GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Revenue Department of Tamilnadu | தமிழ்நாடு வருவாய்த்துறை கட்டமைப்பு (அமைப்பு

Revenue Department of Tamilnadu | தமிழ்நாடு வருவாய்த்துறை கட்டமைப்பு (அமைப்பு

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

தமிழ்நாடு வருவாய்த்துறை கட்டமைப்பு (அமைப்பு)….. (TN GOVT REVENUE DEPARTMENT) …..

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த்துறையின் கீழான ஆட்சி அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அவருடைய வழிகாட்டுதலின் கீழ் இயங்குகின்றன.

இந்த மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் வருவாய் கிராமம், உள்வட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்டம் வரை கீழ்கண்ட வருவாய்த் துறை அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர்.

இந்த வருவாய்த்துறையின் அலுவலர்களின் வழியாகத்தான் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிராம நிர்வாக அலுவலர்,

வருவாய் ஆய்வாளர்,

வட்டாட்சியர்,

மண்டல துணை வட்டாட்சியர்,

வருவாய்க் கோட்ட அதிகாரி,

மாவட்ட வருவாய் அலுவலர்,

மாவட்ட ஆட்சித் தலைவர்.

கிராம நிர்வாக அலுவலா் அலுவலகம்… (VILLAGE ADMINISTRATIVE OFFICE)

தமிழ்நாட்டிலிருக்கும் மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேருராட்சிகள், ஊராட்சிகள் என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் வருவாய்த்துறையால் குறிப்பிட்டமக்கள் தொகைக்கு ஏற்ப வருவாய்க் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

மாநகராட்சிகள், மக்கள்தொகை அதிகமுடைய நகராட்சிகள் போன்றவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுபோல் மக்கள்தொகை குறைவான சில ஊராட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டும் வருவாய்க் கிராமம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 16,564 வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் என்பவர் இருக்கிறார். இவருக்குக் கீழாக கிராம உதவியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

கிராம நிர்வாக அலுவலகத்தின் பணிகள்….

கிராமக் கணக்குகளைப் பராமரித்தல்,
வருவாய்க் கிராம அளவிலான பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்யப்படுகிறது. பின்பு இதற்கான சான்றிதழ்களைச் சம்பந்தப்பட்டவர்கள் கோரும் போது அதற்கான சான்றிதழ்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்படுகின்றன.

வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற தேவைகளுக்கான சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்றவைகளைக் கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கான சான்றிதழ்களை வட்டாட்சியர் வழங்குவதற்காக விண்ணப்பதாரரிடம் விசாரணை மேற்கொண்டு பரிந்துரை செய்யப்படுகின்றன.

வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் நிலங்களுக்கு வரி வசூலித்தல் அவற்றிற்கான நில உடமைச்சான்று, நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர் குறித்த விபரங்களுடைய பட்டா மற்றும் அடங்கல் சான்றுகள் வழங்க வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யும் பணிகள் செய்யப்படுகின்றன.

வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற முதியோர் , விதவைகள் போன்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்க விசாரணை மேற்கொண்டு வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றன.

வருவாய்க் கிராம அளவிலான அனைத்து வருவாய்த்துறைப் பணிகளையும் செய்து வருகின்றனர். கிராமத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை அரசுக்கு தொிவித்தல் இவா் மூலமே நடைபெறுகிறது.நில வாி , கடன்கள் , அபிவிருத்தி வாி மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவுகள் சங்கங்களிலிருந்து கடன்கள் பெற சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்கள் வழங்குதல். தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின்போது உடனுக்குடன் மேல் அலுவலா்களுக்கு அறிக்கை அனுப்புதல் மற்றும் இயற்கை இன்னல்களால் ஏற்பட்ட சேதத்தை வருவாய் ஆய்வாளர் மதிப்பீடு செய்யும் போது உடனிருத்தல்.

கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல் மற்றும் விசாரணைக்கு உதவிபுாிதல்.காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள் போன்ற தொற்று நோய்கள் பற்றி அறிக்கை அனுப்புதல்.

இருப்புப்பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமாித்தல்.கட்டிடங்கள், மரங்கள், மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.புதையல்கள் பற்றி மேல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தல்.

முதியோர் ஓய்வுதியம் வழங்குவது குறித்தான பனிகளைச் செய்தல்.பொதுச் சொத்துக்கள் பற்றி பதிவேட்டைப் பராமரித்தல்.முதியோர் ஓய்வுதியப் பதிவேட்டை பராமரித்தல்.வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைத்தல்.கிராமப் பணியாளர்களின் பணியை கண்காணித்தல்.

நில ஆக்கிரமிப்புகளை தடுப்பது மற்றும் மேல் அலுவலர்களுக்கு தொவித்து உடனடி நடவடிக்கை எடுப்பது.சர்வே கற்களைப் பராமரிப்பது.கிராமத்தில் நிகழும் சமூக விரோத செயல்கள் குறித்தான அறிக்கை அனுப்புதல்.

குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் சந்தேகத்திற்கிடமான அந்நியர்கள் வருகையைத் தெரிவிப்பது.வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தல்.கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்

கிராம நி்ர்வாக அலுவலரால் கீழ்கண்ட கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கிராம கணக்கு எண்.

  1. கிராமத்தில் செய்யப்படும் பயிர் வாரியான சாகுபடியின் தாெகுப்பு ஆகும் கிராம கணக்கு எண்.

1.ஏ: கிராமத்தில் செய்யப்படும் பயிர் வாரியான சாகுபடியின் உள்ளடக்கம் ஆகும் இது கிராமத்தில் உள்ள புல எண்களை காெண்டுள்ள நிலையான பதிவேடு ஆகும். இது 12 கலங்களைக் காெண்டது ஆகும்.

கிராம கணக்கு எண்: 2: கிராமத்தில் செய்யப்படும் பயிர் வாரியான சாகுபடி கணக்குகளைக் காட்டும் பதிவேடு.)

*வருவாய் ஆய்வாளர் அலுவலகம் … (REVENUE INSPECTOR) .

  • சில வருவாய்க் கிராமங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை பிர்க்கா என்றும் அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 1127 வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் வருவாய் ஆய்வாளர் எனும் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு உதவியாக அலுவலக உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் பணிகள்….

கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கும் அனைத்து வகையான சான்றிதழ்களுக்கான பரிந்துரைகள் குறித்து மேல் விசாரணை செய்து வட்டாட்சியருக்குக் கூடுதல் பரிந்துரை செய்கிறார். வருவாய் அலுவலர் மட்டுமே உள் வட்ட அளவிலான விசாரணை அலுவலர் ஆவார்.

வருவாய் ஆய்வாளரின் பணிகள்:

1) உள் வட்ட அளவில் நடைபெறும் அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு இவரே உள்வட்ட அளவிலான நிர்வாக நீதிபதியாவார்.

2) கிராம நிர்வாக அலுவலர்களின் பணியினைக் கவனிப்பது, கிராம நிர்வாகத்தையும் வட்டாட்சியர் அலுவலகத்தையும் இணைக்கும் இணைப்புப் பாலமாக செயல்படுகிறார்.

3) அனைத்து சான்றிதழ் தொடர்பான விசாரணை அலுவலராவார்.

சாதிச் சான்றிதழ்

வருமானச் சான்றிதழ்

வசிப்பிடச் சான்றிதழ்

இருப்பிடச் சான்றிதழ்

இருவரும் ஒருவரே சான்றிதழ்

ஒருங்கிணைந்தசான்றிதழ்

சொத்து மதிப்புச்சான்றிதழ்

வாரிசுச் சான்றிதழ்

மற்றும்

வட்டாட்சியர் அலுவலகத்தால் வழங்கப்படும் பொது மக்கள் கோரும் அனைத்து சான்றிதழ்களுக்கும், இவரே விசாரணை அலுவலர் ஆவார். இவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வட்டாட்சியர் சான்றிதழ்கள் வழங்கு நடவடிக்கை மேற்கொள்வார்.

வட்டாட்சியர் அலுவலகம்….

மாவட்டத்தின் வருவாய் வட்டங்களின் நிர்வாகத்தை வட்டாட்சியர் நிர்வாகம் செய்வார். தமிழ்நாட்டில் மொத்தம் 220 (தற்ப்போது புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது) வருவாய் வட்டங்கள் உள்ளது. இதைத்தாலுகா என்று வேறு பெயராலும் குறிப்பிடுகின்றனர். இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில துணை வட்டாட்சியர்களும், எழுத்தர்களும், அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் என்கின்றனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தின் பணிகள்….. (TAHSILDAR)

மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் அலுவலகத்தின் வழியாக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் வ்ட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.

வட்டாட்சி அமைப்புக்குள் மக்களிடையே பிரச்சனைகள் ஏதும் வந்து சட்டம் , ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு வாய்ப்பாக இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.

வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார். மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட வளர்ச்சி அதிகாரி ஆகியோர் போன்றவர்களுக்கு வருவாய்த்துறைப் பணிகளில் உதவுகிறார்.

வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்….

வருவாய் நிர்வாகப் பணிகள் ….

வட்ட அளவில் பணியாற்றும் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் இ கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் இதர வருவாய் பணியாளர்களின் பணிகளைக் கண்காணித்தல் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்களின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்தல்.பயிர் மேலாய்வு செய்தல் நில அளவைப் பணிகளை ஆய்வு செய்தல்.

நில அடமான இனங்களில் நில மதிப்பு ரூ.2000ஃ-க்கும் மிகைப்படாத இனங்களின் மூன்று ஏக்கர் புஞ்சை அல்லது 1½ஏக்கர் நஞ்சை பரப்பளவிற்கு மேற்படாத இனங்களின் ஆணை பிறப்பித்தல். விலை மதிப்பு அற்ற நிலங்களில் வீட்டு மனை கோரிவரும் மனுக்கள் மீது ஆணை வழங்குதல்.

இயற்கை இடர்பாடுகள்தீவிபத்து, வெள்ளம்;புயல் ஏற்படும் காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிவாரணம் வழங்க தக்க நடவடிக்கை எடுத்தல்.

நில ஆக்ரமணச்சட்டம் 1905ன் படி அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரணமங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல். பி.மெ.மோ இனங்களில் தீர்வை மற்றும் அபராதம் விதித்து ஆணையிடுதல்.கிராமச் சாவடி கால்நடைப்படி கல் இருப்பு 2 சி மரங்கள், நிலபராதீனம் இனங்கள், நில ஒப்படை இனங்கள், குத்தகை தண்ணீர் தீர்வை இனங்கள், ஆக்ரமணம் அரசு புறம்போக்கு நிலங்கள், தீர்வை விதிக்கப்பட்ட மற்றும் தீர்வை விதிக்கப்படாத நிலங்கள், இவைகளைத் கள ஆய்வு செய்தல்.முதியோர் உதவித்தொகை மற்றும் இதர நலத் திட்ட உதவி வழங்குதல்.

நில உரிமை மாற்ற இனங்களில் ஆணை பிறப்பித்தல்.நிலம் கையகப்படுத்தும் இனங்களில் நில மதிப்பு ரூ25000 க்கும் மிகைபடாத இனங்களில் தீர்ப்பு வழங்குதல்.நில ஒப்படை பராதீன இனங்களில் வதிமுறை மீறப்பட்ட இனங்களில் உரிய நடவடிக்கை எடுத்தல்.பாசன ஆதாரங்கள் மற்றும் மழை மானிகளை ஆய்வு செய்தல் பாசனம் குறித்து தகராறு இனங்களைத் தீர்த்து வைத்தல்.

வருவாய் நிலை ஆணை பத்தி 11சி-ன் கீழ் பாசன ஆதாரங்களீல் இருந்து விவசாயம் மற்றும் தொழிற்சாலை உபயோகத்திற்கு தண்ணீர் எடுத்தலை முறைபடுத்தல் தொடர்பான பணிகள்.

பல்வேறு பாசனச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை செயல்படுத்தல்.அரசுக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் சேர வேண்டிய தொகைகளை வருவாய் வசூல் சட்டப்படி வசூலித்தல்.

நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி நிலவரி கடன் ஊராட்சி வரி, சர்வே கட்டணம், வேளாண்மை வருமான வரி, நகர்புற நிலவரி, நீதி மன்றக் கட்டணம், வேளாண்மை வருமானவரி, நகர்புரநிலவரி, நீதி மன்றக் கட்டணம், முத்திரை கட்டணம், வறியவர் வழக்குக் கட்டணம், மற்றும் பல்வேறு துறைகளிடம் இருந்து வரப் பெற வேண்டிய நிலுவைத் தொகைகள் வசூலைத் துரிதப்படுத்துதல்.

கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் வரி வசூல் கணக்கு மற்றும் இதர கணக்குகளை ஆய்வு செய்தல்.ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்குகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.வேளாண்மை நிலங்களுக்கு நியாயமான குத்தகை வாரம் நிர்ணயத்தல்.

நத்தம் மனை வரி நிர்ணயத்தல்.அரசு புறம்போக்கு நிலங்கள் வழியாக நீர் கொண்டு செல்ல பாதைக் கட்டணம் நிர்ணயத்தல்.தண்ணீர் தீர்வை இனங்களின் ஆணை பிறப்பித்தல்.

குத்தகை உரிமைப் பதிவு ஆணை பிறப்பித்தல்.கிராம உதவியாளர் பணி நியமணம் செய்தல்.கிராம நிர்வாக அலுவலர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இனங்களில் தண்டனை அளித்தல்.

கிராம நிர்வாக பணியமைப்பு தொடர்பான பணிகள்.கிராம உதவியாளர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இனங்களில் ஆணை பிறப்பித்தல். .கிராம நிர்வாக அலுவலர்களின் விடுப்பு மனுக்களின் மீது ஆணை பிறப்பித்தல். 2சி மனைப்பட்டா மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல்.

புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை தல ஆய்வு செய்து சட்டரோதமாக மரம் வெட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்தல். ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்குகளில் சட்ட விரோதமாக கல் மற்றும் மணல் தோண்டி எடுக்கபடுவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.

வருவாய் நிலை ஆணைகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத்துதல், ஆதின ஒழிப்பு இனாம் ஒழிப்புச் சட்ட காலங்களுக்கு அப்பார்பட்ட இனங்கள் மீதான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தல்.

உப்பளம் அமைக்க நிலங்களை குத்தகைக்கு விடுதல் மற்றும் குத்தகை வசூலித்தல். .
வட்டக் கணக்கு நடைமுறை நுல்படி பதிவேடுகள் மற்றும்; கணுக்குகள் பராமரித்தல். ரயத்துவாரி நிலங்களில் உட்பிரிவு செய்து ஆணையிடுதல். அரசால் வாங்கப்பட்ட நிலங்களை விதிப்படி தீர்வு செய்தல்.

*குற்றவியல் நிர்வாக பணிகள் ….


  • வட்ட குற்றவியல் நடுவராக பணியாற்றுதல்.வட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல்.அவசர காலத்தில் இருப்புப் பாதையை கண்காணிக்க தக்க நடவடிக்கை எடுத்தல்.குற்றவியல் நடைமுறை பிரிவு விதி 144ன் கீழ் ஆணை பிறப்பித்தல்.கொத்தடிமைத் தொழிலாளர் சட்டத்தினை செயல்படுத்துதல்.

காவல் துரையினரால் ஒப்படைக்கப்பட்ட உரிமை கோரப்படாத பொருட்கள் மீது நடவடிக்கை எடுத்தல். காவல் துறை அலுவலர்களின் கோரிக்கையின் பேரில் புதைக்கப்பட்ட பிணங்களை மீண்டும் தோண்டி எடுத்து மருத்துவ ஆய்வு செய்தல்.

பொதுவான பணிகள்…

மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடத்துதல்.

பொதுத் தேர்தல் காலத்தில் சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் அலுவலராகப் பணியாற்றுதல்.

சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் நடந்த அனைத்து ஏற்பாடுகளும் செய்தல்.

பொது சுகாதாரம் கால்நடை தொத்து வியாதி மற்றும் காலரா முதலிய இதர தொத்து வியாதிகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தல்..

பிறப்பு இறப்பு பதிவு செய்யும் பணியைக் கண்காணித்தல்.

வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம்…..(REVENUE DIVISIONAL OFFICE)

மாவட்டங்களில் வருவாய்த்துறையில், சில வட்டாட்சியா் அலுவலகங்களை உள்ளடக்கி வருவாய்க் கோட்ட அதிகாரி தலைமையில் வருவாய் கோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 76 வருவாய்க் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் துணை ஆட்சியர் அல்லது வருவாய்க் கோட்ட அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

இப்பணியிடங்களில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் துணை ஆட்சியர் என்றும் மற்றவர்கள் நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்ட அலுவலர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவா் உட்கோட்ட நிா்வாக நீதிபதி என அழைக்கப்படுகிறாா்.

வருவாய்க் கோட்ட அலுவலகத்தின் பணிகள்….

வருவாய்க் கோட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரைகளின்படி கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர் நிலையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர்கள் தான் நியமிக்கப்படுகிறார்கள்.மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இந்த அலுவலகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்….

தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்ட ஆட்சி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தின் ஆட்சி அமைப்புகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவரின் மேற்பார்வையில் இயங்குகிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பாக மாநில அரசின் வருவாய்த்துறையின் மாவட்டத் தலைமை அதிகாரியாக இருக்கிறார். இருப்பினும் மாவட்டத்திலிருக்கும் அனைத்துத்துறை அலுவல்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் இருக்கிறார்.மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பிற்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.

இவரின் கீழ் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் மாவட்ட அளவிலான பல துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் கீழான துணை அலுவலகங்கள் இருக்கின்றன. இந்த அலுவலகங்களை உள்ளடக்கி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் இயங்குகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பணிகள்…..

மாவட்டத்திற்குத் தேவையான அனைத்துத் துறைப் பணிகளும் இந்த அலுவலகத்தின் கீழ் இயங்கும் துறை அலுவலர்களால் செயல்படுத்தப்படுகிறது.

நன்றி….

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

உறுப்பினரின் ஆட்சேபனைக்குரிய பதிவுக்கு வாட்ஸ்அப் குழு அட்மின் பொறுப்பாக முடியாது ஐகோர்ட்டு உத்தரவு.உறுப்பினரின் ஆட்சேபனைக்குரிய பதிவுக்கு வாட்ஸ்அப் குழு அட்மின் பொறுப்பாக முடியாது ஐகோர்ட்டு உத்தரவு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 176 உறுப்பினரின் ஆட்சேபனைக்குரிய பதிவுக்குவாட்ஸ்அப் குழு அட்மின் பொறுப்பாக முடியாதுஐகோர்ட்டு உத்தரவு.. குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள்,

தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு_ தடுப்புச் சட்டம் 2003தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு_ தடுப்புச் சட்டம் 2003

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003 The Tamilnadu Prohibition of Charging Exorbitant Interest Act,2003 சட்ட

Revenue Stamp | ரெவின்யூஸ்டாம்ப்Revenue Stamp | ரெவின்யூஸ்டாம்ப்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 ரெவின்யூஸ்டாம்ப் (Revenue Stamp)இந்த ரெவின்யூ ஸ்டாம்புகள் இந்தியாவில் இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே உபயோகிக்கப் படுகிறது.1)புராமிசரி நோட் கடன் வாங்கும்போது, கடன்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)