GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் கிராம நிர்வாக அலுவலர்களுடைய கடமைகளும், பொறுப்புகளும்

கிராம நிர்வாக அலுவலர்களுடைய கடமைகளும், பொறுப்புகளும்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

கிராம நிர்வாக அலுவலர்களுடைய கடமைகளும், பொறுப்புகளும்

  1. கிராம கணக்குகளை பராமரித்தலும், பயிராய்வு செய்தலும்.
  2. நிலவரி, கடன்கள் பஞ்சாயத்து வரிகள், மேம்பாட்டு வரிகள் மற்றும் அரசுக்கு சேர வேண்டிய இதர தொகைகளை வசூல் செய்தல்.
  3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகியவை வழங்கத் தேவையான அறிக்கைகள் அளித்தல்.
  4. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளிலிருந்து கடன்பெற பொதுமக்களுக்கு சிட்டா மற்றும் அடங்கல் நகல்கள் கொடுத்தல்.
  5. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவு பதிவேடுகளைப் பராமரித்தல்.
  6. தீ.விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போது உயர் அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண ஏற்பாடுகள் செய்தல்.
  7. கிராமத்தில் ஏற்படும் கொலை, தற்கொலை, சந்தேக மரணங்கள் ஆகியவற்றை காவல்துறையினருக்கு தெரிவித்தல் மற்றும் காவல்துறையினருக்கு விசாரணையின் போது உதவி செய்தல்.
  8. தொற்றுநோய், காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள் ஏற்படும போது உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுத்தல்.
  9. இருப்புப் பாதைகளைக் கண்காணிக்க ஏற்பாடு செய்தல்.
  10. கிராமப் பணியாளர்களுக்கு சம்பளப்பட்டியல்கள் தயாரித்தல்.
  11. கால்நடைப் பட்டி கணக்குகள் மற்றும் சாவடிகளைப் பராமரித்தல்.
  12. அரசு கட்டிடங்கள், மரங்கள் மற்றும் புறம்போக்குகள் ஆகியவற்றின் உரிமைகளை பாதுகாத்தல்.
  13. புதையல் சம்மந்தமான தகவல்களை உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தல்.
  14. முதியோர் உதவித்தொகை மற்றும் பிற நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு மனுதாரரின் தகுதி குறித்து அறிக்கை தருதல் மற்றும் பயனாளிகள் பதிவேடு பராமரித்தல்.
  15. பொது சொத்து பதிவேடு பராமரித்தல்.
  16. வளர்ச்சி திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட பல்வேறு துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கேட்கும் புள்ளி விவரங்களை கொடுத்து ஒருங்கிணைப்பு பணி ஆற்றுதல்.
  17. பட்டா, பாஸ் புத்தக கணக்கெடுப்பு பணி செய்தல்.
  18. வருவாய் தீர்வாய பணி தொடர்பாக அனைத்து கணக்குகளையும் முறையாக தயாரித்தல்.
  19. பாசன ஆதாரங்களை அவ்வப்போது தணிக்கை செய்தல்.
  20. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக மணல், கல் போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.
  21. மனுநீதி நாள் விழாவில் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளுக்கு விரைவான தீர்வுகாண உதவி செய்தல்.
  22. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்கள் ஆணைகளை உடனுக்கு உடன் செயல்படுத்துதல்.
  23. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நில குத்தகை, நில மாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தலும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தலும்.
  24. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்து அடங்கலில் பதிவு செய்தல்.
  25. நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவா என்பதை சரிபார்த்து அறிக்கை அனுப்புதல்.
  26. பட்டா நிலங்களில் அனுபவதாரர் குறித்து சரிபார்த்து அடங்கலில் பதிவு செய்தல்.
  27. வனக் குற்றங்களை கண்டறிந்து அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுத்தல்.
  28. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி, வரி தள்ளுபடி இனங்கள். மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புகள் ஆகியவற்றை தணிக்கை செய்து கணக்கெடுத்தல்.
  29. கிராம கல் டெப்போ மற்றும் நில அளவை கற்கள் குறித்த கணக்குகள் பராமரித்தல்.
  30. மாதாந்திர சாகுபடி கணக்குகளை தயார் செய்து வருவாய் ஆய்வருக்கு உரிய காலத்திற்குள் அனுப்புதல்.
  31. மக்கள் தொகை கணக்கெடுப்பு, கால்நடைக் கணக்கெடுப்பு பாசன ஆதாரங்கள் கணக்கெடுப்பு முதலிய பணிகளை செய்தல்.
  32. வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல்கள் தொடர்பான பணிகள் செய்தல்.
  33. அறிவொளி இயக்கம் முதலிய அரசு திட்டங்களை சிறப்புற நடத்த ஒத்துழைப்பு நல்குதல். என்றென்றும் மக்கள் பணியில்
    இரா.கணேசன்
    அருப்புக்கோட்டை
    9443920595
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

High interest protect law, what it says? கந்துவட்டி தடுப்புச் சட்டம் என்ன சொல்கிறது? | #கந்துவட்டிகொடூரம்”High interest protect law, what it says? கந்துவட்டி தடுப்புச் சட்டம் என்ன சொல்கிறது? | #கந்துவட்டிகொடூரம்”

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 தமிழக அரசு 2003ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி அதிக வட்டி வசூல் தடைச் சட்டம் கொண்டு வந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட

2025 தமிழக அரசின் அரசு ஊழியர்கள் புதிய நடத்தை விதிகள்.2025 தமிழக அரசின் அரசு ஊழியர்கள் புதிய நடத்தை விதிகள்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 19 2025 தமிழக அரசின் அரசு ஊழியர்கள் புதிய நடத்தை விதிகள். குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள்,

தகவம் பெரும் உரிமை சட்டம் 2005. மனு மாதிரி.தகவம் பெரும் உரிமை சட்டம் 2005. மனு மாதிரி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 18 பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் ) அனுப்புனர் பெயர், முகவரி மற்றும் ஊர். பெறுநர்:பொதுத் தகவல் அலுவலர்,தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005மாவட்ட

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)