








காரைக்கால், வாஞ்சியாற்றங்கரை ஓரத்தில் குப்பைகளையும், கட்டிடக் கழிவுகளையும் கொட்டி, ஆக்கிரமிப்புக்கு அடிகோலும் அவல நிலை.
ஆற்று ஓரத்தில் குப்பைகளையும் வீட்டுக் கழிவுகளையும் கொட்டுவதால் நீர்நிலையின் இயல்பான தன்மை பாதிக்கப்படுவதுடன், நீர் ஆதாரங்களும் குறையும், ஆற்று ஓரத்தில் வெட்டப்படும் மரம் செடிகளை, ஆற்றிலேயே தள்ளி ஆற்றை பாழாக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது. இதனால் ஆற்று நீர் பாழாவதுடன், ஆற்றின் அகலமும் குறுகி வருகின்றது! ஆற்று ஓரத்தில் குப்பைக் கழிவுகளை கொட்டுவது பெரிய சுற்றுசூழல் பிரச்சினையாகும்! குப்பைகளை கொட்டி ஆற்றை நாசமாக்கும் செயலை கண்டுக்கொள்ளாத அதிகாரிகள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுவதுடன், வாஞ்சி ஆற்றங்கரை ஓரத்தை, மழை காலத்திற்கு முன்பு சுத்தம் செய்ய ஆணையிட வேண்டுகிறோம்.