GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் கலப்பு திருமணம் என்பதன் விளக்கம்

கலப்பு திருமணம் என்பதன் விளக்கம்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

கலப்பு திருமணம்…!

நண்பர்களே தயவுசெய்து இந்த செய்தியை முழுவதுமாக படிங்கள் மற்றும் கண்டிப்பாக பகிருங்கள் கலப்பு திருமணம் அல்லது காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கலப்பு திருமணம் என்பதன் விளக்கம் :-

அரசாணை எண்.477 சமூக நலத்துறை நாள்:27.6.75 மற்றும் அரசாணை எண்.1907 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள்:29.9.89 ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி கீழ்க்காணும் வகுப்புகளிடையே நடைபெறும் திருமணங்கள் மட்டுமே கலப்பு திருமணங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

  1. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் – முன்னேறிய வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் இடையே நடைபெறும் திருமணம்.
  2. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் – பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் இடையே நடைபெறும் திருமணம்.

3.தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் – மிகபிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும இடையே நடைபெறும் திருமணம்.

  1. முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் – பிற்படுத்தப்பட்ட அல்லது மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெறும் திருமணம்.

மேற்குறிப்பிடப்பட்ட வகையிலான திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்களின் ஒருவரது சாதியில் ஏதேனும் ஒரு சாதியை குறிப்பிட்டு சாதி சான்று பெற இயலும். இவர்களில் தந்தையின் சாதி அல்லது தாயாரின் சாதி இதில் எதனை அனுசரிக்க வேண்டுமென பெற்றோர்கள் தீர்மானித்து உறுதிமொழி அளிக்கிறார்களோ அந்த சாதியினையே கணக்கிற்கொண்டு சாதி சான்று வழங்கிடலாம். ஒரு குழந்தைக்கு நிர்ணயிக்கும் சாதி தான் மற்ற குழந்தைகளுக்கும் பொருந்தும்.
(அரசாணை எண் 477 சமூக நலத்துறை நாள்:27.6.75) அரசாணை எண் 2டி எண்.17 ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை நாள்:16.8.94)
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே நடைபெறும் திருமணம் கலப்பு திருமணமாகக் கொள்ள கூடாது. மேற்படி சலுகை இவ்வினத்திற்கு பொருந்தாது.
(பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு கடித எண்.1418/பிநசீமி 2001 நாள்:21.5.2001)
மேலும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பழங்குடியினர் / தாழ்த்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என்ற சாதி அடிப்படையில் வருவதாலும் மேற்கண்ட நான்கு இனத்தின் கீழ் செய்யப்படும் திருமணங்கள் மட்டுமே கலப்பு திருமணங்கள் என்பதனாலும் மதங்களின் அடிப்படையில் செய்யப்படும் திருமணங்கள் கலப்பு திருமணங்கள் என கொள்ள இயலாது.(சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை கடித நிலை எண்.235 நாள்:27.7.97)

திருமணம் புரிந்து கொள்ளும் ஆண் / பெண் இருவரில் ஒருவர் பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர் ளுஊ/ளுவு வகுப்பைச் சார்ந்தவர்களாக இருப்பின் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தல் பொருட்டு இத்திருமணம் கலப்பு திருமணமாக கருதப்படும்.(அரசாணை எண்.939 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறைநாள்:24.9.86

#

கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு 2.5 லட்ச ரூபாய் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை 2013 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு அமுல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் பெயர் ”அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்” என்பதாகும்.

இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 500 தம்பதியினருக்குஇந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.ஆனால் இதுவரை இந்த நிதி உதவியை பயன்படுத்திக் கொண்டவர்கள் வெறும் 19 பேர் மட்டும்தான். தமிழகத்தின் ஒருவர் கூட இல்லை.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டியவர்கள் :-

ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருக்கக்கூடாது. திருமணம் செய்து கொண்ட ஓராண்டிற்குள் இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும் என்று நிபந்தனைகள் இருக்கின்றன.

இத்திட்டத்தில் பலனடைய வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு உதவுவதற்காக ”கலப்புத்திருமண தம்பதிகள் சங்கம்” எனும் அமைப்பு முன்வந்திருக்கிறது. அந்த அமைப்புடன் தொடர்பு கொள்வதற்கான எண்: 9442927157

மேலும் சில விவரங்கள் :-

கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டிய சான்றுகள் என்ன…?

கலப்புத் திருணம் செய்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை உண்டு. இதற்கு தம்பதியரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், இருவருடைய குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், திருமண பதிவுச் சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் இரு நகல்கள் தேவை. வட்டாட்சியர் அளவில் கலப்புத் திருமணச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகலை இணைத்து மனு எழுதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் நீங்கலாக, அனைத்து சான்று நகல்களிலும் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும்.

கலப்பு திருமணம் செய்வோர் அரசின் நிதியுதவி பெறுவது எப்படி…?

கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் உள்ளது. திட்டம்-1, திட்டம்-2 என இரு வகைகளில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

திட்டம் 1-ல் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதில் ரூ.15 ஆயிரம் காசோலையாகவும், மீதமுள்ள ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படுகிறது. மேலும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

திட்டம் 2-ல் ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அதில் ரூ.30 ஆயிரம் காசோலையாகவும், ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும். திட்டம் 2-ல் பயன்பெற பட்டம், பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற திருமணமாகி 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும். வருமான, வயது உச்சவரம்பு எதுவும் இல்லை.

திருமணத்தின்போது 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். திருமணப் பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று, மணமகள் மற்றும் மணமகன் ஜாதிச் சான்று, வயதுச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

இந்நிதியுதவி மணமகள், மணமகனிடம் நேரடியாக வழங்கப்படும். அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொண்டால் ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும், ரூ.5 ஆயிரம் காசோலையாகவும் வழங்கப்படும். வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை.

திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருமணத்தின்போது குறைந்தபட்ச வயது 20 ஆகவும், மணமகனின் வயது 40-க்குள்ளும் இருக்க வேண்டும். விதவைச் சான்று, மறுமண பத்திரிக்கை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரை அணுகலாம்.

சமூக நலத்துறையின் மூலம் ஐந்து வகை திருமண நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 2014-15ல் 8747 பேருக்கு ரூ.33.48 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது.

1) மூவலுார் ராமாமிர்தம் நினைவு திருமண நிதியுதவி
2) ஈ.வெ.ரா., மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி
3) அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி
4) கலப்பு திருமண நிதியுதவி
5) விதவை மறுமண நிதியுதவி

குறிப்பு:-

முற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துக் கொண்டால் மட்டுமே கலப்பு மணமாக கருத முடியும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவருக்குள் நடைபெறும் திருமணம், கலப்புத் திருமணமாக கருத முடியாது. தமிழக அரசின் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறையின் கடிதத்தை (கடித எண்.1418/பிநசிபி/2001-1) படியுங்கள். அந்த கடிதத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெறும் திருமணம் கலப்புத்திருமணமாக அங்கீகரிக்கப்படவில்லை.

     ##########################

கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண் அல்லது ஆணின் ஜாதி மாறுபடுமா…?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு உள்ள அரசு சலுகைகளை அவரை மணந்து கொண்ட, பிற ஜாதியை சேர்ந்தவர் அனுபவிக்க முடியுமா?

கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எந்த ஜாதியை சேர்ந்தவர்களாக கருதப்படுவார்கள்?

கலப்பு திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, குடும்ப சொத்தில் உள்ள உரிமைகள் பாதிக்கப்படுமா?

இவற்றை பற்றியெல்லாம் சட்டம் என்ன சொல்கிறது…?

எந்த ஜாதி அல்லது எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பெரும்பாலான சட்டங்கள் ஒன்றாகவே இருக்கும்.

உதாரணமாக :-

குடியுரிமை சட்டம் (Citizenship Act)
வருமானவரிச் சட்டம் (Income Tax Act)
சொத்துரிமை மாற்றுச் சட்டம் (Transfer of property Act)
இந்திய ஒப்பந்தச் சட்டம் (Contract Act)
இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code)
இந்திய சாட்சிய சட்டம் (Evidence Act)

மேலும் அவரவர் சார்ந்துள்ள மதம் அல்லது சமையத்திற்கு ஏற்றார் போலும் சில சட்டங்கள் உள்ளது.

வாரிசுரிமை சட்டம் (Succession Act)
திருமண சட்டங்கள் (Marriage Act)

(கவனிக்கவும் – ஜாதி அல்ல, மதம்)

திருமணத்தை பொறுத்தவரை இந்துக்கள் என்றால் இந்து திருமணச் சட்டமும் (The Hindu Marriage Act)

கிறிஸ்தவர்கள் என்றால் சிறப்பு திருமணச் சட்டமும் ( Special Marriage Act)

முஸ்லீம்கள் என்றால் இஸ்லாமிய சட்டங்களும் (Mohammed Law) பொருந்தும்.

அதேபோல் குடும்ப சொத்தில் வாரிசுரிமை கோருவதற்கு

இந்து என்றால், இந்து வாரிசுரிமை சட்டமும் (The Hindu Succession Act)

கிறிஸ்தவர்கள் என்றால், இந்திய வாரிசுரிமை சட்டமும் (Indian Succession Act)

முஸ்லீம்கள் என்றால், இஸ்லாமிய சட்டங்களும் பொருந்தும்.

இந்து மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் என நம் நாட்டு மக்கள் பின்பற்றும் மதங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளன.

ஆனால் ஜாதி எனப்படும் குலம், சமுதாயங்கள் ஏராளமாக உள்ளது. ஒரே மதத்திலேயே பல்வகை ஜாதிகள் எனப்படும் பிரிவுகள் உள்ளன. நம்முடைய சட்டங்களில் மக்கள் பின்பற்றும் மதங்களை பற்றித்தான் கூறப்பட்டுள்ளதே தவிர, ஜாதியை பற்றி எதுவும் கூறவில்லை.

எனவே பின்பற்றப்படும் மதத்தை பொறுத்து மட்டுமே சட்டங்கள் மாறுமே தவிர, ஜாதியை பொறுத்து எதுவும் மாறாது.

கலப்பு திருமணத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  1. ஒரே மதத்தை சேர்ந்த வேறுபட்ட இரண்டு ஜாதியினர் செய்து கொள்ளும் திருமணம்
  2. ஒரு மதத்தை சார்ந்தவர் மற்றொரு மதத்தை சார்ந்தவரை செய்து கொள்ளும் திருமணம்

மேலே கூறப்பட்டுள்ள முதல் வகையில் மதம் மாற வேண்டிய அவசியம் ஏற்படாது. மதக் கோட்பாடுகளின்படி திருமணம் செய்து கொள்வார்கள். திருமணத்திற்கு முன்னும், பின்னும் ஒரே மதம் என்பதால் சொத்துரிமை, திருமணம் பற்றிய சட்டங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது. ஆனால் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவருக்கு அரசு கொடுத்துள்ள சலுகைகளை அவரை மணந்து கொண்டவர்களும், அவர்களது குழந்தைகளும் அனுபவிக்க முடியுமா? என்ற கேள்வியும், குழந்தைகள் எந்த ஜாதியை சேர்ந்தவர்களாக கருதப்படுவார்கள் என்ற கேள்வியும் இயல்பாகவே எழும்.

இரண்டாவது வகை கலப்பு திருமணத்தில், ஒரு மதத்தை சார்ந்தவர் வேறு மதத்தை சார்ந்த ஒருவரை கலப்பு திருமணம் செய்து கொள்ளும் போது, யாராவது ஒருவர் இன்னொருவரின் மதத்திற்கு மாறி, அந்த மதக் கோட்பாடுகளுக்கு ஏற்ப திருமணம் செய்து கொள்ளக்கூடும். அப்போதும் இருவரும் ஒரே மதமாக இருப்பதால், அந்த மதத்திற்குரிய சட்டங்களின்படி திருமணம் மற்றும் வாரிசுரிமை சட்டங்கள் பொருந்தும். ஆனால் இங்கேயும் குழந்தைகள் என்ன ஜாதி என்ற கேள்வி எழும்.

இந்த ஜாதி குறித்த கேள்விகள் கொண்ட வழக்கு பம்பாய் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ராஜேந்திர ஸ்ரீவஸ்தவா Vs மகாராஷ்டிரா மாநில அரசு (2010-112-Com LR – 762) என்ற வழக்கில் கீழ்க்கண்டவாறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

  1. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினரை சேர்ந்த ஒரு பெண், உயர் ஜாதியை சேர்ந்த ஒரு ஆணை திருமணம் செய்து கொள்வதால், அவள் பிறந்த போது இருந்த ஜாதியில் திருமணத்தால் எந்த மாற்றமும் இருக்காது.

(பம்பாய் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் “ரமேஷ்பாய் தபாய் நாயக் Vs குஜராத் மாநில அரசு மற்றும் பலர் ” என்ற வழக்கில் உறுதிப்படுத்தி உள்ளது)

  1. உயர்ந்த அல்லது முற்பட்ட ஜாதியை சேர்ந்த ஒரு பெண், மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த ஒரு ஆணை, திருமணம் செய்து கொண்டால், தாழ்த்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கு (அதாவது அவளது கணவனின் வகுப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளை) கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளை அவள் அனுபவிக்கலாமா என்ற கேள்விக்கு “அவ்வாறு அனுபவிக்க முடியாது” என்று விடை கூறியுள்ளது உச்சநீதிமன்றம். ( The Hobn’ble SC of india has held that a candidate who had the advantageous start in life being born in a forward community and had much of advantageous life but is transplanted in backward class by adoption, marriage or conversation does not become eligible to the benefits or reservation)
  2. ஒரு கலப்பு திருமணம் அல்லது பழங்குடி இனம் மற்றும் அது அல்லாத பிரிவை சார்ந்த இருவருக்கும் நடைபெற்ற திருமணத்தில், அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தகப்பனாரின் ஜாதியை பெறுவார்கள் என்று அனுமானிக்கப்படுகிறது.

உயர்ந்த ஜாதி ஆணை திருமணம் செய்துக்கொண்ட ஒரு பழங்குடி இனப் பெண்ணுக்கு பிறந்த குழந்தைகள் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற கேள்வி உச்சநீதிமன்றத்தில் ” ரமேஷ்பாய் தபாய் நாயக்” என்ற வழக்கில் எழுந்தபோது, உச்சநீதிமன்றம், அந்த குழந்தைகள் தகப்பனாரின் ஜாதியை பெறுவார்கள் என்று தீர்ப்பு கூறியது.

அதுபற்றி மேலும் கூறுகையில், உச்சநீதிமன்றம், இந்த அனுமானம் இறுதியானது என்றோ திருத்த முடியாது என்றோ கூற முடியாது. அத்தகைய திருமணத்தில் பிறந்த குழந்தைகள் நினைத்தால், தாங்கள் அவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தங்கள் தாயாரால் தான் வளர்க்கப்பட்டோம் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் அவர்களது தந்தை சார்ந்துள்ள உயர் ஜாதியினராக கருதப்படுவதால் அவர்களுக்கு எந்தவித நன்மையுமில்லாததோடு பலவித இழப்புகளுக்கும் ஆளாக நேரிட்டது என்று கருதினால் மேற்கண்டவாறு ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம் (But by no means the presumption is conclusive or irrefutable and it is open to the child of such marriage to lead evidence to show that he / she was brought up by the mother who belonged to the Schedule Caste / Schedule Tribe. By virtue of being the son of a forward caste father he did not have any advantageous start in life but on the contrary suffered the deprivations indignities, humilities and handicaps like any other member of the community to which his / her mother belonged)

ஏற்கனவே கூறியுள்ளபடி குடும்ப சொத்துகளுக்கான வாரிசுரிமையை பொறுத்தவரை அவரவர் சார்ந்துள்ள மதத்தை ஏற்ப இந்து வாரிசுரிமை சட்டமோ அல்லது இந்திய வாரிசுரிமை சட்டமோ பொருந்தும்.

இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் வேறு மதத்தை சேர்ந்தவரை கலப்புத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் இந்து மதத்தில் இல்லாத காரணத்தினால் தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்கான ஒதுக்கீடு போன்றவற்றை கோர இயலாது. அவ்வாறு மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் எந்த மதமாக இருந்தாலும், மேற்படி சலுகைகளை பெற அவர்கள் இந்துவாக இருந்தால் மட்டுமே முடியும்.

   ############################

அரசின் நிதியுதவி பெற என்ன செய்ய வேண்டும்…?

மத்திய அரசின் சமூகநீதி மற்றும் தன்மேம்பாடு அமைச்சகம், அம்பேத்கர் நிறுவனத்தின் மூலம் சமூக ஒருமைப்பாட்டை நிலை நிறுத்த கலப்புத் திருமணத்தை ஊக்குவித்து வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்ளும் இதர வகுப்பினருக்கு இந்தத் தொகை வழங்கப்படுகிறது.

இதற்காக மத்திய அரசு ரூ.2.50 லட்சம் நிதி உதவி வழங்கி மாநில அரசின் மூலம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டம் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க மனுதாரர் மனுவுடன் கல்விச் சான்று, மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

மேலும், திருமண அழைப்பிதழ், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய கலப்பு திருமணச் சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட கலப்பு திருமணச் சான்று, அரசு பதிவு பெற்ற வழக்குரைஞரிடம் ரூ.10-க்கான ஆணை பத்திரம் அசல், முதல் திருமணச் சான்று, திருமண பதிவுச் சான்று, மனுதாரர் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம், மக்களவை அல்லது சட்டப் பேரவை உறுப்பினர் பரிந்துரைக் கடிதம், வங்கியில் இருவரும் சேர்ந்து தொடங்கப்பட்ட கூட்டு வங்கிக் கணக்கு விவரம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

சட்டப்படியான திருமண வயது உடையவர்கள், கலப்பு திருமணமான ஒரு ஆண்டுக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

கலப்பு திருமணம் செய்வோர் அரசின் நிதியுதவி பெறுவது எப்படி…?

கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் உள்ளது. திட்டம்-1, திட்டம்-2 என இரு வகைகளில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

திட்டம் 1-ல் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதில் ரூ.15 ஆயிரம் காசோலையாகவும், மீதமுள்ள ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படுகிறது. மேலும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

திட்டம் 2-ல் ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அதில் ரூ.30 ஆயிரம் காசோலையாகவும், ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.

திட்டம் 2-ல் பயன்பெற பட்டம், பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற திருமணமாகி 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.

வருமான, வயது உச்சவரம்பு எதுவும் இல்லை.

திருமணத்தின்போது 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். திருமணப் பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று, மணமகள் மற்றும் மணமகன் ஜாதிச் சான்று, வயதுச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

இந்நிதியுதவி மணமகள், மணமகனிடம் நேரடியாக வழங்கப்படும்.

அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.

அதன்படி ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும், ரூ.5 ஆயிரம் காசோலையாகவும் வழங்கப்படும். வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

திருமணத்தின்போது குறைந்தபட்ச வயது 20 ஆகவும், மணமகனின் வயது 40-க்குள்ளும் இருக்க வேண்டும். விதவைச் சான்று, மறுமண பத்திரிக்கை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரை அணுக

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Arrest Procedure | with 11 Commands by Supreme Court | கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.Arrest Procedure | with 11 Commands by Supreme Court | கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 46 1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.3. கைது செய்யப்படும் தகவலை

நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து அரசே கட்டிடம் கட்டினால் கூட நடவடிக்கை எடுப்பது எப்படி?நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து அரசே கட்டிடம் கட்டினால் கூட நடவடிக்கை எடுப்பது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு

வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும் ஒருவர் உயிருடன் இருக்கும்போது சம்பாதித்த‍ சொத்துக்களை, அந்த ஒருவர் இறந்தபின் அவரின்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)