GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் காசோலை வழக்கில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?

காசோலை வழக்கில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

காசோலை கொடுத்தவர் தேதியிட்டு வழங்குகிறார். காசோலை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள், அதை காசோலை பெற்றவர் வங்கி கணக்கில் போட்டு பணத்தை வசூலிக்க வேண்டும்.

ஆனால் முன்பு, காசோலை பெறபட்ட தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு செல்லும்.

காசோலை பெற்றவர் அதனை வங்கியில் போடுகிறார்.வங்கியில் காசோலை கொடுத்தவர் அக்கவுண்டில் பணம் இல்லை என்று அந்த காசோலை திருப்பித் தரப்பட்டு, வங்கியில் இருந்து அதற்கான மெமோ காசோலை பெற்றவரிடம் வழங்கப்படுகிறது.

‪சட்ட‬ ‪அறிவிப்பு‬ ‪வழங்க‬ ‪‎வேண்டும்‬.
காசோலை வழங்கியவர் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்து, வங்கி அதற்கான மெமோ வழங்கும் வழங்கும் பட்சத்தில், அந்த மெமொ பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு ஒரு சட்டப்படியான அறிவிப்பை காசோலையை பெற்றவர் வழங்க வேண்டும்.

இந்த அறிவிப்பு வழங்குவது மிக கட்டாயமானதாகும்.

‪என்ன‬ ‪செய்ய‬ வேண்டும் : 1


காசோலையை கொடுத்தவருக்கு முறைப்படி சட்ட அறிவிப்பை காசோலையை பெற்றவர் அனுப்புகிறார்.
.
அறிவிப்பு வழங்கிய பின்னர் காசோலை கொடுத்தவர் அறிவிப்பை பெற்றுக்கொண்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும்.

15 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் காசோலை கொடுத்தவர் பணம் தரவில்லை.
காசோலை வழங்கியவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பான 15 நாட்கள் முடிந்ததும், அதன்பின்னர் 30 நாட்களுக்குள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குமார் மீது காசோலை மோசடி வழக்கை காசோலை பெற்றவர் தாக்கல் செய்யலாம்.

இந்த கால அளவில் ஏதாவது தவறு ஏற்பட்டால், காசோலை மோசடி வழக்கு தொடரமுடியாது.

என்ன ‎செய்யக்‬ ‎கூடாது.


காசோலையை 16.05.2015 அன்று வங்கியில் பணம் வசூலிக்க காசோலை பெற்றவர் தாக்கல் செய்கின்றார். காசோலை கொடுத்தவர் கணக்கில் பணம் இல்லை என்று வங்கியாளர் காசோலையை பெற்றவரிடம் தெரியப்படுத்துகின்றார்.

காசோலை கொடுத்தவரை, காசோலை பெற்றவர் தொடர்பு கொண்டால், சற்று பொறுத்து கொள்ளுங்கள் இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை கொடுத்து விடுவேன் என்கின்றார்.
அவர் பேச்சை கேட்டு காசோலை பெற்றவர் சட்டப்படியான நோட்டிஸ் 30 நாட்களுக்குள் அனுப்பாமல் இருக்கிறார்.
ஒரு மாதம் கழிகின்றது.
பணம் தரவில்லை.
பணத்தை சங்கரன் கேட்டால், காசோலை கொடுத்தவர் பணம் கொடுக்க மறுக்கின்றார்.
30 நாட்களுக்குள் சட்டப்படியான அறிவிப்பு அனுப்பவில்லை என்பதால்.
இப்போது திரும்பி வந்த காசோலையை வைத்து வழக்கிடமுடியாது.

என்ன செய்ய வேண்டும் : 2


காசோலையை தாக்கல் செய்வதற்கான கால அளவு குறிப்பிட்ட தேதியில் இருந்து மூன்று மாதம் வரை இருப்பதால், திரும்பவும் ஒரு முறை அந்த காசோலையை பெற்றவர் வங்கியில் தாக்கல் செய்யவேண்டும்.
அது திரும்பி வந்த பிறகு, உடனடியாக காசோலையை கொடுத்தவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்ப வேண்டும்.
அனுப்புகின்ற அந்த சட்ட அறிவிப்பில் முதலாவதாக பணம் வசூலிக்க காசோலை வங்கியில் போட்ட விபரத்தையும், காசோலை திரும்பி வந்த விபரத்தையும், காசோலையை கொடுத்தவர் பணத்தை ஒரு மாதத்துக்குள் தருவதாகக் கூறியதால் சட்டப்படியான அறிவிப்பு வழங்காமல் இருந்ததையும் தெளிவாக அதில் குறிப்பிடவேண்டும்.

பணத்தை வசூலிக்க குறிப்பிட்ட தேதியில் இருந்து மூன்று மாதம் எத்தனை முறை வேண்டுமானாலும் வங்கியில் அந்தக் காசோலையை தாக்கல் செய்யலாம்.
காசோலை திரும்பி வந்ததும் சட்ட அறிவிப்பு வழங்கலாம்.
ஆனால், கடைசி 15 நாட்கள் இருக்கும் போது தாக்கல் செய்து, காசோலை திரும்பி வந்தால், காசோலையை வழங்கியவர் சொல்லும் கதைகளை (பணத்தை இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்) கேட்காமல் சட்ட அறிவிப்பு வழங்குவது நல்லது.
அல்லது காசோலை வழங்கியவர் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், புதிதாக ஒரு காசோலையை அவரிடம் பெற்ற பிறகே, அவர் நமக்கு பணத்தை கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.

காசோலை அளித்தவர்‬ இறந்துவிட்டால்‬?


வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் உள்ள உறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.
வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அதன் பின்னர் வங்கியானது வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை கழிக்க முடியாது.
வாடிக்கையாளர் இறந்துவிட்டார் என்று வங்கி காசோலையை திருப்பி அனுப்பினாலும் அதன் அடிப்படையில் காசோலை மோசடி வழக்கிடமுடியாது ஏனெனில் சட்டப்படியான அறிவிப்பை காசோலை வழங்கியவருக்கு மட்டுமே அனுப்பவேண்டும்.
மேலும் இறந்தவர் மீது குற்றவியல் வழக்கு தொடரமுடியாது.
ஆனால், காசோலை கொடுத்தவரின் வாரிசுதாரர்கள் மீது சிவில் வழக்கு போடலாம். இறந்தவர் ஏதாவது சொத்தை விட்டு சென்றால் அந்த சொத்தின் மீது நீதிமன்றத்தின் வாயிலாக உரிமை கோரலாம்.
இறந்தவருக்கு எந்தவித சொத்தும் இல்லையென்றால் இறந்தவர் கடனை அடைக்க அவரின் வாரிசுதாரர்கள் கடமைபட்டவர்கள் அல்ல.
வாரிசுதாரர்களின் கடமையானது இறந்தவரின் சொத்தில் அடையும் உரிமை அளவே ஆகும்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Procedure of adjourn in Courts | நீதிமன்ற வாய்தா நடைமுறைகள் என்ன?Procedure of adjourn in Courts | நீதிமன்ற வாய்தா நடைமுறைகள் என்ன?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 வாய்தா நடைமுறைகள் என்ன? ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது,அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா

சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்கு பதியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம். உத்தரவுசமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்கு பதியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம். உத்தரவு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்கு பதியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம். உத்தரவு !!! சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில்

criminal case should not be prosecuted in the civil dispute / சிவில் பிரச்னையில் கிரிமினல் வழக்கு பதியக்கூடாது : போலீசுக்கு ஐகோர்ட் அறிவுரை.criminal case should not be prosecuted in the civil dispute / சிவில் பிரச்னையில் கிரிமினல் வழக்கு பதியக்கூடாது : போலீசுக்கு ஐகோர்ட் அறிவுரை.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 16 சிவில் பிரச்னையில் கிரிமினல் வழக்கு பதியக்கூடாது : போலீசுக்கு ஐகோர்ட் அறிவுரை criminal case should not be prosecuted in

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.