GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் கிராமசப கூட்டத்தில் கலந்து கொண்டு என்ன செய்ய வேண்டும்?

கிராமசப கூட்டத்தில் கலந்து கொண்டு என்ன செய்ய வேண்டும்?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

15.08.2024 – ஆகஸ்டு 15.

கிராமசப கூட்டத்தில் கலந்து கொண்டு என்ன செய்ய வேண்டும்?

  1. முதலாவது முறையாக கிராம சபையில் கலந்து கொள்பவராக இருந்தால், அக்கூட்டம் முழுவதும் வேடிக்கை மட்டும் பாருங்கள். ஓரிரு கூட்டங்களுக்கு பிறகு உங்களுக்கு நம்மால் கிராம சபையில் பேச முடியும் என்று உங்களுக்கே உறுதிபட தெரிந்தால் சபையில் பேசுங்கள்
  2. சபையில் சென்று அமர்ந்தவுடன் வருகை பதிவேட்டை கேட்டு அதில் உங்கள் வருகை பதிவை கையொப்பம் இட்டு உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
  3. வாழ்த்துக்கள் கூறி கிராம சபை அஜெண்டாவை வாசிக்க ஆரம்பிப்பார்கள். (ஒவ்வொன்றாக கவனித்து அமைதி காக்கவும்)
  4. அவர்கள் , அவர்களின் நலன்கருதி தொடர்ந்து வாசித்து கொண்டே செல்லுவார்கள். நீங்கள் தான் அதை நிறுத்த சொல்லி ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொன்றின் மீதும் விவாதம் நடத்த சொல்ல வேண்டும்.*
  5. ஒன்று முடிந்த பிறகு அடுத்த அஜெண்டாவிற்க்கு செல்ல வேண்டும்.
  6. கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு 1/2 மணி நேரம் ஆகியும் நமது ஊராட்சி மக்கள் தொகை கணக்கின்படி 100 பேருக்கு மேல் வருகை தந்துள்ளனரா என்பதை கவனிக்க வேண்டும்.
  7. குறிப்பிட்ட மக்கள் தொகை கீழ் மக்கள் இருந்தால் அக்கூட்டத்தில் தலைமை தாங்குபவரிடம் எடுத்து கூறி கூட்டத்தை வேறு தேதிக்கு மாற்றி வைக்க சொல்ல வேண்டும்.
  8. ஆதாரமாக டைம் ஸ்னாப்புடன் போட்டோ அல்லது வீடியோ எடுத்துகொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் செய்யுங்கள்.
  9. இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் மக்கள் அதிகம் அளவில் கலந்து கொள்ள அவர்களே வழிவகை செய்வார்கள் செய்தாக வேண்டும்.
  10. அடுத்தபடியாக ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு அஜெண்டாவையும் வாசிக்கும்போது அதில் பொது மக்களுக்கு உடன்பாடு இல்லை என்று நீங்கள் உணர்ந்தால் அதன் மீது விளக்கம் அளிக்கும் வரை அமைதி காக்க வேண்டும்.
  11. தேவையற்ற கூக்குரல்களுக்கு இடையே இந்த விஷயத்துக்கு போதிய விளக்கம் அளிக்கும் வரை அடுத்த கட்ட நகர்விற்க்கு சற்றேனும் இடமளிக்காமல் அமைதி காக்கவும்.
  12. தொடர்ந்து அடுத்த அஜெண்டாவிற்க்கு அவர்கள் பயனித்தால் தலைவர் அவர்களே இந்த விஷயத்துக்கு விளக்கம் அளித்து பிறகு அடுத்த விஷயத்தை பேசுங்கள் என்று உறுதியாக நிற்க வேண்டும்.
  13. இறுதியாக சண்டை எழும்பும் அல்லது பொய்யாகவோ அல்லது மெய்யாகவோ ஓர் விளக்கம் கொடுப்பார்கள்.
  14. இதே போல எல்லா அஜெண்டா மீதும் விவாதம் அமைத்து முடித்து விட்டு…
  15. கடந்த காலங்களில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் மீது நடவடிக்கை பற்றி விவாதித்து விளக்கம் கேட்க வேண்டும்.
  16. போதிய விளக்கம் அளிக்கும் வரை அங்கேயே நிற்க வேண்டும்.
  17. நம்மை பயமுறுத்த அவர்கள் இவ்வாறு சொல்லுவார்கள்…

என்ன சொல்லுவார்கள் என்றால்…???

  1. வந்துள்ள அதிகாரிகளை அதிக நேரம் காக்க வைக்க கூடாது. சீக்கிரம் முடிங்கன்னு சொல்லுவார்கள் மேலும்
  2. இல்லை என்றால் நாம் இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் நமக்கு வரவேண்டிய திட்டங்கள் நமக்கு வராது. இதான் நம்ம ஊருக்கு வந்த அதிகாரிக்கு கொடுக்குற மரியாதையான்னு கேட்பார்கள்…!!??
  3. நூறுநாள் வேலை தர மாட்டார்கள் என்று பயமுறுத்துவார்கள்.
  4. †கிராம சபை கூட்டத்தில் இப்படி கேள்வி கேட்டா நமக்கு எதும் செய்யமாட்டார்கள் அதற்க்கு யார் கேள்வி கேட்கிறீர்களோ அவர் மேலேயே பழியை போடவும் வாய்ப்பு உள்ளது.*
  5. ஏதேதோ சொல்லி மற்றும் செய்து கிராம சபையை முடிக்க முயற்சி செய்வார்கள். இடம் கொடுக்க கூடாது.
  6. தலைவர் அவர்களே நாங்கள் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளிக்கும் வரை நாங்கள் கூட்டத்தை நிறைவு செய்ய விட மாட்டோம் என்று அங்கே அமர்ந்து அமைதியாக இருக்க வேண்டும்.
  7. தலைவரின் ஆதரவாளர்கள், பேசுவார்கள் கோபமூட்டுவார்கள் தூசி போன்று தள்ளி விட்டு விளக்கம் வரும் வரை அமைதி காக்க வேண்டும்.
  8. பிறகு ஊராட்சியில் பயன்படுத்தி வரும் அனைத்து வங்கி கணக்கு புத்தகங்களுடன் அனைத்து பதிவேடுகள் ஆவணங்கள் தணிக்கை அறிக்கைகள் என அனைத்தையும் மக்கள் பார்வைக்கு வைக்க சொல்ல வேண்டும்.
  9. அனைத்து ஆவணங்களையும் குறிப்பாக அனைத்து வங்கி கணக்கு புத்தகங்களையும் பரிசோதித்து பார்க்க வேண்டும்.
  10. சோதித்து பார்த்ததில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளை ரப்(தனி) நோட்டில் எழுதி வைத்து கொண்டு மொத்தமாக கேள்விகள் எழுப்பி விளக்கம் அளிக்கும் வரை அமைதி காக்க வேண்டும்.
  11. உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தபின்…
  12. உங்களுடைய புதிய தேவைகளை தீர்மான புத்தகத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளுங்கள்
  13. பிறகு தீர்மானம் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்து தேவைகளையும் வாங்கி படித்த பார்த்த பிறகு அல்லது பொது மக்கள் மத்தியில் படித்து காண்பிக்க சொல்லி அதில் உங்களுக்கு மன நிறைவு என்றால் அந்த தீர்மானம் புத்தகத்தில் இறுதியாக கையொப்பமிடுங்கள்.
  14. கிராம சபை தீர்மானம் மிக வலிமையானது இதோ மக்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள் என்று ஏதேதோ காரணங்களுக்கும் அல்லது அவர்களின் சொந்த தேவைகளை எழுதிக்கொள்வார்கள். ஆகவே காலி இடங்கள் ஏதும் இல்லாமல் வரிசை எண்கள் இருக்கிறதா என்பதை அனைத்து பக்கங்களை பார்த்து கையொப்பமிடுங்கள்.
  15. மொத்தத்தில் அது ஒரிஜினல் தீர்மான புத்தகம் தானா என உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.
  16. உங்கள் பகுதியில் உள்ள துணிச்சலான 4-5 இளைஞர்கள் நான்கு திசைகளிலும் இருந்து வீடியோ எடுத்து சோசியல் மீடியாக்களில் பதிவேற்றுங்கள்.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

How to file the case against false complainer | பொய் புகார் அளித்தவர் மீது நாம் வழக்கு போடுவது எப்படி?How to file the case against false complainer | பொய் புகார் அளித்தவர் மீது நாம் வழக்கு போடுவது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

POCSO ACT 2012 போக்சோ சட்டம் பற்றிய விளக்கம்.POCSO ACT 2012 போக்சோ சட்டம் பற்றிய விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 96 POCSO ACT) 2012 இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். [1] இதனைச் சுறுக்கமாக போக்சோ சட்டம் அல்லது

காவல் நிலையங்களில் விசாரணைக்கு சம்மந்தப்பட்டவரை அழைக்கும் போது சம்மன் அனுப்ப வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவு.காவல் நிலையங்களில் விசாரணைக்கு சம்மந்தப்பட்டவரை அழைக்கும் போது சம்மன் அனுப்ப வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 காவல் நிலையங்களில் விசாரணைக்கு சம்மந்தப்பட்டவரை அழைக்கும் போது சம்மன் அனுப்பி அழைக்க வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவு. உயர் நீதிமன்ற தீர்ப்பு

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)