GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் தவறு செய்யும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் தண்டனைகள்

தவறு செய்யும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் தண்டனைகள்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

தவறு செய்யும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் தண்டனைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  1. மிகச் சிறு தண்டனைகள் (Orderly Room Punishments)
  2. சிறிய தண்டனைகள் (Minor Punishments)
  3. பெரிய தண்டனைகள் (Major Punishments)

மிகச் சிறு தண்டனைகளை ஒழுங்கறைத் தண்டனைகள் என்றும் அழைக்கப்படுகிறது. ததினசரி அலுவலின் போது காவலர்கள் செய்யும் சிறு தவறுகளான காலதாமதம், சீருடைகளை சரியாக அணியாமல் இருத்தல், முடிவெட்டாமல் இருத்தல், முகச்சவரம் செய்யாமல் இருத்தல், வேலையில் கவனக்குறைவாக இருத்தல் போன்றவற்றிற்கு அளிக்கப்படும் தண்டனை மிகச் சிறு தண்டனைகள் எனப்படும். காவல் ஆய்வாளருக்கு மேற்பட்ட அலுவலர்கள் தவறு செய்யும் காவலர்களை ஒழுங்கு அறைக்கு (Orderly Room – O. R) வரவழைத்து தண்டனை வழங்கலாம். இத்தவறுகளை மீண்டும் செய்தால் காவல் ஆய்வாளர் உயரதிகாரிகளுக்கு அதனை அறிக்கையாக சமர்பிப்பார். அதனடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் உரிய தண்டனை வழங்குவார். மிகச் சிறிய அளவிலான தவறுகளுக்கு கீழ்க்கண்ட தண்டனைகள் வழங்கப்படும்.

  1. அதிக நேர கவாத்து (Extra Drill)
  2. அதிக நேர காப்பு அலுவல் (Extra Guard Duty)
  3. அலுப்பு அலுவல் (Fatigue Duty)

தண்டனைகள் வழங்குவதற்கு முன் சம்மந்தப்பட்ட காவலரின் விளக்கம் கேட்கப்படும். தண்டனையின் விபரங்கள் மிகச் சிறு தண்டனைகள் பதிவேட்டில் (Orderly Room Punishment Register) பதிவு செய்யப்படும். மிகச் சிறு தண்டனைகளுக்கு மேல்முறையீடு (Appeal) கிடையாது. இத்தண்டனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். இவற்றை செய்ய மறுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு தண்டனைகள் (Minor Punishments) :-

சிறு தண்டனைகள் தமிழ்நாடு காவல்துறை சார்பு நிலை பணியாளர்கள் ஒழுக்கம் மற்றும் மேல்முறையீட்டு விதிகள் 3(அ) (Tamilnadu Police Subordinate Service Discipline and Appeal Rules 1955, 3(a) அடிப்படையில் வழங்கப்படும். எழுத்து மூலமாக செய்த தவறை விளக்கி குறிப்பிட்ட காலத்திற்குள் விளக்கம் கேட்கப்பட்டு அதன்பிறகு தண்டனை வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் தவறு செய்த அலுவலர் பதிலளிக்காவிட்டால் காலம் முடிந்தவுடன் தண்டனை தரப்படும். சிறு தண்டனைகள் கீழ்கண்டவாறு இருக்கும்.

  1. கரும்புள்ளி (Black Mark) (காவலர்கள் மற்றும் தலைமை காவலர்கள்) காவல் நிலை ஆணை எண் – 93
  2. கடுமையாக எச்சரித்தல் (Reprimand) (சார்பு ஆய்வாளர் அதற்கு மேல் உள்ள அலுவலர்களுக்கு) காவல் நிலை ஆணை எண் – 91
  3. நிந்தனை செய்தல் (Censure) (அனைவருக்கும் உண்டு) காவல் நிலை ஆணை எண் – 92
  4. ஆண்டுக்கான ஊதிய உயர்வை ஒத்தி வைத்தல் (Withholding of Annual Increment)
  5. 15 நாட்களுக்கு மேற்படாத தற்காலிக வேலை நீக்கத்தை தண்டனையாக வழங்குதல் (suspension as a specific punishment)

இத்தண்டனைகள் பணிப் புத்தகத்தில் (service book) பதிவு செய்யப்படும். இவை பதவி உயர்வை பாதிக்கும். இவற்றிற்கு உயர் அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்ய வழி உண்டு.

ஒத்திப் போடப்படும் தண்டனைகள் (deferred Punishments) :-

சிறு தவறுகள் செய்பவர்களை மன்னிப்பதற்காகவும், அவர்களை திருத்துவதற்கு வாய்ப்பளிக்கும் விதமாகவும், நிர்ணயிக்கப்பட்ட தண்டனையை 3 முதல் 6 மாதத்திற்கு மேற்படாமல் ஒத்திப் போடலாம். இந்த குறிப்பிட்ட காலத்தில் தவறு செய்த அலுவலர் மீண்டும் தவறு செய்யாமல் இருந்தால் தண்டனை முழுவதும் ரத்து செய்யப்படும். ஆனால் மீண்டும் தவறு செய்தால் ஒத்தி போடப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படும். ஒத்தி போடப்பட்ட தண்டனைகள் பணிப் பதிவேட்டிலும், தண்டனைக் குறிப்பேட்டிலும் பென்சிலால் எழுதப்படும். அந்த கால அளவு முடிந்ததும் அழிக்கப்படும். ஒத்தி போடப்பட்ட தண்டனைக்கு மேல்முறையீடு கிடையாது. கரும்புள்ளி, கடுமையாக எச்சரித்தல், நிந்தனை செய்தல் ஆகியவை மட்டுமே ஒத்தி போடக்கூடிய தண்டனைகளாகும்.

பெரிய தண்டனைகள் (Major Punishments)

Tamilnadu police subordinate discipline and appeal rules 1955 ன் பிரிவு 3(b) ன்படி இத்தகைய தண்டனைகள் வழங்கப்படும். கீழ்கண்ட தண்டனைகள் வழங்கப்படும்.

  1. இறக்கம் செய்தல் (Reduction). இதில் இரண்டு வகை உள்ளது.

பதவி இறக்கம் செய்தல், ஊதியம் பிடித்தம் செய்தல் (Reduction in Rank / Recovery From Pay)

ஊதியத்தில் இறக்கம் செய்தல் (Reduction in scale of pay)

  1. தற்காலிக வேலை நீக்கம் / கட்டாய ஓய்வு (Suspension / Compulsory Retirement)
  2. நிரந்தர வேலை நீக்கம் (Dismissal)

கையூட்டு பெறுதல், பொய் வழக்கு போடுதல், பொதுமக்களை துன்புறுத்துதல், அரசாங்க பொருட்களை திருடுதல் மற்றும் வீணாக்குதல், ஒழுக்கக்கேடாக நடந்து கொள்ளல், சரிவர கடமையை செய்யாதிருத்தல் மற்றும் வேலையை விட்டு ஓடிப்போதல் போன்ற தவறுகளுக்கு பெரும் தண்டனை வழங்கப்படும்.

காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன் முதனிலை விசாரணை (Preliminary enquiry) நடத்தப்படும். அதன்பிறகு குற்றச்சாட்டு குறிப்பாணை (Charge memo) கொடுக்கப்படும். தவறு செய்த அலுவலர் விளக்கம் (Explanation) அளித்த பிறகு குற்றம் சாட்டுபவர் தரப்பு சாட்சிகளும் (Prosecution Witnesses) பின்னர் தவறு செய்தவர் தரப்பு சாட்சிகளும் (Defence Witnesses) விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை செய்யப்படுவர். இரு தரப்பிற்கு தேவையான ஆவணங்களும் கோப்புகளும் வழங்கப்படும். பின்னர் நடவடிக்கை குறிப்பு (minutes) எழுதப்பட்டு, மறுமுறை விளக்கம் கேட்ட பின்பு ஆணை வழங்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும். இத்தண்டனைகளுக்கு மேல்முறையீடு செய்யலாம். அந்த முறையீட்டினை பரிசீலனை செய்யும் அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்கவும், குறைக்கவும், உறுதி செய்யவும் மற்றும் நீக்கம் செய்யவும் அதிகாரம் உண்டு. அதிகபட்ச தண்டனையாக வேலை நீக்கம் செய்யலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

உங்கள் மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றம் பற்றி அறிவோம்.உங்கள் மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றம் பற்றி அறிவோம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 183 உங்கள் மாவட்ட, மனித உரிமைகள் நீதிமன்றம் பற்றி அறிவோம். மனித உரிமை பாதுகாப்பு சட்ட பிரிவு 30-ன்படி, மாவட்ட மனித உரிமை

Compensation | can be claimed against Police attack. High Court | போலீஸ் தாக்குதலுக்கு நஷ்ட ஈடு கோரும் உரிமை உண்டு. உச்ச நீதி மன்றம்.Compensation | can be claimed against Police attack. High Court | போலீஸ் தாக்குதலுக்கு நஷ்ட ஈடு கோரும் உரிமை உண்டு. உச்ச நீதி மன்றம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 வணக்கம் நண்பர்களே…! தனது மகன் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து, காவலில் வைத்து அடித்து கொடுமைப்படுத்தியதால் ஏற்பட்ட காயத்திற்கு

RTI documents | No need to pay more then Rs: 50 Supreme Court Order | ஆர்.டி.ஐ.யில் ஆவணங்கள் பெற ரூ: 50 மேல் செலுத்த தேவையில்லை. உச்ச நீதி மன்றம்.RTI documents | No need to pay more then Rs: 50 Supreme Court Order | ஆர்.டி.ஐ.யில் ஆவணங்கள் பெற ரூ: 50 மேல் செலுத்த தேவையில்லை. உச்ச நீதி மன்றம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 RTI யில் ஆவணங்கள் பெற அதிகபட்சமாக ரூ.50/- க்கு மேல் செலுத்தத் தேவையில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு. RTI விண்ணப்பங்களை தாக்கல் செய்ய

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)