GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?

அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?

அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அல்லது அரசு அரசுத் துறையினரின் நடவடிக்கையில் திருப்தி இல்லாத நிலையில் மனுதாரர் ஆகிய நீங்கள் கீழ்க்காணும் நினைவூட்டும் விண்ணப்பத்தை செய்ய முடியும் பயனடைய முடியும் நீங்கள் பயன்படுத்துவீர்கள் தானே?

மனுதார்:

பெறுநர்:

பொருள்:
நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 159வது பிரிவுப்படி நினைவூட்டும் விண்ணப்பம்.

பார்வை:
……………………………………. அலுவலகத்திறகு மனுதாரரால் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பிய மனு. நாள்…………………………

1) மனுதாரராகிய நான் மேலே காணும் முகவரியில் நிரந்தரமாக/தற்காலிகமாக (வாடகைக்கு) குடியிருந்து வருகிறேன். பார்வையில் காணும் கோரிக்கை மனுவினை கடந்த…………………………… தேதியன்று அனுப்பி இன்றுடன்………………….. நாட்கள் முடிவடைந்து விட்டது. நாளது தேதி வரை எனது கோரிக்கை அரசால் நிறைவேற்றுகை செய்யப்படவில்லை. இது தமிழ்நாடு அரசாணை எண்.73/2018 நாள்.11.06.2018 இல் கண்டுள்ள நெறிகளின்படி இது குற்றமுறு நடவடிக்கையாக கருதப்படுகிறது. மேலும் மேற்காணும் அரசாணை விதிகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் பொது மக்களிடம் பெறுகின்ற கோரிக்கை மனுவினை 30 தினங்களுக்குள் நிறைவேற்றுகை செய்ய வேண்டும் என்பதை உறுதி படுத்தி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண். W. P. No. 20527 /2014 and M. P. No. 1/2014 நாள்.01.08.2014 என்ற வழக்கு தீர்ப்புரையில் உறுதி செய்து தீரப்பு வழங்கியுள்ளது. மேற்காணும் அரசாணை மற்றும் தீரப்பு ஆகியவை எனது இந்த கோரிக்கை மனுவுக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 இன் 14 வது பிரிவுப்படி பொருந்தும் என மனுதாராகிய என்னால் கருதப்பட்டு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 159 வது பிரிவுப்படி நினைவூட்டும் முகமாக தங்களுக்கு பணிந்து அனுப்ப படுகிறது.

2) இந்த நினைவூட்டும் விண்ணப்பம் தங்களுக்கு கிடைத்த 15 தினங்களுக்குள் எனது கோரிக்கையை நிறைவேற்றுகை செய்ய தவறும் பட்சத்திலும் அல்லது பதில் வழங்க தவறினாலும் தங்களின் பதில் எனக்கு திருப்தி அளிக்க வில்லை என்றாலும் நீங்கள் உங்களின் கடமையை செய்ய தவறியுள்ளீர்கள் என மனுதாராகிய என்னால் கருதப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள இதுவே ஆவணமாகிவிடும் என்பதையும், அதற்காகும் வேலையிழப்பு /வீண் செலவினங்கள்/வருமான இழப்பு /மன உளைச்சல் ஆகியவற்றுக்கு தாங்களே தார்மீக பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதையும் இதன் மூலம் நினைவூட்டப்படுகிறது.
மனுதார்

தேதி:
இடம்:

இணைப்பு
பார்வையில் காணும் கோரிக்கை மனு நாள்…………………….,…….. நகல்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Fundamental rights அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள – அடிப்படை உரிமைகள்Fundamental rights அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள – அடிப்படை உரிமைகள்

Views: 26 அடிப்படை உரிமைகள் யாது? அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள – அடிப்படை உரிமைகள் அ. பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் ஆ. ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் இ. குழுக்கள் – சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம் ஈ.

ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புக்களை அகற்றப்பட வேண்டும்ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புக்களை அகற்றப்பட வேண்டும்

Views: 14 🔊ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புக்களை அகற்றப்பட வேண்டும். நீதிப்பேராணை மனு எண். W.P.No. 48729 of 2025 – இல் நாள்: 02-01-2026 அன்று மாண்பமை சென்னை

விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல்?விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல்?

Views: 46 *விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல் – வழக்கும் தீர்வும்* Husband name change birth certificate la diverse after . Case apply hc. Wife. Municipal all right it. Hc