ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
Views:16
3/38. சமயச் சுதந்திரம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
கோட்பாடு 25 படி, பொது ஒழுங்கு, ஒழுக்கம், நலவாழ்வு ஆகியவற்றுக்காக, ஒவ்வொருவரும், தான் விரும்பிய மதத்தை தழுவவும், பரப்பவும் உரிமை உண்டு.
கோட்பாடு 26 படி, மதத்துக்காகவும், அறங்களுக்காகவும், அமைப்புகளை உருவாக்கவும், பராமரிக்கவும், தம் மதம் தொடர்பான சங்கதிகளை, தாமே பராமரிப்பதற்கும், சொத்துக்களை பெறுவதற்கும், வைத்திருப்பதற்கும், நிர்வகிப்பதற்கும் உரிமை உண்டு.
கோட்பாடு 27 படி, மதம் சார்ந்த அமைப்புகளை பராமரிப்பதற்கு, வரிகள் ஏதும் செலுத்தப்பட வேண்டியதில்லை.
கோட்பாடு 28/1 படி, அரசு நிதியில் நிர்வகிக்கப்படும் கல்விச்சாலையில், எந்த விதமான மத போதனையும் நடக்கக் கூடாது.
கோட்பாடு 28/2 படி, மத போதனைக்கு என உருவாக்கப்பட்டுள்ள, அறக்கட்டளை மூலம், நடத்தப்படும் கல்வி சாலையில், மத போதனை நடத்தப்படலாம்.
கோட்பாடு 28/3 படி, அரசின் உதவித்தொகையால், அல்லது அங்கீகாரத்தால், நடத்தப்படும் கல்விச்சாலையில், நடைபெறும் மத போதனையில், கலந்து கொள்ள யாரையும் வற்புறுத்த இயலாது. சிறுவர்களை அவர்களின் பாதுகாவலரின் ஒப்புதல் இன்றி வற்புறுத்த இயலாது.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.
ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 உங்க பிரச்சனை யாருக்கு தெரியும்? நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்! என்ற இந்த நூல் தலைப்பில் அசைக்கவோ, மறுக்கவோ, மாற்று கருத்து எதுவும்
ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 15 3/37. அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை. சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. கோட்பாடு 23/1 படி, மனிதர்களை விற்பதும், வாங்குவதும், கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும்,
ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 34 18. கொள்ளை போன அரசின் கொள்கைகள். இந்திய அரசமைப்பின் பாகம் நான்கானது, அரசுக்கான கொள்கை விளக்கத்தை எடுத்து இயம்புவதாக இருக்கிறது. அதாவது,