GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் வருவாய் கோட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்

வருவாய் கோட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

வருவாய் கோட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்

  1. வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்ட அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சிறப்புத் திட்டபணியாளர்கள் ஆகியோரது பல்வேறு பணிகளை மேற்பார்வை செய்தல்.
  2. வட்ட அலுவலகங்களை தணிக்கை செய்தல்.
  3. கோட்டத்திலுள்ள களப்பணியாளர்களது நாட்குறிப்புகளை ஆய்வு செய்தல்.
  4. வட்ட அலுவலகங்களில் கடன் பிரிவுகளை அரையாண்டுக்கு ஒருமுறை தணிக்கையிடல்.
  5. முதல் வகுப்பு நிருவாக நீதிபதியாக செயல்பட்டு கோட்டத்தில், சட்டம் ஒழுங்கினை நிருவகித்தல்.
  6. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 107 முதல் 110 வரையுள்ள பிரிவுகளின்படி விசாரணை நடத்தி ஆணை பிறப்பித்தல்.
  7. காவல் நிலை ஆணை எண் பிரிவு 145-ன்படி விசாரணை செய்தல்.
  8. குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 142 மற்றும் 145-ன்படி விசாரணை செய்து ஆணைகள் பிறப்பித்தல்.
  9. கிராம நிருவாக அலுவலர்களுக்கு நியமனம், மாறுதல் மற்றும் தண்டனை வழங்குதல்.

கிராம உதவியாளர்கள் நியமனம் மற்றும் தண்டனை தொடர்பான வட்டாட்சியரின் ஆணையின் மீதான மேல் முறையீட்டு மனுக்களில் விசாரணை செய்தல்.

  1. நுலகவரி, அரசுக் கடன்கள், நில அளவைக் கட்டணங்கள், பிற அரசுத் துறைகளுக்கு சேரவேண்டிய பாக்கிகள், வேளாண் வருமான வரி, நகர்ப்புற நிலவரி, நீதிமன்ற வழக்குக் கட்டணம், வறியவர் வழக்கு கட்டணம் உள்ளிட்ட அரசுக்குச் சேரவேண்டிய பாக்கிகளை வசூலித்திட வசூல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வசூல் பணியைத்துரிதப்படுத்துதல், வருவாய் வசூல் சட்டத்தின் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பாக்கியை வசூலித்தல்.
  2. நில ஒப்படை மற்றும் பராதீனம் ஆகிய இனங்களைத் தணிக்கை செய்தல்.
  3. ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மேல்முறையீடுகள் ஆகியவைகளில் நடவடிக்கை மேற்கொண்டு பொது இடங்களை ஆக்கிரமிப்பு தாரர்களிடமிருந்து மீட்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.
  4. நிலமாற்ற முன்மொழிவுகளின் மீது தணிக்கை செய்தல்.
  5. ஆதீன ஒழிப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இனங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தல்.
  6. 1960-ம் ஆண்டு நிலப்பயன்பாட்டு ஆணையினை செயல்படுத்துதல்.
  7. நிலச் சீர்திருத்த சட்டங்கள் மற்றும் குத்தகைச் சட்டங்கள் ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்.
  8. மேம்பாட்டு வரி விதிப்பின் மீது வரும் மேல்முறையீடுகளை முடிவு செய்தல்.
  9. சிறப்பு சிறுபாசனத் திட்ட பணிகளை பார்வையிடுவதுடன் தண்ணீர் தீர்வை எவ்வளவு விதிக்க வேண்டும் என்பதை நிர்ணயித்திடுதல்.
  10. ரூ.25000-க்கும் அதிகமாக இழப்பீடு தர வேண்டிய நில எடுப்பு அலுவலராக பணியாற்றல்.
  11. வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது நிலவரி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வட்டாட்சியரால் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் தொடர்புடைய இடங்களை பார்வையிட்டு நிலவரி தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுத்தல்.
  12. இந்திய முத்திரைச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்.
  13. கிராமக் கணக்குகளைத் தணிக்கை செய்தல் மற்றும் பயிர் மேலாய்வு செய்தல்.
  14. தமிழ்நாடு இனம் (நியாயவாரம்) சட்டம் 1963 -ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.
  15. குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல்.குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல்.
  16. முழைமானிகள், சர்வே கற்கள், கல் டெப்போக்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.
  17. கிராமக் கணக்குகளின் ஆண்டு தணிக்கை (வருவாய்த் தீர்வாயம்) முடித்து சரியான கேட்பினை முடிவு செய்தல்.
  18. தமிழ்நாடு விவசாயகுத்தகைச் சட்டம் 1969-ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.
  19. மரப்பட்டா- வழங்குதல் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரித்தல்.
  20. அரசு நிலங்கள் குத்தகை இனங்களைப் பார்வையிடுதல்.
  21. முறையான தண்ணீர் தீர்வை நிர்ணயம் குறித்து ஆய்வு செய்தல். 31. முதியோர் உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகை வழங்கும் பணியைக் கண்காணித்தல், வட்டஅலுவலக முதியோர் உதவித் தொகை பிரிவினை காலாண்டு தோறும் தணிக்கை செய்தல்.
  22. பர்மா மற்றும் சிலோன் அகதிகள் நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்துதல்.
  23. வெள்ளம், தீ விபத்து, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது காப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடல்.
  24. ஆதிதிராவிடர் குடியிருப்புகளைப் பார்வையிடுதல் மற்றும் ஆதிதிராவிடர் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
  25. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
  26. விபத்து மற்றும் சாலை விபத்து நிவாரண நிதி வழங்குதல்.
  27. காப்புறுதித் திட்டங்களை ஆய்வு செய்தல்.
  28. மனுநீதி திட்ட முகாம் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்திடல்.
  29. நியாயவிலைக் கடைகள், அரிசி ஆலைகள் தணிக்கை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் தொடர்பாக ஆய்வு செய்தல்.
  30. கொள்முதல் மையங்கள் மற்றும் கிடங்குகள் தணிக்கை அரசு உணவு தானியக் கிடங்குகள் ஆய்வு மற்றும் இருப்புகள் தணிக்கை.
  31. (சில பகுதிகளில்) குடியிருப்பு கட்டுப்பாடு அலுவலராக செயல்படுதல்.
  32. 1960ம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை ஒழுங்கு) சட்டத்தினை செயல்படுத்தல்.
  33. நிரந்தர மற்றும் தற்காலிக திரை அரங்குகளைத் தணிக்கை செய்தல்.
  34. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவு பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.
  35. வெடி மருந்துச் சட்டம், படைக்கலச் சட்டம், பெட்ரோலியம் சட்டம் ஆகியவை தொடர்பான பணிகளைச் செய்தல்.
  36. அரசு அலுவலர்கள் பிறப்பு தேதி குறித்து விசாரணை செய்தல். 47. எரிசாராயம் மற்றும் கரும்புப்பாகு (மொலாசஸ்) உரிய கணக்குகள் தணிக்கையிடல்.
  37. அடகுக் கடைகள் தணிக்கை மற்றும் அடகு கடைக்காரா சட்டம் அமுல் செய்தல்.
  38. முக்கியப் பிரமுகர்கள் வருகையைக் கவனித்தல்.
  39. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளைச் செய்தல்.
  40. ஆறிவொளி இயக்கம் முதலிய அரசுத்திட்டங்களைச் செயல்படுத்த ஒத்துழைப்பு நல்குதல்.

52 கிராமச் சாவடிகள் மற்றும் கால்நடைப்பட்டிகளைத் தணிக்கை செய்தல்.

  1. வருவாய் நிலையாணைகளில் கூறப்பட்டுள்ள பிற பணிகளைச் செய்தல். என்றென்றும் மக்கள் பணியில்
    இரா. கணேசன்
    அருப்புக்கோட்டை
    9443920595
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

கிராம நிர்வாக அலுவலர்களுடைய கடமைகளும், பொறுப்புகளும்கிராம நிர்வாக அலுவலர்களுடைய கடமைகளும், பொறுப்புகளும்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 32 கிராம நிர்வாக அலுவலர்களுடைய கடமைகளும், பொறுப்புகளும் குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும்,

சர்வ தேசிய மனித உரிமை பிரகடணம்- 1948 ( UNIVERSAL DECLRATION OF HUMAN RIGHTS-1948) 10.12.1948 உருவாக்கப்பட்டது.சர்வ தேசிய மனித உரிமை பிரகடணம்- 1948 ( UNIVERSAL DECLRATION OF HUMAN RIGHTS-1948) 10.12.1948 உருவாக்கப்பட்டது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 2 மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வ தேசிய அளவில் சிந்தனை செய்ததின் விளைவே சர்வ தேசிய மனித உரிமை பிரகடணம்- 1948

How to cancel False FIR from police

FIR Cancel | How to cancel the falsely put-up FIR | பொய் வழக்குகளை ரத்து செய்வது எப்படி.FIR Cancel | How to cancel the falsely put-up FIR | பொய் வழக்குகளை ரத்து செய்வது எப்படி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 17 விளக்கம் சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் K. அன்புச்செல்வன். கே. காவல் நிலையங்களில் எப்படி புகார் அளிப்பது? ப. எழுத்து

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)