித உரிமைகள்
இந்திய அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மனித உரிமைகளே:
- பேச்சு சுதந்திரம்.
- கருத்து வெளியிடும் உரிமை.
- கூட்டம் நடத்தும் உரிமை.
- இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யும் உரிமை.
- தொழில் தேர்வு செய்து செய்யும் உரிமை.
இவை மீறப்படும்போது அதுவே மனித உரிமை மீறல்.
பகுதி 4: சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள்.
சில உரிமைகள் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்:
- திருமணம் செய்யும் உரிமை.
- குழந்தை பெறும் உரிமை.
- வீடு கட்டி வாழும் உரிமை.
- இறந்தவரின் இறுதி சடங்குகள் செய்யும் உரிமை.
இவற்றை அரசு சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். கோர்ட் செயல்படுத்தக்கூடியதாக இருந்தால் மட்டுமே அது உண்மையான உரிமை.
பகுதி 5: உயிர் வாழும் உரிமை (Right to life)
- இது மிக முக்கியமான மனித உரிமை.
- இந்திய அரசியலமைப்பு article 21-ல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
- யாரும் ஒருவரின் உயிரை சட்டத்திற்கு புறம்பாக பறிக்க முடியாது.
- சுய பாதுகாப்பு (Self Defence) கூட உயிர் உரிமையின் ஒரு பகுதியாகும்.
பகுதி 6: சுதந்திர உரிமை (Liberty)
சுதந்திரம் அடங்கும்:
- கருத்துரிமை.
- பயண சுதந்திரம்.
- அரசாங்கத்தைப் பற்றி கருத்து கூறுதல்.
- சமூக வலைத்தளங்களில் பதிவிடுதல் முதலியவை.
ஒருவரின் கண்ணியம் அல்லது நற்பெயரைக் கெடுப்பது மனித உரிமை மீறல்.
பகுதி 7: கண்ணியம் / நற்பெயர் (Defamation)
- தவறான தகவல் கூறி ஒருவரின் நற்பெயரைக் கெடுப்பது குற்றம்.
- இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499, 500 — Defamation.
பகுதி 8: நாள் உண்மையில் நடக்கும் மனித உரிமை மீறல். உதாரணம்.
ஒரு மூதாட்டி பஸ்ஸில் இறங்க வேண்டிய இடத்தில் இறக்காமல் ஓட்டிச் சென்றால்:
- அது பயண உரிமை மீறல்.
- அரசு அதிகாரி கடமை செய்ய தவறினால் அதுவும் மனித உரிமை மீறல்.
பகுதி 9: அரசு அலுவலகங்களில் மனித உரிமை மீறல்கள்.
மக்கள் அரசு அலுவலகங்களில் பெற வேண்டிய சேவைகள்:
- பிறப்பு/இறப்பு சான்றிதழ்.
- பட்டா பெயர் மாற்றம்.
- குடியுரிமை, பத்திர பதிவு.
அதில்: - அலட்சியம்.
- தாமதம்.
- லஞ்சம் கேட்பது.
இவையெல்லாம் மனித உரிமை மீறல்கள்.
பகுதி 10: உணவு, ஆரோக்கியம் தொடர்பான மீறல்.
- கலப்பட உணவு விற்பனைசெய்யதால், ஆரோக்கிய உரிமை மீறல்.
- ரேஷன் கடையில் அளவு குறைத்து கொடுத்தாள் அதுவும், உரிமை மீறல்.
பகுதி 11: நில அபகரிப்பு.
- வீடு மற்றும் நிலத்தில் வாழும் உரிமை உள்ளது.
- நில அபகரிப்பு கூட மனித உரிமை மீறல்.
பகுதி 12: மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் 1993.
- இந்தியாவில் 1993-ல் இயற்றப்பட்டது.
- 1994-ல் நடைமுறைக்கு வந்தது.
- மனித உரிமை ஆணையங்கள் உருவாக்கப்பட்டன.
- தேசிய மனித உரிமை ஆணையம், டெல்லி.
- மாநில மனித உரிமை ஆணையம், ஒவ்வோர் மாநிலத்திலும்,
பகுதி 13: மாவட்ட மனித உரிமை நீதிமன்றம்
- சட்டப்பிரிவு 30ன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனித உரிமை நீதிமன்றம்.
- இந்த நீதிமன்றம் Principal District Court மூலமாக செயல்படுகிறது.
- நேரடியாக அங்கே புகார் கொடுக்க முடியாது.
- முதலில் Judicial Magistrate Court-க்கு புகார் மனு கொடுக்க வேண்டும்.
பகுதி 14: யார் மனித உரிமையை மீறுகிறார்கள்?
- ஒருவரின் உரிமையை மற்றொருவர் மீறுகிறார்.
- மனிதர்கள் ஒழுக்கமாக இருந்தால் உரிமை மீறல்கள் நடக்காது.
- குடும்பத்தில் கூட:
- தந்தைக்கு இருக்கும் கடமைஎன்பது மனைவி, குழந்தைக்கான உரிமை.
- ஒருவர் கடமை செய்ய தவறினால், மற்றவரின் உரிமை பாதிப்பு அடைகிறது .
பகுதி 15: தவறான அரசு உத்தரவு. உதாரணம்.
ஒரு கலெக்டர் “முருகன் என்ற பெயருடையவர்கள் யாரும் YouTube பார்க்கக்கூடாது” என்று உத்தரவு விட்டால்:
- அது செல்லாது.
- எல்லோருக்கும் இருக்கும் உரிமையை தனிப்பட்ட மனிதருக்கு மறுப்பது சட்ட விரோதம்.
- இது மனித உரிமை மீறல்.
பகுதி 16: நம் கலாச்சாரமும் மனித உரிமைதான்.
- திருக்குறள்.
- ஆத்திச்சூடி.
இவற்றில் மனித உரிமைக்கு அடிப்படையாக இருக்கும் நல்லொழுக்கக் கருத்துக்கள் உள்ளன.
“தீவினை அகற்று” – பிறருக்கு தீங்கு செய்யாதிரு.
பகுதி 17: மனித உரிமை ஹெல்ப்லைன் எண்
தமிழ்நாடு மனித உரிமை ஆணைய ஹெல்ப்லைன்:
