GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Compensation | can be claimed against Police attack. High Court | போலீஸ் தாக்குதலுக்கு நஷ்ட ஈடு கோரும் உரிமை உண்டு. உச்ச நீதி மன்றம்.

Compensation | can be claimed against Police attack. High Court | போலீஸ் தாக்குதலுக்கு நஷ்ட ஈடு கோரும் உரிமை உண்டு. உச்ச நீதி மன்றம்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

வணக்கம் நண்பர்களே…!

தனது மகன் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து, காவலில் வைத்து அடித்து கொடுமைப்படுத்தியதால் ஏற்பட்ட காயத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் தாயார் ரிட் மனு தாக்கல் செய்ய தடையேதும் இல்லை சென்னை உயர் நீதிமன்றம்.

“சேர்மன், ரயில்வே போர்டு Vs சந்திரிமாதாஸ் (2002-2-SCC-465)” என்ற வழக்கில், ரயில்வே ஊழியர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு ரூ 10,00,000 /-த்தை இழப்பீடாக வழங்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் ” P. இராஜ்குமார் Vs காவல்துறை கூடுதல் இயக்குநர் (CDJ-2014-MHC-3992)” என்ற வழக்கில், தாயாரை காவல்துறையினர் கொடுமைப்படுத்தியதற்காக இழப்பீடு வழங்குமாறு கோரி மகன் தாக்கல் செய்திருந்த நீதிப்பேராணை மனுவை இந்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இடைக்கால நிவாரணமாக ரூ. 2,00,000 /-த்தை வழங்கியதோடு, அந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றம் “சுபேஷ்சிங் Vs அரியானா மாநில அரசு (2006-3-SCC-178)” என்ற வழக்கில், காவல்துறையினரின் காவலிலுள்ள ஒருவர் இறக்க நேரிட்டால் அல்லது காவலில் வைத்து துன்புறுத்தப்பட்டிருந்தால் அல்லது இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 ல் கூறப்பட்டுள்ள உரிமைகளுக்கான உத்தரவாதம் மீறப்படுதல் போன்ற சம்பவங்கள் மெய்பிக்கப்படும் நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 32 அல்லது 226 ன் கீழ் பாதிக்கப்பட்ட நபருக்கு நீதிமன்றங்கள் இழப்பீடு தொகை வழங்கலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது. இருந்தபோதிலும் அவ்வாறு இழப்பீடு தொகை வழங்குவதற்கு முன்பாக கீழ்க்கண்டவற்றை நீதிமன்றம் தனது கருத்தில் கொள்ள வேண்டும்.

  1. இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 ல் கூறப்பட்டுள்ளவை மீறப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாக, மறுக்க முடியாத வகையில் அமைந்துள்ளதா?
  2. அவ்வாறு அந்த உரிமைகள் மீறப்பட்டுள்ளது நீதிமன்றத்தின் மனசாட்சியை பாதிக்கும் அளவிற்கு மிகப்பெரிய விஷயமாக உள்ளதா?
  3. காவலில் வைத்து துன்புறுத்தப்பட்டதால் மரணம் ஏற்பட்டுள்ளதா? அல்லது துன்புறுத்தப்பட்ட நபருக்கு ஏற்பட்ட காயங்களை மெய்பிக்கும் விதமாக மருத்துவ அறிக்கை அல்லது வெளிப்படையான காயங்கள் அல்லது தழும்புகள் அல்லது உடல் ஊனம் உள்ளதா?

காவல்துறையினரின் காவலில் வைத்து ஒரு நபரை துன்புறுத்தியதற்கு அந்த நபரின் வாக்குமூலத்தை தவிர மருத்துவ அறிக்கை அல்லது அந்த வாக்குமூலத்தை உறுதி செய்யக்கூடிய சாட்சியம் அல்லது காவல்துறையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை அல்லது அந்த சம்பவம் முற்றிலும் மிகைப்படுத்தப்பட்டோ கூறப்பட்டுள்ளது என்கிற விசயத்தை தெளிவாக அறிந்து கொள்கிற நிலையில், கட்டளை 32 அல்லது 226 ன் கீழ் இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க இயலாது. ஆனால் பாதிக்கப்பட்ட நபரை உரிமையியல் /குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் உரிய நிவாரணங்களை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றம் “நிலா பட்டி பெகரா Vs ஒரிசா மாநில அரசு (1993-2-SCC-746)” என்ற வழக்கில் காவல்துறை காவலில் இருந்த இளைஞர் இறந்த வகைக்கு அவருடைய தாயாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அதேபோல் வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பான “D. K. பாசு Vs மேற்கு வங்க மாநிலம் (AIR-1997-SCW-610)” என்ற வழக்கில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பண ரீதியாக இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே தனது மகனுக்கு ஏற்பட்ட காயங்களுக்காக தாயார் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய எவ்வித தடையும் இல்லை என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. NO – 9606/2010, DT – 16.12.2016
உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:
https://drive.google.com/file/d/1HM3P8yLBsAS7nTZEUVYkBprV-_zihrch/view?usp=drivesdk

Banumathi Vs The Secretary, TAMILNADU and Others (2017-1-TLNJ-CRL-19)

நன்றி…!

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Mahatma Gandhi National Rural Employment Guarantee Act 2005. Manual | மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் 2005. கையேடு (pdf)Mahatma Gandhi National Rural Employment Guarantee Act 2005. Manual | மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் 2005. கையேடு (pdf)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது காவல் துறை கவனிக்கவேண்டிய நடைமுறை என்ன?வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது காவல் துறை கவனிக்கவேண்டிய நடைமுறை என்ன?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு

விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல்?விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல்?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 17 *விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல் – வழக்கும் தீர்வும்* Husband name change birth certificate la

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)