GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized பெண்கள் கணவனிடமிருந்து பெரும் ஜீவனாம்சம் பற்றிய விளக்கம்.

பெண்கள் கணவனிடமிருந்து பெரும் ஜீவனாம்சம் பற்றிய விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

திருமணமான பெண்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்று ஜீவனாம்சம் இந்தியா முழுக்க இதுவரை ஜீவனாம்சம் தொடர்பான லட்சக்கணக்கான வழக்குகள் தீர்ப்பு கூறப்பட்டும் இன்னும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையிலும் இருக்கின்றன.

ஜீவனாம்சம் பெண்ணின் சட்ட உரிமை!

ஒரு பெண் திருமணமாகி, கணவருடன் சில நாள்களே வாழ்ந்திருந்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறும் போதும் கணவரிடமிருந்து மனைவி நிரந்தர ஜீவனாம்சம் (Alimony) கேட்கலாம் அது அவரின் சட்டஉரிமை. கணவருடன் தன் வாழ்க்கையைப் பங்கிட்டுக்கொண்டது குடும்பம் மற்றும் வேலை என இரட்டைப் பயணம் செய்த நிலை கணவரைப் பிரிந்த பிறகான பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தேவை உள்ளிட்ட காரணங்களுக்காக கணவரிடமிருந் து ஜீவனாம்சம் கேட்க ஒரு பெண் தகுதி பெறுகிறார் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்திலும் ஒரு பெண் ஜீவனாம்சம் கோர முடியும் ஒருவேளை விவாகரத்து கோரிய வழக்கில் தீர்ப்பு வரும்போது ஜீவனாம்சம் கேட்காமல் இருந்திருந்தாலும் அதற்கு பிந்தைய காலத்தில் தேவை ஏற்பட்டால் தன் முன்னாள் கணவரிடமிருந்து அந்தப் பெண் ஜீவனாம்சம் கேட்க முடியும்.

யாரெல்லாம் ஜீவனாம்சம் கேட்கலாம்?

வருமானம் இல்லாமல் இருப்பவர், சம்பாதிப்பதற்கான நிலையோ, ஆற்றலோ இல்லாமல் இருப்பவர்.

தன் சம்பாத்தியம் தன் தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்குப் போதாத நிலையில் இருப்பவர்.

தான் சம்பாதிக்கும் வருமானம், தனக்கும் தன் வளர்ப்பில் உள்ள குழந்தைகளின் தேவைக்கும் போதவில்லை என்ற நிலையில் இருப்பவர்கள். தனக்கு வேண்டாம் ஆனால் தன் வளர்ப்பில் உள்ள தங்களின் குழந்தையின் தேவைக்கு மட்டும் ஜீவனாம்சம் கேட்பவர்கள்.

யாரெல்லாம் ஜீவனாம்சம் கேட்க முடியாது?

கணவரின் மாத சம்பளத்தை விட, அதிக சம்பளம் பெறும் பெண்கள் ஜீவனாம்சம் பெற முடியாது. தேவைப்பட்டால் கணவரின் சம்பளத்தில் ஒரு பகுதியைத் தன் வளர்ப்பில் உள்ள தங்கள் குழந்தையின் தேவைக்காகக் கேட்க முடியும்.

கணவரைவிட சமூக அந்தஸ்தில் உயர்வுடன் உள்ள பெண்கள்.

கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று, மற்றொரு திருமணம் செய்துகொள்ளத் தீர்மானிக்கும் பெண்கள். கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்று வந்த நிலையில் ஒரு பெண் மற்றொரு திருமணம் செய்துகொண்டால் அவர் தன் முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமையை உடனடியாக இழந்துவிடுவார்.

விவாகரத்துக்கு முன்பு அல்லது பின்பு சட்டத்துக்குப் புறம்பான தவறான உறவு முறையில் இருந்தது நிரூபிக்கப்பட்டால் அவர் தன் கணவரிடம் ஜீவனாம்சம் கோர முடியாது.

ஜீவனாம்சத் தொகையாக எவ்வளவு கேட்கலாம்?

இந்தியாவில் 1976-ம் ஆண்டுக்கு முன்பு வரை அதிகபட்சமாக மாதம்தோறும் ரூ.500 மட்டுமே ஜீவனாம்சம் பெறும்படியாகக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் இருந்தது 1976-ம் ஆண்டு ஜீவனாம்ச சட்டம் திருத்தியமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நாடு முழுக்க பல நீதிமன்றங்களிலும் ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளில் அதிகபட்சத் தொகை குறித்து மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன அதில், கணவரின் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்குவரை அதிகபட்ச ஜீவனாம்சமாக வழங்கலாம் என பல வழக்குகளில் மாறுபட்ட தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன இந் நிலையில், 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி கூறிய ஒரு தீர்ப்பில் கணவரின் கைக்கு வரும் சம்பளப் பணத்தில் 25% வரை நிச்சயமாக மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்கலாம் என்று உறுதியாகக் கூறப்பட்ட தீர்ப்பு முக்கியமானது.

ஜீவனாம்சத்தில் இரண்டு வகை இடைக்கால ஜீவனாம்சம், நிரந்தர ஜீவனாம்சம் என இரண்டு வகையான ஜீவனாம்சம் வழங்கும் முறைகள் நடைமுறையில் உள்ளன.

இடைக்கால ஜீவனாம்சம்

நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஜீவனாம்ச வழக்கு முடியும்வரை, இந்த இடைக்கால ஜீவனாம்சத்தைத் தன் கணவரிடமிருந்து ஒரு பெண் பெறலாம். ஒருகட்டத்தில் இருவரும் உடன்பட்டு ஒப்புக்கொண்ட நிரந்தர ஜீவனாம்சத் தொகையின் அடிப்படையில் தம்பதியின் விவாகரத்து வழக்கின் இறுதித் தீர்ப்பு கூறப்படும் அத்துடன் வழக்கும் முடிவுக்கு வரும்.

நிரந்தர ஜீவனாம்சம்

தம்பதியின் திருமண உறவு முறியும்போது இறுதித் தீர்ப்பு கூறப்படும் போது நிரந்தர ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிடும் இனி மேல் வழக்கை நடத்த வேண்டாம் மீண்டும் மீண்டும் ஜீவனாம்சம் கோர கொடுக்கத் தேவையில்லை முற்றாகத் திருமண உறவை முடித்துக்கொள்ளலாம் என ஒரு தம்பதி முடிவெடுக்கும்போது, ஒரு தவணை நிரந்தர ஜீவனாம்ச
(One time payment) முடிவைத் தேர்ந்தெடுக்கலாம் அதை ஏற்று கொண்டு நீதிமன்றம் வழக்கை முடித்துவைக்கும் முடிவெடுக்கப்பட்ட ஜீவனாம்சத் தொகை சில ஆயிரங்களில் இருந்து பல கோடிகள் வரை இருக்கலாம் பணமாக இல்லாமல் அசையும்/அசையா சொத்துகளையும் கூடக் கணவரிடமிருந்து ஒரு பெண் ஜீவனாம்சமாகப் பெறலாம் பிறகு இருவரும் தங்களின் முடிவுப்படி அடுத்தகட்ட வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கலாம் இதற்குப் பின்னர் ஒரு பெண் முன்னாள் கணவரிடம் மீண்டும் ஜீவனாம்சம் கேட்க முடியாது இன்றைய நிலையில் விவாகரத்து வழக்குகளில் இத்தகைய நிரந்தர ஜீவனாம்ச நடைமுறையையே பெரும்பாலான தம்பதிகள் தேர்ந்தெடுக்கின்றனர்.

நிரந்தர ஜீவனாம்சத்தில் மற்றொரு முறை மாதாந்திர ஜீவனாம்சம் இதன் படி விவாகரத்துக்குப் பிறகு ஒரு பெண் தன் முன்னாள் கணவரிடமிருந்து இருவரும் ஒப்புக் கொண்டபடி மாதம் தோறும் ஒரு தொகையைப் பெறமுடியும் விலை வாசி உயர்வு மற்றும் வாழ்க்கைத் தேவைகள் அதிகரிக்கும் நிலையைப் பொறுத்து ஜீவனாம்சத் தொகையில் குறிப்பிட்ட உயர்வு வேண்டும் எனவும் எதிர்காலத்தில் நீதிமன்றம் மூலமாகக் கேட்கலாம் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றது முதல், ஜீவனாம்சத்துக்கு உரிய வரையறைகளுடன் மற்றொரு திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்ந்துவரும் ஒரு பெண், தனது ஆயுள்காலம் முழுக்க அது வரை முன்னாள் கணவருக்கு வருமானமும் சம்பாதிக்கும் திறனும் இருக்கும்பட்சத்தில் அவரிடம் நிரந்தர மாதாந்திர ஜீவனாம்சம் பெறலாம்.

கணவரின் சம்பளத்தை மனைவி தெரிந்து கொள்ளலாம்!

கணவர் மற்றும் மனைவியின் மாதச் சம்பளம், சமூக அந்தஸ்து, அசையும் அசையா சொத்துகள், வருங்காலத்தில் வருமானம் ஈட்டும் திறன் potential income வழக்கின் தன்மை ஆகியவற்றை பொறுத்துத்தான் நிரந்தர ஜீவனாம்சத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது பல ஆண்கள் தங்களின் மாதச் சம்பளத்தைக் குறைத்துக்கூறி ஜீவனாம்ச தொகை யைக் குறைத்து வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கூறிய பல வழக்குகளும் உண்டு அதனால், கணவரின் வருவான வரித்தாக்கல் ஆவணங்களை அவர் மனைவி கேட்டுப் பெறலாம் வருமானவரித் தாக்கலிலும் பலர் உண்மையான வருமான விவரங்களை சொல்வதில்லை அதையும் நீதிமன்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளும் அதனால் நீதிமன்றத்தின் மூலமாக அதற்கான மனுவைத் தாக்கல் செய்து கணவர் வேலை செய்யும் நிறுவனத்திடம் அவரின் சம்பளச் சீட்டை (Pay Slip) கேட்டும், கணவர் பெறும் உண்மையான சம்பளத்தை அவர் மனைவி அறிந்து கொள்ள முடியும் பிறகு உரிய ஜீவனாம்சத்தைக் கேட்டுப் பெறலாம்.

மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் இப்போது கூறியுள்ள தீர்ப்பின்படி, நிரந்தர (மாதாந்திர) ஜீவனாம்சம் பெற்றுவரும் ஒரு பெண் முன்னாள் கணவராக இருப்பினும் அவரின் மாதச் சம்பள விவரங்களை நிச்சயமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

பெண்கள் முன்வர வேண்டும்!

கீழமை நடுவர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட விவாகரத்து, ஜீவனாம்ச வழக்குகளில் அங்கு கூறப்பட்ட தீர்ப்புக்குப் பிறகு உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரைகூட மேல்முறையீடு சென்று இறுதித் தீர்ப்பு பெறப்படுகின்றன ஒரு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்வது அவரவர் விருப்பம் ஆனால் ஒரு நீதிமன்றம் கூறியிருக்கும் ஜீவனாம்சத் தொகையை மேல் முறையீட்டுத் தீர்ப்பு வரும்வரை வழங்க வேண்டும் (தடை ஆணை இல்லாதபோது).

விவாகரத்துடன் ஜீவனாம்சம் பெறுவது தொடர்பான வழக்கில், தம்பதி இருவரும் மனமொத்து சுமுக முடிவுக்கு வந்தால் அதிகபட்சம் ஆறு மாத காலத்திலேயே நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படும் இருதரப்பும் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அதிகபட்சமாக 5 – 10 ஆண்டுகளுக்கு மேலாகக்கூட இதுபோன்ற வழக்குகள் நடைபெறுகின்றன இந்தக்கால கட்டங்களில் ஜீவனாம்சத் தொகையை முடிவுசெய்ய இரு தரப்பிலும் பல கட்டப்பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன. தங்களுக்கு உரிய ஜீவனாம்சத்தைப் பெற பெண்கள் சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதில் தயக்கம்காட்டக் கூடாது வழக்கைத் தொடர்ந்து நடத்தி, தன் சட்ட உரிமையை உறுதி செய்வதில் சுணக்கம் காட்டக் கூடாது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பக்கத்து வீட்டுக்காரரின் மரங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பது எப்படி?பக்கத்து வீட்டுக்காரரின் மரங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

குற்றம் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில் உரிமையியல் புகார்களை காவல்துறை விசாரிக்கலாம்.குற்றம் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில் உரிமையியல் புகார்களை காவல்துறை விசாரிக்கலாம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 காவல் நிலையத்தில் ஒருவர் கொடுக்கும் புகார் அல்லது மனு குற்றம் சம்மந்தப்பட்டதாக இல்லாமல் அது திருமணம், குடும்பம், சொத்துரிமை அல்லது வெறுமனே

காரைக்கால் வாஞ்சி ஆற்றங்கரை நீர்நிலை பொதுமக்களாலும், அரசு அதிகாரிகள் அலட்சியத்தாலும் நாசமாக்கப்படுகிறது. பசுமை தீர்ப்பையம் நடவடிக்கை தேவை.காரைக்கால் வாஞ்சி ஆற்றங்கரை நீர்நிலை பொதுமக்களாலும், அரசு அதிகாரிகள் அலட்சியத்தாலும் நாசமாக்கப்படுகிறது. பசுமை தீர்ப்பையம் நடவடிக்கை தேவை.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 62 காரைக்கால், வாஞ்சியாற்றங்கரை ஓரத்தில் குப்பைகளையும், கட்டிடக் கழிவுகளையும் கொட்டி, ஆக்கிரமிப்புக்கு அடிகோலும் அவல நிலை.ஆற்று ஓரத்தில் குப்பைகளையும் வீட்டுக் கழிவுகளையும் கொட்டுவதால்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)