தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(1), 6(3) மற்றும் 7(1)ன் கீழ் தகவல் கோரி
மனு.
அனுப்புதல்:
பெறுதல்:
பொது தகவல் அலுவலர்
பொருள்:
சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அணைத்து சார்பதிவாளர் முதல், அலுவலக உதவியாளர் வரை, அனைவரின் கீழ்கண்ட தகவல்கள் வழங்க வேண்டுகிறேன். தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் நான் கோரிய தகவல்கள் சான்றிட்டு வழங்க வேண்டுகிறேன்.
மதிப்பிற்குரிய அலுவலர் அவர்களுக்கு,
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-இன்படி தகவல்கள் தெளிவாகவும் ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும். பொதுவான விளக்கக் குறிப்புகள் ஏற்கக்கூடியதல்ல. மனுதாரருக்கு தனித்தனியாக ஒவ்வொரு இனத்திற்கும் பொருத்தமான தகவல்கள் அளிக்க பொதுத்தகவல் அலுவலர் பணிக்கப்படுகிறார் என்று TNIC ஆணை எண். 40473/B/2011 நாள் 08/03/2012. மாநிலத் தகவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைக் கடைபிடித்து எனக்கு தகவல் வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு அரசாங்க பணிக்கு யார் பொறுப்பு என்பதனை உச்சநீதிமன்றம் வழக்கு எண் 6237/1990 தீர்ப்பு நாள் 5-11-1993 லக்னோ வளர்ச்சி அதிகாரக்குழு, Vs. M k குப்தா என்பவர் வழக்கில் தெளிவான சட்ட விளக்கம் அளித்துள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ன் பிரிவு 2 உட்பிரிவு e f h i j, பிரிவு 4 உட்பிரிவு 1 a b இன்படி, கீழ்கண்ட தகவல்களை வழங்கவும் ஆய்வு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டுகிறேன்.
கீழ்க்காணும் கோரிக்கைகளுக்கு, உரிய தகவல்களை ஆவணங்களை, மின் பதிவுருக்களை எந்த வடிவில் உள்ளதோ,அதே வடிவில் வழங்கவும், மற்றும் இதர தகவல்களையும் வழங்கவும் வேண்டுகிறேன்.
- தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அணைத்து பணியாளர்களின் பணிப்பதிவேட்டிலிருந்து, அவர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, ஓய்வு பெறும் தேதி, அவரது காலமுறை ஊதியம், தற்போது எந்த ஊதிய விகிதத்தில் அவர் சம்பளம் பெறுகிறார், அவரது அலுவலக முகவரி போன்ற தகவல்களை வழங்குவதற்கு தடையேதுமில்லை. மாநில தகவல் ஆணைய வழக்கு எண்: 23538/F/2013 (55337/F/2012); நாள்: 09.09.2014.தகவல் ஆணையத்தின் தீர்ப்பின் படி அனைவரின் முழு கோப்பின் நகல்கள் தருக.
- தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அணைத்து பணியாளர்களின் சம்பந்தப்பட்ட பணி ஆணை, கல்வித்தகுதி ஆவணங்கள், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவைகளை தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவின்படி வழங்க தடையேதுமில்லை. மாநில தகவல் ஆணைய ஆணை எண்: 8107/D/2014 ; நாள்: 13.06.2014.தகவல் ஆணையம் தீர்ப்பின்படி அனைவரின் முழு கோப்பின் நகல்கள் தருக.
- தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அணைத்து பணியாளர்களின் பெயர், பதவியின் பெயர் மற்றும் அலுவலகம் முகவரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய எண், Email id தகவல் தருக.
- தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அணைத்து பணியாளர்களின் 2022 மற்றும் 2023-னாம் ஆண்டிற்கான அவர்கள் செலுத்திய தொழில் வரி ரசீதுகள் சான்று நகல் தருக.
- தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அணைத்து பணியாளர்களின் ( I’d card ) அடையாள அட்டையின் சான்று நகல் தருக.
- தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அணைத்து பணியாளர்களின் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பணிகள் SEC 4(1)(b)(ii) -ன் கீழ் பராமரிக்கப்படும் விபரங்களை பொது தகவல் அலுவலர் வழங்க வேண்டும்.தமிழ்நாடு தகவல் ஆணைய தீர்ப்பு வழக்கு NC 4058/ &tprhuiz/E/2021, SA 11241/E/2021. 5 .
- தங்கள் அலுவலகத்தின் செயல் மற்றும் பணிகள் SEC 4(1)(b)(i) -ன் கீழ் பராமரிக்கப்படும் விபரங்களை பொது தகவல் அலுவலர் வழங்க வேண்டும். தமிழ்நாடு NC 4058/ &tprhuiz/E/2021 SA 11241/E/2021. TNSIC தீர்ப்பின்படி தகவல்கள் தருக.
- தங்கள் சார்பதிவாளர் அலுவலகத்திலும் அதன் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் அலுவலகங்களிலும் பராமரிக்கபடும் பதிவேடுகள் பெயர் மற்றும் பராமரிக்கப்படும் காலம் விபரங்களை பொது தகவல் அலுவலர் வழங்க வேண்டும். தமிழ்நாடு தகவல் ஆணைய NC 4058/ &tprhuiz/E/2021 SA 11241/E/2021. TNSIC தகவல்கள் தருக.
- தங்கள் அலுவலகத்தில் 2023 ஜனவரி மாதம் முதல் இன்றுவரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுகளின் பட்டியல், கோப்பு எண், மனுதாரர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை பொது தகவல் அலுவலர் தகவல் உரிமை சட்டத்தில் மனுதாரருக்கு வழங்க வேண்டும் தமிழ்நாடு தகவல் ஆணைய தீர்ப்பு வழக்கு vz: SA 9517/E/2022.đபடி தகவல்கள் தருக.
- தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அணைத்து பணியாளர்களின் Personnel and Administrative Reforms (A) Department Secretariat, Chennai-600 009. Panguni Thiruvalluvar Aandu 2041.Letter No. 11927/A/2010, dated: 18-03-2010. அனுமதி பெற்று வாங்கிய சொத்துக்கள் தொடர்பான முழு கோப்பின் நகல்கள் தகவல் தருக.
- RTI-யின்படி அரசு அலுவலர்கள் பணிபதிவேடு, பதவி உயர்வு ஆணை, கல்விதகுதி, சாதி சான்றிதழ், தன்பதிவேடு, சம்பள பதிவேடு, ஒழுங்கு நடவடிக்கை கோப்பு, பதவிமூப்பு பட்டியல் உட்பட ஆவணங்கள் ரகசிய ஆவணம் தனிநபர் ஆவணம். மூன்றாம் நபர் ஆவணம் என்றுவகைப்படுத்தப்படவில்லை என்று தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாகச்சீர்திருத்தத்துறை கடித எண் 36030/V2/2017-1 நாள்.1.11.2017 ஆம் தேதியிட்ட கடிதம் படி தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அணைத்து பணியாளர்களின் தகவல்கள் தருக.
- பத்திர பதிவின் போது என்ன ஆவணம் இணைக்கபடவேண்டும் என்ற அரசாணையின் நகலை தருக.
13 தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, மற்றும் மாநில பத்திர பதிவுத்துறை தலைமையகம், பிறப்பித்த ஆணையை மதித்து, இடைத்தரகர்களை தங்களது அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை என்று உறுதிப்படுத்தும் தங்களது அலுவலக CCTV பதிவு காட்சிகளை 25/06/2024ஆம் தேதி முதல் 25/07/2024 வரை தர வேண்டுகிறேன்.
14 தங்களது அலுவலகத்திற்குள் பத்திர பதிவு செய்ய வரும் நபர்கள் தாங்களாகவே தங்களது ஆவணங்களை எடுத்துக்கொண்டு வந்து பத்திரப்பதிவு செய்கிறார்களா அல்லது இடைத்தரகர்களின் கையில் ஆவணங்கள் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு தங்களது அலுவலக சிசிடிவி பதிவு காட்சிகளை 25/06/2024 ஆம் தேதி முதல் 25/07/2024 தர வேண்டுகிறேன்.
15 தங்களது ஆளுமையின் கீழ் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மாண்புமிகு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. திருமதி இந்திரா பானர்ஜி அவர்கள் பிறப்பித்த ஆணையின்படியும், (WP.15640/2018), தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை ஆணை எண். 353 இன் படியும், அரசு மற்றும் நீதிமன்றம் விதித்த ஆணைகளின்படி அனைத்து அரசு அலுவலர்களும் அடையாள அட்டை அணிந்து தான் பணிபுரிகிறார்கள் என்பதை நிரூபிக்கும் பொருட்டு தங்களது அலுவலக சிசிடிவி பதிவு காட்சிகளை 25/06/2024 ஆம் தேதி முதல் 25/07/2024 ஆம் தேதி வரை தர வேண்டுகிறேன்.
16 அரசு மற்றும் நீதிமன்றம் விதித்த ஆணைகளின்படி தாங்களும் தங்களது அலுவலக பணியாளர்களும் நடந்து கொள்ளவில்லை (அடையாள அட்டை அணியவில்லை) என்பதை உறுதிப்படுத்தும் சிசிடிவி பதிவு காட்சிகளை 25/06/2024 ஆம் தேதி முதல் 25/07/2024 தர வேண்டுகிறேன்.
17 தமிழக அரசு நன்னடத்தை விதி 1973 விதி 7 சார் விதி 2 ஐ மதித்து, சார்பதிவாளர் ஆகிய தாங்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் நாளது தேதி வரை தங்களது உயர் அலுவலர்களுக்கு தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் பட்டியலிட்டு வழங்க வேண்டுகிறேன்.
18 பொதுத்தகவல் அலுவலர் ஆகிய தாங்கள் 25/06/2024 ஆம் தேதி முதல் 25/07/2024 வரையிலான கால கட்டத்தில் நாட்குறிப்பு பதிவேட்டில், தாங்கள் குறிப்புரை எழுதி கையெழுத்திட்ட பதிவுகளின் அனைத்து பக்கங்களையும் சான்றிட்ட நகல்களாக வழங்க கோருகிறேன்.
19 மேற்படி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அடமான பத்திரத்தை பைசல் செய்ய எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு விதித்துள்ள உத்தரவு, ஆணை, சுற்றறிக்கை, சட்டம், விதி போன்ற நகலினை சான்றொப்பமிட்டு வழங்க வேண்டுகிறேன்.
20 ஒரு அரசு அலுவலர் தனது பணியிடத்தில், வேலை நேரத்தில் இல்லாமல் வேறு எங்காவது பணிக்கு சென்றாலோ அல்லது விடுமுறையில் சென்றாலோ அதன் விபரத்தை அவர் கட்டாயம் நடமாட்ட பதிவேட்டில் (Movement Register) பதிவு செய்யவேண்டியது அவசியம். அவ்வாறான நடமாட்ட பதிவுகளை காட்டும் பொதுத்தகவல் அலுவலர் அவர்கள், 25/06/2024 ஆம் தேதி முதல் 25/07/2024 வரையிலான காலகட்டத்தில் செய்த அனைத்து பதிவுகளையும் சான்றிட்ட நகல்களாக வழங்க கோருகிறேன்.
(ஆதாரம் – (GO – Ms.No 24, Personel and Administrative Reforms (AR-1 Department, Dated 17/02/2010)
The administrative Reforms committee constituted under the championship of Dr.Justice AK Rajan Retired Judge of Madras High court has recommended that staff movement should be strictly monitored and the movement Register shall be maintained and checked by the head office every day.) (LR No11850/A/2010-1, Dated 28/06/2010).
- பொதுத் தகவல் அலுவலர் ஆகிய தாங்கள் அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்பட்டபோது, தாக்கல் செய்த சொத்து விபரங்களையும்,கல்வித்தகுதி சான்று,மருத்துவச் சான்று ஆகியவற்றையும் சான்றிட்ட நகல்களாக வழங்கக் கோருகிறேன்.
22 குன்னத்தூர் சார்பதிவாளர் பதிவாளர் அலுவலகத்தில் அசல் ஆவணம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய இயலுமா என்ற தகவலை தருக
23 குன்னத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதியின் 222/2024
663/2024 2723/2023. 1181/2024 3295,,/2024 போது தாக்கல் செய்த அசல் ஆவணத்தின் நகலை தகவலாக தருக
விதிமீறல்களுக்கு துணைபோகும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யுங்கள்
மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
HC takes serious view of unauthorised constructions in Chennai
நீதிமன்ற உத்தரவு
W.P. No.25355 of 2015
1.D. Gopalakrishnan 2.R.Vadivelu vs
The Commissioner
விதிமீறல்களுக்கு துணை போகும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தால்தான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
குறிப்பு:
மேலே கோரிய சான்று நகல்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் சான்றாவணமாக சமர்ப்பிக்க வேண்டியதிருப்பதால், ஒருங்கிணைந்த நகலர் விதி 1971 இன்படி மிகவும் அவசரமாக வழங்கிடக் கோருகிறேன்.
இப்படிக்கு