GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் POCSO ACT 2012 போக்சோ சட்டம் பற்றிய விளக்கம்.

POCSO ACT 2012 போக்சோ சட்டம் பற்றிய விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

POCSO ACT) 2012

இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும்.

[1] இதனைச் சுறுக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.

இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன்புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.

30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு.

உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.

மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப் பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

சிறப்பு நீதிமன்றங்கள் இதற்காக நிறுவப்பட வேண்டும். வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை – புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் – பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் கூறுகிறது.

உதாரணமாக, “பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும். அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது.”இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது.

குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற்றோரின் முன்னிலையில் செய்யப் பட வேண்டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும்.

அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது.

குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப்படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது.

குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல, குற்றத்தை செய்யும் நோக்கத்துடன் அதற்காக முயற்சித்தவர்களும் குற்றவாளிகள் தான். பாலியல் வன்முறை செய்ய, ஒரு சிறுமியை இழுத்துச் சென்றிருக்கலாம். யாரோ வருகிறார்கள் என்பதற்காக விட்டு விட்டு ஓடியிருக்கலாம். பணம் திருடினாளா என்று பரிசோதிக்கவே தனியாக அழைத்து வந்தேன் என்று ஆசிரியர் கூறலாம்.

வழக்கு வந்தால், குற்றம் நடக்கவில்லையே என்று தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இச்சட்டம், தப்பிக்கும் வழியை மிகச் சரியாக அடைக்கிறது. குற்றத்துக்கு என்ன தண்டனையோ, அதில் பாதியை குற்றம் செய்யும் நோக்கத்துடன் முயற்சிப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.மற்றொரு முக்கிய பிரிவு, பாலியல் வன் கொடுமை குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற்றம் நடந்தது என்று மனுதாரர் ப்ராசிகியூஷன் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை.

குற்றவாளி தான், தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

காவல் துறையும் வெளியிடக் கூடாது என்பது தான் இதன் பொருள்.

பாலியல் வன்முறை தொடர்பாக நாம் அடிப்படையாக புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் சட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒன்று 18-வயதுக்குட்பட்ட சிறார்,
சிறுமியர் யாராக இருந்தாலும் அவர்கள் குழந்தைகளாகக் கருதப்படுகிறார்கள்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளையும் துன்புறுத்தல்களையும் கையாள்வதற்கான போக்சோ (POCSO) சட்டம் நடைமுறையில் உள்ளது.

போக்சோ என்றால் “குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்”.
இச்சட்டம் 2012-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

குழந்தைகளாக அல்லாமல் 18 வயதிற்கு மேல் உள்ள ஆண், பெண் குறிப்பாகப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அனைத்து இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) மூலமாகவும் பணியிடங்களில் பாலியல் வன்முறை நடந்தால் அது பணி தளங்களில் பாலியல் வன்முறைகள், பாதுகாத்தல், தடுத்தல் மற்றும் குறை தீர்த்தல் சட்டம் 2013-ம் மூலமாகவும் கையாளப்படுகிறது.

“குற்றம் புரிந்தவர் குற்றவாளியே

குறிப்பாக குழந்தைகள் மீதான மிக கடுமையான பாலியல் வன்புணர்வு குற்றங்கள் அல்லது வன்புணர்வு அற்ற பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் இப்படி சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று விதமான குற்றங்களில் எந்த குற்றத்தையும் புரிந்தால்கூட அது போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும்.
போக்சோ சட்டம் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்க இயற்றப்பட்ட சிறப்பு சட்டமாகும்.

இச்சட்டத்தின் மூலமாகக் “குற்றச்சாட்டப்படும் நபர் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவுச் செய்தாலே அவர் குற்றவாளி என சட்டம் சொல்கிறது”. ஆனால்,
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அல்லது மற்ற குற்றப்பிரிவு சட்டத்தின் கீழ் பாலியல் வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்படும் நபர் தன்னுடைய குற்றத்தை நிரூபிக்கும்வரை அவர் நிரபராதியாகவே கருதப்படுகிறார்.

எனவே குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்தைப் புரிந்தால் அதை கடுமையான குற்றமாக சட்டம் எடுத்துக்கொள்கிறது.
இந்த குற்றத்தைப் புரிந்தவரைக் குற்றவாளியாகவே பார்க்கப்படுகிறார்.

பாதிக்கப்படும் குழந்தை சொல்லும் ஒரு சாட்சியத்தைவைத்து மட்டும் அவரை குற்றவாளியாக என்று நிரூபிக்கமுடியும்.

இந்த போக்சோ சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்படும் வாக்குமூலம் நீதிபதியின் முன்புதான் பதிவுச் செய்யப்படும்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்கவே சிறப்பு சிறார் நீதிமன்றம், சிறப்பு காவல் அதிகாரிகள் மாவட்ட வாரியாக உள்ளனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் குற்றங்கள் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நட்பு ரீதியாகவும் குற்றவாளிக்கு எதிராக கடுமையாக இயற்றப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுடன் இருக்கும் பெற்றோர், பாதுகாவலர் மற்றும் உறவினர்கள் இந்த குற்றத்தை மூடி மறைக்காமல் இது அவமானத்தை ஏற்படுத்தும் என கருதாமல், அப்படி இது அவமானத்தை ஏற்படுத்தும் என கருதினால் அது தவறு செய்தவர்களுக்குத்தான் என கருதவேண்டுமே தவிர நம் குழந்தைகளுக்கு அல்ல என நினைக்கவேண்டும்.

POSCO ACT ல் FIR பொய்யாக போட்டால் அந்த FIR ஐ Quash செய்ய சொல்லி உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும், அதை trail எடுப்பது waste மற்றும் பெரும்பாலும் pocso case என்றாலே confirm தண்டனை என்ற நிலை உள்ளது

, மேலும் இந்த act ன் மூலம் எத்தனையோ அப்பாவிகள் jail ல் உள்ளனர், மேலும் police ல் சிலர் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்று இந்த pocso act ல் பொய் case போட்டு அவர் வாழ்க்கையை நாசமாக்கி விடுகின்றனர் , தற்போது Pocso act ஐ missuse செய்து நிறைய FIR போடுகின்றனர்,

ஏனென்றால் Posco act ல் யார் மீதாவது FIR போட்டால் அந்த நபர் தான், தான் குற்றம் செய்யவில்லை என்று நிருபிக்க வேண்டும், இதுவே மற்ற எந்த குற்ற வழக்காக இருந்தாலும் அதை நிருபிக்க வேண்டியது Prosecution ன் கடமை ஆகும்.

இந்த சூழலில் பொய்யாக போட்ட FIR ஐ ரத்து செய்ததோடு இல்லாமல் அந்த பொய் புகார் கொடுத்த நபர் மீது criminal action எடுக்க சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.. நேர்மையான practical oriented உள்ள நல்ல மனிதர் போட்ட உத்தரவு..

⚖️ கண்டிப்பாக உங்களுடைய சந்தேகங்களுக்கு தேவையான சட்ட விளக்கங்கள் உங்களுக்கு அளிக்கப்படும் நன்றி

  1. போக்சோ சட்டத்தில், குழந்தைகளின் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகாரை தெரிவிக்க எந்தவொரு கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, எந்தவொரு பாதிக்கப்பட்ட நபரும் (இருபாலரும்), எந்தவொரு வயதிலும் தனது 18 வயதுக்கு கீழ் நேர்ந்த பாலியல் குற்ற சம்பவம் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
  2. புகாரை பாதிக்கப்பட்ட நபர் தான் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக அந்த குழந்தையின் பெற்றோரோ, மருத்துவரோ, உறவினரோ, நண்பரோ, அவர் படிக்கும் பள்ளியோ, அதன் ஊழியர்களோ தெரிவிக்கலாம்.
    https://chat.whatsapp.com/DDL1aecgFrL9yUP9KZ9X5I
  3. இச்சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்படும் புகார்கள் அல்லது அது தொடர்புடைய செய்திகளில், பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர், முகவரி, பள்ளி, புகைப்படம் மற்றும் அருகே உள்ளவர்களின் விவரம் போன்றவற்றை வெளியிடக் கூடாது. அவ்வாறு விவரங்களை தெரிவித்தால் 6 மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
  4. இச்சட்டத்தினை பயன்படுத்தி பிறர் மீது தவறாக புகார் அளிப்பது விசாரணையில் உறுதியானால், சம்பந்தப்பட்ட நபருக்கு ஆறு மாத சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
    அதுவே சிறாருக்கு எதிராக தவறாக புகார் கொடுக்கப்பட்டிருந்தால், அந்த நபருக்கு ஓராண்டுவரை சிறை தண்டனை கிடைக்கும்.
  5. இந்த புகாரை நேரடியாக காவல் நிலையத்திலோ, போக்சோ இ-பாக்ஸ் என்ற இணையதளம் அல்லது 1098 மூலமாகவோ பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Crpc-200 image

Private complaint u/s 200 Crpc, How to raise the in the Court? நீதிமன்றத்தில் u/s 200 Crpc கீழ் எவ்வாறு தனிப்புகார் அளிக்கவேண்டும்?Private complaint u/s 200 Crpc, How to raise the in the Court? நீதிமன்றத்தில் u/s 200 Crpc கீழ் எவ்வாறு தனிப்புகார் அளிக்கவேண்டும்?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

மத்திய அரசின் பூ ஆதார் என்றால் என்ன?மத்திய அரசின் பூ ஆதார் என்றால் என்ன?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 மத்திய அரசின் பூ ஆதார்…என்றால் என்ன பத்திரப்பதிவு செய்ததுமே பட்டா.. அதிக சொத்து வாங்கியவர்களுக்கு சிக்கல்? நில மோசடிகளை தடுக்கும் வகையில்

Caveat Petition

Caveat Petition | full explaination | கேவியட் மனு என்றால் என்ன?Caveat Petition | full explaination | கேவியட் மனு என்றால் என்ன?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 14 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.