- கிராமக் குற்ற குறிப்பேடு (Village Crime Note-Book), இதில் கண்காணிப்பு பதிவேடு (Surveillance Register), தீய நடத்தை உடையவர் பட்டியல் அல்லது விசாரணை
- குற்ற பதிவேடு (Crime Register) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவுகளின் படி செய்யப்பட்ட குற்றங்கள், சம்பவங்கள், சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள், பிறவற்றை காட்டும் குற்ற விவரப் படங்கள் (Crime Maps)
- தலைமறைவான மற்றும் தப்பியோடிய குற்றவாளிகள் பற்றிய பதிவேடு
- குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஈடோடிக் கும்பல்களின் நடமாட்டம் குறித்த பதிவேடு
- அறிக்கை பதிவேடு (Report Register)
- திருட்டு பொருள் குறித்த பதிவேடு : இது காவல் நிலையத்தில் பொருள் விவரங்காட்டும் பதிவேடாகும். காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் பொருள்களையும், காவல் நிலையத்திலிருந்து வெளியில் கொண்டு செல்லப்படும் பொருள்களையும் இந்த பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். புலன் விசாரணையின் போது குற்றங்கள் தொடர்புடைய பொருள்கள் கைப்பற்றப்பட்டிருக்கும் போதும் மற்றும் எதிரிகள் கைது செய்யப்பட்டிருக்கும் போதும் எதிரிகளின் வசமிருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கும் போதும் அவைகளையும் இந்த பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
- தற்செயல் வருகையாளர் பதிவேடு (Casual Visitors Register)
- காவலாளி பணிநேர மாற்றுப் பதிவேடு (Sentry Relief Book) : இதில் காவல் நிலையத்திலும் மற்றும் காவல் நிலைய காவல் (Lock – Up) பணியில் இருந்தவர்கள் விவரம், காவலாளியின் கையொப்பம், பொறுப்பேற்ற விவரம் ஆகிய பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் காவலாளி மாற்றப்படும் போது, காவல் அறையில் எதிரிகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்ற விவரத்தையும், அவர்களுக்கு விலங்கு போடப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்ற விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
- வழக்கமான குற்றவாளிகளின் குறித்த விவரக் குறிப்பேடு (History Sheet). இந்த குறிப்பேடு இரண்டு வகைப்படும்.
- முதல் வகுப்பு வழக்கமான குற்றவாளிகள் குறித்த விவரக் குறிப்பேடு (Class ‘A’ History Sheet). இது கூட்டு கொள்ளையர் (Dacoits), கன்னமிடுபவர் (Burglars), கால்நடைகளை திருடுபவர் (Cattle Thief), சரக்கு இரயிலில் பொருள்களை திருடுபவர், திருட உடந்தையாக இருப்பவர் தொடர்பானதாகும்.
- இரண்டாம் வகுப்பு வழக்கமான குற்றவாளிகள் குறித்த விவரக் குறிப்பேடு : இது மேற்குறிப்பிட்ட குற்றங்கள் அல்லாத பிற குற்றங்களை வழக்கமாகச் செய்யும் குற்றவாளிகள் தொடர்பானதாகும்.
கிராம குற்ற குறிப்பேடு பற்றி முழு விளக்கம்.
Categories:
ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.