18/10/2024 போக்குவரத்து காவல்துறை, காரைக்கால்…
(TRAFFIC POLICE, KARAIKAL)
பத்திரிகை செய்தி குறிப்பு..
காரைக்கால் மாவட்டத்தில் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் சுற்றித்திரிய விடுவதால் சாலை விபத்துகள் ஏற்பட்டு அதனால் விலைமதிப்பில்லா உயிர் இழப்புகள் மற்றும் உடல் உறுப்புகள் சேதம் ஏற்படுகிறது. விபத்துகளை தடுக்க காரைக்கால் போக்குவரத்து காவல்துறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. போக்குவரத்து காவல்துறையின் உத்தரவை மீறி பொது சாலையில் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் பொது சாலைகளில் கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரியவிட்ட கால்நடைகளின் உரிமையாளர்களான காரைக்கால், கோவில்பத்தை சேர்ந்த சேனாதிபதி என்பவர் மீது 16.10.2024 அன்று காரைக்கால் நகர போக்குவரத்து காவல் நிலையத்திலும், நிரவி பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவர் மீது 17.10.2024 அன்று காரைக்கால் திரு.பட்டினம் போக்குவரத்து காவல் நிலையத்திலும் பிரிவு 291 of BNS-ன் கீழ் வழக்குகள் பதியப்பட்டு அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை ரோட்டில் திரியவிடாமல் அதற்குண்டான தங்களது இடத்தில் வைத்து பராமரிக்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறது. கால்நடைகளை ரோட்டில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது தண்டனை பிரிவு 291 of BNS-ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை மதித்து நடந்து விபத்தில்லா சாலையை உருவாக்க போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளபடுகிறது.
குறிப்பு: காரைக்காலில் சாலை போக்குவரத்து விதிமீறல்களை 9489205307 என்ற வாட்சப் எண்ணிற்கு புகைப்படம் (அ) வீடியோ எடுத்து புகார் அனுப்பினால் விசாரித்து மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். புகார்தாரர் பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.
போக்குவரத்து காவல்துறை – காரைக்கால்.