GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

VAO working details

கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன ?

கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.
கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
என்னதான் பணிகள் ?

  1. பட்டா பெயர் மாற்றுதல்.
  2. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
  3. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
  4. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
  5. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.
  6. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.
  7. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.
  8. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.
  9. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.
  10. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
  11. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
  12. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
  13. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.
  14. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.
  15. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.
  16. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.
  17. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.
  18. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.
  19. உழவர்கள் நிலப் பட்டாக்களை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.
  20. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.
  21. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.
  22. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.
  23. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.
  24. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
  25. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை.
    இப்படி ஏராளமானப் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ. க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    .”கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்யமுடியும

==============
VAO rules

– கிராம நிர்வாக அலுவலர், அவர் பணி புரியும் கிராமத்தில் தங்கி இருக்க வேண்டும் ! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !!

“எந்த கிராமத்திற்கு ஒருவர் கிராம நிருவாக அலுவலராக நியமனம் செய்யப்படுகிறாரோ அந்தக் கிராமத்திலேயே அவர் வசிக்க வேண்டும். அங்கு அவர் அப்பதவியை வகிக்கும் காலம் வரை அப்படியே தொடர்ந்து வசிக்க வேண்டும். இது குறித்து அரசு பிறப்பித்துள்ள குறிப்புரை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். கிராம நிருவாக அலுவலர்கள் தங்கள் பதவி இடத்திலேயே வசிக்கிறார்களா என்பதை அவர்களது மூத்த அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கத் தவறும் அந்த மூத்த அலுவலர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். “

இவ்வாறு பொது நல வழக்கு ஒன்றில் நமது மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புரைத்துள்ளது.

எனவே கிராம நிருவாக அலுவலர்களே விழிப்புடன் இருங்கள். எந்த கிராமத்தில் பதவியில் இருக்கிறீர்களோ அதே கிராமத்தில் வசிக்க, வாழ பழகுங்கள். “நான் நாமக்கல்லே எங்கவூட்டுலேதான் இருக்கேன். ஏதாவதுன்ன கூப்புடுங்க” என்று கொல்லிமலை கிராம நிருவாக அலுவலர் சொன்னால் அவருக்கு அஷ்டமத்து சனி பிடிக்கப் போகுதுன்னு அர்த்தம். அதுக்கு மேல் அவரை கண்காணிக்காமல் விட்ட வட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் எல்லோருக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்புபடி சிக்கல்தான்.

ஏன் இப்படி ஒரு கெடுபிடியான தீர்ப்பை மாண்பமை தலைமை நீதியரசர் எம்.ஒய்.இக்பால் மற்றும் மாண்பமை நீதியரசர் டி.எஸ். சிவஞானம் அடங்கிய ஈராயம் (டிவிசன் பெஞ்ச்) பிறப்பிக்க வேண்டும்? இது ஒரு நல்ல கேள்வி.

நாம் ‘வி.ஏ.ஒ.’ என்று ரத்தினச் சுருக்கமாக ‘செல்லமாக’ அழைக்கும் (வி.ஏ.ஒ.-க்கள் ஒரு கையெழுத்துக்காக அலையவிடும் போது இந்த ‘செல்லம்’ இருக்காது) இந்த அரசு அலுவலருக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா?

1 . கிராம வருவாய் கணக்குகளை பராமரிக்க வேண்டும்.

  1. நில வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை வசூலிக்க வேண்டும்.
  2. சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சொத்து மதிப்பை கணக்கிடுதல் ஆகியவை தொடர்பாக அறிக்கை அனுப்ப வேண்டும்.
  3. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.
  4. தீ விபத்து, வெள்ளம், புயல், இன்னும் இது போன்ற இயற்கை பேரழிவுகள் குறித்து மொத்த அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
  5. கொலை, தற்கொலை மற்றும் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து காவல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களது புலன் விசாரணைக்கு உதவி புரிய வேண்டும்.
  6. வருவாய் நிலை ஆணையின் விதி 18-பி -இன் கீழ் தங்கள் கிராம எல்லைக்குள் உள்ள சாலையோர மரங்களை கிராம நிருவாக அலுவலர்கள் பாதுகாத்து பேணி வளர்க்க வேண்டும். அம்மரங்களுக்கு சேதம் அல்லது இழப்பு அதாவது அறுத்துக் கொண்டு போதல் (திருட்டு), விழுந்து விடுதல் ஆகியன ஏற்பட்டால் அதற்கு கிராம நிருவாக அலுவலர்களே பொறுப்பு.
  7. வருவாய் நிலை ஆணையின் விதி 18-பி -இன் படி ஆக்கிரமிப்புகளை தடுக்காமல் இருந்தாலோ, அது குறித்து அறிக்கை அனுப்பாமல் இருந்தாலோ அதற்கு கிராம நிருவாக அலுவலர்களே பொறுப்பு ஆவார்கள்.

இப்படி நிறைய பணிகள் கிராமத்தை சுற்றி வி.ஏ.ஒ-க்கு இருக்கின்றன. எனவே தமிழ் நாடு அமைச்சு பணி விதிகளின் விதி 38(b)(iii) படி ஒரு கிராம நிருவாக அலுவலர், அவர் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும் என்று கே.எஸ்.விவேகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில் மேற்கண்டவாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஆணை பிறப்பிக்கும் போது கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு (ஆரம்ப சுகாதார மையங்கள்) நியமனம் செய்யப்படும் மருத்துவர்களையும் சென்னை உயர் நீதிமன்றம் விட்டு வைக்கவில்லை. நகரத்திலோ, மாவட்ட தலைநகரிலோ வசித்துக் கொண்டு தாங்கள் பணியாற்றும் கிராம மருத்துவமனைக்கு மாதத்தில் சில நாட்கள் மட்டும் சென்று பணி செய்யும் பழக்கத்தை சென்னை உயர் நீதிமன்றம் கண்டிக்கும் தொனியில் தனது தீர்ப்பில் கூறியது. அவர்கள் கிராமத்தில் வசிப்பதில்லை என்றும் கூறியது.

எனவே தாங்கள் பணியாற்றும் இடத்தில் வசிக்காத கிராம நிருவாக அலுவலர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவது திண்ணம். சுதாரித்துக் கொள்ளுங்கள் வி.ஏ.ஒ. நண்பர்களே ! அவர்களது மேலதிகாரிகளே !!
அத்துடன் கிராம அரசு மருத்துவர்களே !!!

Constitution of India, Article 226 – Public Interest Litigation – Tamil Nadu Ministeral Service Rules, Rule 38(b)(iii) – Every person appointed as Village Administrative Officer shall reside in village under his charge and shall continue to reside in said village so long as he continuous to hold post – Government’s instruction in this regard to be strictly adhered to – VAOs have innumerable tasks to perform – Held, Writ Petition is disposed of with a direction to initiate action also against Senior Officials who fail to supervise them.

K.S.Vivekanandam v. The Chief Secretary, Government of Tamil Nadu – Madras High Court – M.Y.Eqbal, C.J. & T.S.Sivagnanam, J. – W.P. No. 7922 of 2011 – Decided on 16-6-2011.
Citation : 2011 (5) CTC 515

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தகவல் பேரும் உரிமை சட்டம் 2005 ன் படி கேட்கப்பட்ட கேள்விகள்.தகவல் பேரும் உரிமை சட்டம் 2005 ன் படி கேட்கப்பட்ட கேள்விகள்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 15 தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(1), 6(3) மற்றும் 7(1)ன் கீழ் தகவல் கோரிமனு. அனுப்புதல்: பெறுதல்: பொது

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கீழ் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது எப்படி?காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கீழ் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு

மேலதிகாரியிடம் அனுமதி கோரும் விண்ணப்பம் மாடல்மேலதிகாரியிடம் அனுமதி கோரும் விண்ணப்பம் மாடல்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 பணி செய்து கொண்டிருக்கும் போது ஒரு அரசு அதிகாரி குற்றமிழைத்தால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள மேலதிகாரியிடம் அனுமதி கோரும்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)