GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Double Document, Adverse Possession, Limitation Act | இரட்டை ஆவணம் எதிரிடை அனுபவ பாத்தியம், கால வரையறை சட்டம்.

Double Document, Adverse Possession, Limitation Act | இரட்டை ஆவணம் எதிரிடை அனுபவ பாத்தியம், கால வரையறை சட்டம்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
  • நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
  • இன்றைக்கு வந்து ஒரு சிவில் வழக்கில்  வழங்கப்பட்டிருக்க ஒரு முக்கியமான தீர்ப்பு பற்றி தான் பார்க்கப் போறோம்.
  • இது கிட்டத்தட்ட ஒரு அருமையான தீர்ப்பு அப்படின்னு கூட நான் சொல்லுவேன்.
  • இந்த தீர்ப்பில்  மொத்தம் மூன்று விஷயத்தை டிஸ்கஸ் பண்ணி இருக்காங்க.
  • என்னவென்றால், டபுள் டாக்குமெண்ட் என்ற விஷயத்தை பற்றி டிஸ்கஸ் பண்ணி இருக்காங்க.
  • ஒரு சொத்தை ஏற்கனவே கிரயமோ செட்டில்மெண்டோ செய்து கொடுத்த பிறகு, அந்த ஓனர் இரண்டாவதாக ஒரு நபருக்கு அதே சொத்தை பாராதீனம் செய்து கொடுத்தால், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? அப்படிங்கறது முதல் விஷயம். 
  • இரண்டாவது வழக்கு தாக்கல் செய்வதற்கான லிமிடேஷன் என்ன காலவரையறை என்ன என்பதை பற்றி டிஸ்கஸ் பண்ணியிருக்காங்க.
  • மூன்றாவதாக, எதிரிடை அனுபவம் என்றால் என்ன? என்பதை பற்றி டிஸ்கஸ் பண்ணி இருக்காங்க.
  • சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளை நடத்துகிற வழக்கறிஞர்களுக்கு,இந்த தீர்ப்பு கட்டாயமாக உதவும். இது ஒரு அருமையான ஜட்ஜ்மெண்ட்.
  • இந்த வழக்கின் உடைய சுருக்கத்தை, நான் உங்களுக்கு சொல்கிறேன் கண்டிப்பாக படித்து பாருங்கள், உங்களுக்கு நிச்சயமாக புரியும்.
  • மதுரை முத்து நாயக்கர் அப்படின்னு ஒருத்தர் இருக்கிறார், அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள், ஒருவர்  சந்திரசேகரன், மற்றொருவர் கிருஷ்ணன். 
  • அந்த கிருஷ்ணனுக்கு ஒரு பையன் இருக்கிறான் அவன் பேரு லோகேஸ்வரன்.  
  • மதுரை முத்து நாயக்கர் வந்து என் உயிரோடு இருக்கும் போதே 1985இல் தன்னுடைய மகனான சந்திரசேகரனுக்கு தன்னுடைய சொத்தை, தானசெட்டில்மண்டு எழுதிக் கொடுத்து விடுகிறார். 
  • அந்த செட்டில்மென்ட் ஆவணத்தில், உடன்பிறந்த சகோதரரான கிருஷ்ணன் என்பவரும் கையெழுத்துப் போட்டு இருக்கிறார்.
  • அந்த தான செட்டில்மெண்டு அடிப்படையில, சந்திர சேகர் அந்த சொத்தை அனுபவித்துக்கொண்டு வந்தார்.
  • அந்த சூழ்நிலையில் 2004 லில், அந்த சந்திரசேகரன் இடத்தில் அந்த கிருஷ்ணனுடைய மகன் லோகேஷ்வரன் சில  சட்டவிரோதமாக செயல்களை செய்ய முயற்சிக்கிறார்.
  • சந்திரசேகர் அதை தடுக்க முற்படுகிறார். அதற்கு நான் தாத்தா கிட்ட இருந்து 1997 ல் கிரயன் வாங்கிவிட்டேன் என்கிறார். 
  • அப்போதுதான் இந்த விஷயம் சந்திரசேகரனுக்கு தெரிய வருது. 
  • அதன் பிறகு 2006-ல் சந்திர சேகரனுக்கு, வருவாய் துறையிலிருந்து ஒரு நோட்டீஸ் வருகிறது. அதில் லோகேஸ்வரன், பட்டா பெயர்  மாற்றம் செய்ய ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவின் மீதான விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் வருது. 
  • இந்த சூழ்நிலையில் 2006ல் லோகேஸ்வரன் அந்த பிரச்சனைக்குரிய தாவா சொத்தில் சில கட்டுமானங்களை கட்ட முயற்சி பண்ணுகிறார். 
  • அந்த செயலை 2013 ழும் தொடர்கிறார். இதனால் வேறு வழியின்றி இந்த சந்திரசேகரன் உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்கிறார்.  
  • அந்த வழக்கில், இந்த சொத்தானது, எங்க அப்பா மதுரை முத்து நாயக்கருக்கு பாத்தியப்பட்டது. அவர் அந்த சொத்தை 1985ல் எனக்கு செட்டில்மெண்ட் கொடுத்துவிட்டார். அதன் பிறகு நான்அந்த சொத்துக்கு பட்டா பெற்று அனுபவித்துக்கொண்டு வருகிறேன்.
  • இந்த சூழ்நிலையில் இந்த பிரதிவாதி 1997ல்  எங்க அப்பா கிட்ட இருந்து இரண்டாவதாக ஒரு கிரயம் வாங்கி இருக்கிறார். லோகேஸ்வரன், என் கூட பிறந்த சகோதரரின் மகன்தான், ஏற்கனவே நான் தான செட்டில்மெண்ட் அடிப்படையில் நான் வாங்கின சொத்தை, இவர்  இரண்டாவதாக்க கிரயம் வாங்கி இருக்கிறார், அதனால அந்த கிரயன் என்னை  எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. ஆனா அதே நேரத்தில் இவர் சட்டவிரோதமாக அந்த இடத்தின் போஸ்ஸசனையும்  கைப்பற்றி விட்டார். அதனால் அந்த சொத்து எனக்கு பாத்திபட்டது என்று டிக்ளர் பண்ணனும். அந்த நிலத்தை சுவாதீனத்தை என்னிடமே திரும்ப ஒப்படைக்கன்னு சொல்லி, Suit for declaration and injunction and recovery of possession கேட்டு ஒரு சூட்டை போடுகிறார். 
  • இந்த வழக்கில் லோகேஸ்வரன் ஆஜராகி, பதின் மனு தாக்கல் செய்கிறார். மூன்று வகையாக டிபன்ஸ் எடுத்து  ரிட்டர்ன் ஸ்டேட்மெண்ட் போடுகிறார். 
  • அதில், தான செட்டில்மென்ட் சொத்தும் நான் வாங்கி இருக்கும்  சொத்தும் வெவ்வேறான சொத்து. தான செட்டில்மெண்ட் பத்திரத்தில் கண்டுள்ள எல்லைகள் வேறு, என்னுடைய பத்ததில் கண்ட எல்லைகள் வேரூ என்றும்.
  • நான் 1997 கிரயம் வாங்கிய விஷயம் அப்பவே சந்திரசேகருக்கு தெரியும், ஆனால் கிட்டத்தட்ட 16 வருஷம் கழிச்சு 2013 தான் வழக்குப் போட்டு இருக்கிறார். இது லிமிடேஷன் ஆக்ட்டுக்கு  எதிரானது. அவருக்கு என்றைக்கு தெரிய வந்ததுதோ, அதுல இருந்து மூன்று வருஷத்துக்குள் வழக்கு போட்டிருக்க வேண்டும். ஆனால், 16 வருஷம் கழிச்சுதான் வழக்கு போட்டிருக்கிறார் லிமிடேஷன் ஆக்ட் வழக்கு தாக்கல் செய்வதற்கான உரிமையை சந்திரசேகரன் இழந்து விட்டார் என்று வழக்கில் சொல்லி இருக்கிறார்.
  • மூன்றாவதாக, எதிரிடை அனுபவ பாத்தியம், கோருகிறார், அதாவது, 1997 முதல், நான் இந்த சொத்தை அனுபவித்து வருவது சந்திரசேகரனுக்கு நன்கு தெரியும். அந்த நிலத்தின் மேல் குறுக்கிட்ட மின்சார பாதையை நான் பணம் கேட்டு ரிமூவ் பண்ணி இருக்கிறேன். இந்த இடத்துல ஆழ்துளை கிணறு அமைத்து இருக்கேன். இந்த இடத்துல கன்ஸ்ட்ரக்சன் பண்ணியிருக்கிறேன். சோ 12 வருடங்களுக்கும் மேலாக இந்த சொத்து என்னுடைய அனுபவத்தில் இருக்கு அப்படின்னு காட்டுதற்கு என்னுடன் ஆதாரங்கள் இருக்கு. எனக்கு எதிரிடை அனுபவமும் இந்த சொத்தில்  இருக்கு. அதனால நீங்க சந்திரசேகரன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி பண்ணுங்க என்று சொல்லி பதில் மனு தாக்கல் செய்கிறார் லோகேஸ்வரன்.
  • இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரித்து, இந்த பாதி சந்திரசேகரனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார், இந்த வழக்கில் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து லோகேஸ்வரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலாவது மேல்முறையீடுசெய்கிறார். 
  • இந்த வழக்கில் கோர்ட்டு முக்கியமாக அந்த பிரதிவாதி எழுப்பியிருக்கிற, தான செட்டில்மென்ட்ல கண்ட சொத்தும் கிரையப் பத்திரத்தில் கண்ட சொத்தும் வேற வேற சொத்து,
  • அதற்காக இரண்டு பேருடைய கிரய ஆவணம்,  ரெண்டு பேரு தாக்கல் செய்திருக்கிற வருவாய் துறை ஆவணங்களை பார்த்து, இரண்டு சர்வே நம்பர் ஒன்னுதான்,, தான செட்டில்மெண்டில் கண்ட சர்வே நம்பர் ஒன்றுதான், அப்படின்னு சொல்லி டிசைட் பண்ணி ரெண்டு சொத்தும் ஒரே சொத்துதான் என்று முடிவுக்கு வந்து, லோகேஸ்வரன் எழுதிய முதல் கேள்வி அவருக்கு எதிராக தீர்மானிக்கிறார்கள். 
  • அடுத்ததாக ஒரு சொத்தின் உரிமையாளர் சொத்தை ஏற்கனவே தான செட்டில்மென்ட் கொடுத்துட்டாரு, அதே உரிமையாளர் வேறு ஒரு நபருக்கு கொடுக்க முடியுமா? அது சட்டப்படி செல்லுமா? அதற்கு நீதிபதி அழகான விளக்கம் அளித்திருந்தார். 
  • உரிமையாளரான மதுரை முத்து நாயக்கன் ஏற்கனவே தனது மகனான சந்திரசேகனுக்கு செட்டில்மெண்டு எழுதி கொடுத்து விட்டார். ஆனால் 1996ல அதே மதுரை முத்து நாயக்கன் இரண்டாவதாக தன்னுடைய இன்னொரு மகனின் பேரனுக்கு கிரயம்  கொடுத்துள்ளதால், இரண்டாவதாக கொடுக்கப்பட்ட கிரையம் சட்டப்படி செல்லவே செல்லாது. 
  • பஸ்ட் ஒரு டாகுமெண்ட் போட்டாச்சு அது பதிவுசெய்யப்பட்டு இருக்கு, பிறகு இரண்டாவது ஒரு பத்திரம் போட்டு அந்தப் பத்திரத்தின் அடிப்படையில் நீங்க எப்படி வந்து உரிமை கோரமுடியும்? இரண்டாவது பாத்திரமே இன்வேலிட் என்று சொல்லி, அதற்கும்  அழகான விளக்கம் சொல்லிட்டாங்க,
  • மூன்றாவதாக லிமிடேஷன் என்ன சொல்றாரு லோகேஸ்வரன் என்ன சொல்றாரு? இந்த சந்திரசேகரன் அவருடைய குறுக்கு விசாரணையில் 1997 லோகேஸ்வரன் கிரயம் பெற்றது  தனக்கு தெரியும் என்று சொல்லி இருக்கிறார்.  லிமிடேஷன் பிரிவு 58ன் படி வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரையறை வந்து மூணு வருஷம் தான், 
  • ஆனால் 2013 வழக்கு போட்டிருக்காரு வெங்கடேசனுக்கு அதன் பிரகாரம் வழக்குத் தாக்கல் செய்வதற்கான உரிமையை சந்திரசேகரன் இறந்துவிட்டார் அப்படின்னு ஒரு கேள்வி வைத்திருக்கிறார். 
  • அந்த கேள்விக்கு நீதிமன்றம் விடைகாண்கிறது. சந்திரசேகரன் எனக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பான விசாரணை அறிவிப்பு 2006ல் அதான் எனக்கு வந்துச்சு, அது சம்பந்தமாக நான் வருவாய் துறையில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்து அது நிலுவையில் இருக்கு, இதுவரைக்கும்  எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை, 
  • 2013 திரும்பவும் அவர் வந்து கூடுதலாக கட்டணம் கட்ட முயற்சி பண்ணினார், அப்ப எனக்கான லிமிடேஷன் எப்ப ஆரம்பிக்கிறது என்றால், 2006ல் அதான் ஆரம்பிக்குது.
  • 2006ல் எனக்கு தெரிய வருது, அதுக்கு எனக்கு தெரியாது. நான் என்னுடைய வழக்கில் ரெகவரி ஆப் பொசிசன்  கேட்டு இருக்கேன் அப்போ சொத்தில் சுவாதீனத்தை திரும்ப ஒப்படைக்கும் அப்படின்னு சொல்லி நான் கேட்டு இருந்தால், அதுக்கு காலை வரை வந்து லிமிடேஷன் ஆக்ட் பிரிவு 65 இன் பிரகாரம் 12 வருஷம்.
  • இந்த லோகேஸ்வரன் சொல்ற மாதிரி லிமிடேஷன் ஆக்ட் பிரிவு 58 ன் படி மூணு வருஷம் கிடையாது. பன்னெண்டு வருஷம். 2006ல் நாளைக்கு தெரியும் சீனா 2013 வழக்கு போட்டு அப்பா நான் 12 வருடங்களுக்குள்ளாக வழக்கு போட்டு விட்டேன். எனவே, லிமிடேஷன் ஆக்ட் 58 இந்த வழக்கிற்கு பொருந்தாது லிமிடேஷன் ஆக்ட் 65 தான் பொருந்தும். 
  • அதனை சரியாக பூர்த்தி செஞ்சிருக்கேன் பன்னிரண்டு வருஷத்துக்குள்ளாக நான் வழக்கை தாக்கல் செய்துவிட்டேன். அப்படின்னு இந்த சந்திரசேகரன் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார். 
  • அடுத்த மூன்றாவது எதிரிடை அனுப்பவும். எதிரிடை அனுபவம் என்றால் என்ன? ஒரு உண்மையான உரிமையாளர்களின்  சொத்த அவருக்குத் தெரிந்தே வெளிப்படையாக அவருடைய எந்த இடையூறும் இல்லாமல்,தொடர்ந்து பன்னிரண்டு வருடங்கள் அனுபவித்துக்கொண்டு வரவேண்டும். என்று, உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள். என அட்வைஸ் பண்ணா எந்த சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம் உண்மையான உரிமையாளருக்கு எதிராக பயன்படுத்தலாம்
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

மேய்க்கால் புறம்போக்கு” என்றால் என்ன?மேய்க்கால் புறம்போக்கு” என்றால் என்ன?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 25 1. “மேய்க்கால் புறம்போக்கு” என்றால் என்ன? தமிழில் “மேய்க்கால்” என்றால் மாடுகள் மேய்ச்சலுக்கான இடம். “புறம்போக்கு” என்றால் பொதுப் பயன்பாட்டுக்கான நிலம்,

காவல் நிலையத்தில் வீடியோ எடுக்கலாம்: மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்புகாவல் நிலையத்தில் வீடியோ எடுக்கலாம்: மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 86 மும்பை: ‘காவல் நிலையங்கள் தடை செய்யப்பட்ட பகுதி அல்ல. எனவே, காவல் நிலையத்துக்குள் வீடியோ எடுப்பது குற்றமாகாது,’ என்று மும்பை உயர்

Police not to interference cases | காவல் துறை தலையிடக்கூடாத வழக்குகள்.Police not to interference cases | காவல் துறை தலையிடக்கூடாத வழக்குகள்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)