நிலத்தில் லே-அவுட் Layout போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல் விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல் Conversion அடுக்குமாடி குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்கம் Directorate of Town and Country Planning DTCP அனுமதி தேவைப்படும்.
இது சென்னை பெருநகர்வளர்ச்சிக் குழுமம் CMDAஅங்கீகாரத் திலிருந்து வேறுபடுகிறது. சி.எம்.டி.ஏ. CMDA உடைய அதிகார வரம்புஎன்பது சென்னை மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகள் வரை வரும்.டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது.
எனவே டீ.டி.சி.பி.அப்ரூவ லுக்கு இங்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி அனுமதியே மிக மிக முக்கியமானது.
அப்ரூவல் வாங்க வேண்டியபகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால் அந்த நிலம் எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின் டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை.
இது தவிர லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
இதில் லே-அவுட் ஒரு கிராமப் பகுதியில் இருந்தால் அந்த கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று அவர்களிடம் நமது லே-அவுட் பிளானை சமர்பிக்கவேண்டும்.
அவர்கள் அதை சரி பார்த்துவிட்டு மாவட்ட டீ.டி.சி.பி. அலுவலகத்துக்கு பிளானை அனுப்பிவைப்பார்கள்.
டீ.டி.சி.பி. அதிகாரிகள் லே-அவுட் பிளானைபல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பிறகு அதற்கு அனுமதி கொடுப்பார்கள் சில சமயங்களில் அவர்களே ஒரு பிளானையும் தயாரித்து கொடுக்கலாம்.
அதில் அவர்கள் சாலை பூங்கா பொது இடம் என்று பிரித்துஇருப்பார்கள்.
அதைத்தான் லே- அவுட் புரமோட்டர் அல்லதுஉரிமையாளர் பின்பற்ற வேண்டும் பின்பற்றுவதோடு மட்டு மல்லாமல் அதில் வேறு எந்த மாற்றமும் செய்யக்கூடாது அந்த பிளானில் உள்ளபடியே பிளாட் Plot களைவிற்கவே விளம்பரம் செய்யவோ வேண்டும்.
24 செண்டுக்கு குறைவான நிலப்பகுதிக்கு கிராமப்பஞ்சாயத்தின் அனுமதியே போதுமானது 1 செண்ட்=435.6சதுர அடிகள் அந்த 24 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியை தனியாக வாங்கவோ அதில் கட்டடம் கட்டவோ பஞ்சாயத்து அனுமதி தேவைப்படும்.
அந்த 24 செண்ட் அளவுக்குமேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் அப்ரூவல் மட்டுமல்லாது வேறு எந்தவிதமான திட்டங்களுக்கும் அனுமதி வழங்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே கிடையாது.
அவை அனைத்துமே டீ.டி.சி.பி. உடையகட்டுப்பாட்டின்கீழ் வரும். எனவே பஞ்சாயத்து அனுமதியை மட்டுமே நம்பி ஒரு நிலப் பகுதியை வாங்குவது நல்ல விசயம் அல்ல.
விவசாய நிலத்தை மட்டுமல்லாது, உற்பத்தி தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றவும் டீ.டி.சி.பி. அனுமதிதேவை.
சான்றாக தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்ற திட்டமிட்டால் அதற்கு நிலத்தின் வரைப்படம் TOPO Plan நிலப் பத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து டீ.டி.சி.பி.அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதவிர குடியிருப்பு பகுதியாக மாற்றிய பிறகு அந்த நிலத்தைஎந்த விசயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவித்து விட வேண்டும் டீ.டி.சி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆராய்வார்கள் பிறகு இந்த நிலத்தைப் பற்றியதகவல்களையும், அதற்கு ஆட்சேபணைகளையும் கேட்டறிய 2 நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுவார்கள்.
எந்த ஆட்சேபணை யும் வரவில்லை என்றால் உடனடியாக Zone Conversion னுக்கு அனுமதி கொடுப்பார்கள்.
நான்கு மாடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்கள்அனைத்துமே அடுக்கு மாடிக் கட்டிடங்களாக கருதப்படுகின்றன இதில் கட்டப்படுகின்ற கட்டிடத்தின்அருகே உள்ள சாலையின் அகலம் நிலத்தின் அகலம் ஃபுளோர் சைஸ் இண்டெக்ஸ் Floor size index கட்டிடத்தின்அகலம் போன்ற எண்ணற்ற நடைமுறைகள் உள்ளன.
இவற்றில் ஒன்று ஒத்து வரவில்லை என்றாலும்அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்படாது.
சான்றாக 10 மாடிக் கட்டிடம் என்றால் அருகே உள்ளசாலையின் அகலம் குறைந்த பட்சம் 80 அடியும், கட்டிடம் கட்டப்படும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டரும் இருக்கவேண்டும். இதில் சிறிது குறைந்தாலும் பிளானுக்கு அனுமதி மறுக்கப்படும்.
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
மத்திய அரசு வழக்கறிஞர்
சென்னை உயர் நீதிமன்றம். 2010/14
விழி கண் மற்றும் கண்காணிப்பு குழு வழக்கறிஞர் தமிழக அரசு