GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized நீதி மன்றத்தின் இலவச சட்ட உதவியை எவ்வாறு யார் யார் பெறலாம் ?

நீதி மன்றத்தின் இலவச சட்ட உதவியை எவ்வாறு யார் யார் பெறலாம் ?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

பணமில்லாத ஏழை மக்கள், தங்கள் வழக்கை நடத்த சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையினால் எந்தவொரு இந்திய குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 39-A வலியுறுத்துகின்றது. ஒரு அரசின் கடமை, அதன் குடிமக்கள் அனைவரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கிட உறுதி செய்ய வேண்டும் என்பதே என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 14 மற்றும் 22(1) வலியுறுத்துகின்றது.

குற்றவியல் நடைமுறை 304 இன் படி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவியல் நடுவர் முன் நிறுத்தப்படும் அந்த நேரத்தில் இருந்தே, அவருக்கு பண வசதி இல்லாத நிலையில் சட்ட உதவி வழங்கிட வேண்டும் என்றும், பின் எப்போதெல்லாம் அந்த குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நீட்டிக்கப்படுகின்றதோ, சட்ட உதவி தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

1980-இல் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் திரு. P.N. பகவதி அவர்கள் தலைமையில் தேசிய அளவில் சட்ட உதவிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு “CILAS “(Committee for Implementing Legal Aid Schemes) என்னும் பெயரால் வழங்கப்பெற்றது. 1987 இல் Legal Services Authorities Act என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள சட்ட உதவி மையங்கள் ஒரே வடிவங்களில் செயல்பட வழிவகுத்தது. இந்தச் சட்டம் இறுதியாக 1995 நவம்பர் ஒரு சில திருத்தங்களுக்குப் பின் செயல்பாட்டிற்கு வந்தது.

free legal advice 1972 ஆம் ஆண்டு நீதியரசர் கிருஷ்ணா ஐயர் தலைமையில் சட்ட உதவி யாருக்கெல்லாம் வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.

சட்ட உதவிகள் தகுதி பெறுபவர்கள்.

  • பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்
  • பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்
  • மலைவாழ் மற்றும் பழங்குடி மக்கள்
  • விவசாய மக்கள்
  • எல்லையில் நெடுங்காலம் பணியாற்றும் இராணுவ சிப்பாய்கள்

*சமூகத்தில் பின்தங்கிய மகளிர் மற்றும் குழந்தைகள்

*தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்கள்

இவர்கள் அனைவருக்கும் சட்ட உதவி வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகள் மூலம் சட்ட உதவி வறியவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று உறுதி செய்தது.

வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் வறுமையில், தனிக்காவலில் இருக்கும் நிலையில் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள அவருக்கு உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை அரசு அவருக்கு வழங்க வேண்டும். இலவச சட்ட உதவி ஒருவருக்கு மறுக்கப்படுவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21 க்கு எதிரானது என்று கூறியது.

சட்டத்தின் ஆட்சி என்பது தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பு. ஒருவருக்கு சட்ட உதவி வழங்கப்படவில்லை என்றால், ஒரு வழக்கின் விசாரணையே சீர்குலைக்கப்படுகின்றது என்று கூறியது.

National Legal Services Authority (NALSA) – என்ற ஆணையம் தேசிய அளவில் நிறுவப்பட்டு பொருளாதரத்தில் பின் தங்கியவர்களுக்காக சட்ட உதவி வழங்கிடவும், விரைவாக நீதி வழங்கும் லோக் அதாலத் (Lok Adalat) ஏற்படுத்தவும் செயல்படுகின்றது.

சட்ட உதவி வேண்டி தரப்படும் மனு, மனு தந்த நபருக்கு போதிய பண வசதி இருக்கின்றது என்று தெரியவரும் பட்சத்தில் நிராகரிக்கப்படலாம். அப்படி நிராகரிக்கப்பட்ட மனுவின் மீது மனுதாரர் மேல்முறையீடும் செய்யலாம்.

வழக்குகள்….

  • அவதூறு வழக்கு,
  • பழிவாங்கும் வழக்கு,
  • நீதிமன்ற அவமதிப்பு,
  • உறுதி மொழியில் பொய் கூறுதல்,
  • தேர்தல் தொடர்பான வழக்குகள்,
  • அபராதம் 50 ரூபாய் மேல் இல்லாத வழக்கு,
  • பொருளியல் சார்ந்த குற்றங்கள்

போன்ற குற்றங்களுக்கு இலவச சட்ட உதவி பொருந்தாது. சட்ட உதவி என்பது பிச்சை அல்ல அது உரிமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே அதன் இலக்கு.

With Regards
DR. Tai P.PANDIAN,B.,A.,B.L., PGDFM., PGDPT.,
Advocate/Commissioner of oaths – Madras High Court
Founder Of Tai Organization
Managing Director Of Association For National Integration Trust
Vice President Of Press and Media People Association
Contact No. ‪+91 8838447683‬/‪+91 73051 87737‬
Website: www.taiiyakkam.com
E-mail: advocatepandianp@gmail.com

Postel Address:- Post Box No. 6932, Chennai – 600078

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவுபூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 21 சென்னை: பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,

புதுச்சேரி மின்துறை புதிய அறிவிப்புகள்.புதுச்சேரி மின்துறை புதிய அறிவிப்புகள்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 13 தொழில் முனைவோருக்கான புதிய சலுகைகள். புதுச்சேரி மின் துறை அறிவிப்பு. குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள்,

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள். Contempt of Court Act, 1971நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள். Contempt of Court Act, 1971

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள்.! Contempt of Court Act, 1971. ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ அல்லது

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)