GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் DTCP அப்ரூவல் என்றால் என்ன…? தெரிந்து கொள்வோ

DTCP அப்ரூவல் என்றால் என்ன…? தெரிந்து கொள்வோ

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

DTCP அப்ரூவல் என்றால் என்ன…? தெரிந்து கொள்வோம்…!

நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாகமாற்றுதல் (Conversion), அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுதல்போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்புஇயக்கம் (Directorate of Town and Country Planning – DTCP)அனுமதி தேவைப்படும்.

இது சென்னை பெருநகர்வளர்ச்சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத் திலிருந்து வேறுபடுகிறது.

சி.எம்.டி.ஏ. (CMDA) உடைய அதிகார வரம்புஎன்பது சென்னை மற்றும் அதன்அருகாமையில் உள்ளபகுதிகள் வரை வரும்.

டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின்அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது.

எனவே டீ.டி.சி.பி.அப்ரூவ லுக்கு இங்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது.அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி. அனுமதியேமிக மிக முக்கியமானது.

அப்ரூவல் வாங்க வேண்டியபகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந்த நிலம்எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின்டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை.

இது தவிர,லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால்சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமைஅலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

இதில் லே-அவுட் ஒரு கிராமப் பகுதியில் இருந்தால், அந்தக்கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றுஅவர்களிடம் நமது லே-அவுட் பிளானை சமர்பிக்கவேண்டும்.

அவர்கள் அதை சரி பார்த்துவிட்டு, மாவட்டடீ.டி.சி.பி. அலுவலகத்துக்கு அந்த பிளானை அனுப்பிவைப்பார்கள்.

டீ.டி.சி.பி. அதிகாரிகள், லே-அவுட் பிளானைபல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பிறகு அதற்கு அனுமதிகொடுப்பார்கள்.

சில சமயங்களில் அவர்களே ஒருபிளானையும் தயாரித்துக் கொடுக்கலாம்.

அதில் அவர்கள் சாலை, பூங்கா, பொது இடம் என்று பிரித்துஇருப்பார்கள்.

அதைத்தான் லே- அவுட் புரமோட்டர் அல்லதுஉரிமையாளர் பின்பற்ற வேண்டும்.

பின்பற்றுவதோடுமட்டு மல்லாமல், அதில் வேறு எந்த மாற்றமும் செய்யக்கூடாது.

அந்த பிளானில் உள்ளபடியே பிளாட் (Plot)களைவிற்கவே விளம்பரம் செய்யவோ வேண்டும்.

24 செண்டுக்கு குறைவான நிலப்பகுதிக்கு கிராமப்பஞ்சாயத்தின் அனுமதியே போதுமானது (1 செண்ட்=435.6சதுர அடிகள்). அந்த 24 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியைதனியாக வாங்கவோ அதில்கட்டடம் கட்டவோ பஞ்சாயத்துஅனுமதி தேவைப்படும்.

அந்த 24 செண்ட் அளவுக்குமேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் அப்ரூவல்மட்டுமல்லாது, வேறு எந்தவிதமான திட்டங்களுக்கும்அனுமதி வழங்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமேகிடையாது.

அவை அனைத்துமே டீ.டி.சி.பி. உடையகட்டுப்பாட்டின்கீழ் வரும். எனவே, பஞ்சாயத்துஅனுமதியை மட்டுமே நம்பி ஒரு நிலப் பகுதியைவாங்குவது நல்ல விசயம் அல்ல.

விவசாய நிலத்தை மட்டுமல்லாது, உற்பத்தி /தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களைகுடியிருப்பு பகுதிகளாக மாற்றவும் டீ.டி.சி.பி. அனுமதிதேவை.

சான்றாக, தொழிற்சாலை வளர்ச்சிக்குஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்றதிட்டமிட்டால் அதற்கு, நிலத்தின் வரைப்படம் (TOPO Plan),நிலப் பத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து டீ.டி.சி.பி.அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுதவிர,குடியிருப்பு பகுதியாக மாற்றிய பிறகு, அந்த நிலத்தைஎந்த விசயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும்தெரிவித்து விட வேண்டும்.

டீ.டி.சி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட நிலத்தைஆராய்வார்கள். பிறகு, இந்த நிலத்தைப் பற்றியதகவல்களையும், அதற்கு ஆட்சேபணைகளையும்கேட்டறிய 2 நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுவார்கள்.

எந்த ஆட்சேபணை யும் வரவில்லை என்றால், உடனடியாகZone Conversion னுக்கு அனுமதி கொடுப்பார்கள்.

நான்கு மாடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்கள்அனைத்துமே அடுக்குமாடிக் கட்டிடங் களாகக்கருதப்படுகின்றன.

இதில் கட்டப்படுகின்ற கட்டிடத்தின்அருகே உள்ள சாலையின் அகலம், நிலத்தின் அகலம்,ஃபுளோர் சைஸ் இண்டெக்ஸ் (Floor size index), கட்டிடத்தின்அகலம் போன்ற எண்ணற்ற நடைமுறைகள் உள்ளன.

இவற்றில் ஒன்று ஒத்து வரவில்லை என்றாலும்அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்படாது.

சான்றாக, 10 மாடிக் கட்டிடம் என்றால், அருகே உள்ளசாலையின் அகலம் குறைந்த பட்சம் 80 அடியும், கட்டிடம்கட்டப்படும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டரும் இருக்கவேண்டும்.

இதில் சிறிது குறைந்தாலும் பிளானுக்குஅனுமதி மறுக்கப்படும்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

RTI Question and Replies from Police

RTI Question and Replies from Police for Barricade | காவல் துறையிடமிருந்து இரும்பு தடுப்புக்காக த.பெ.உ. கேள்விகளும் பதில்களும்.RTI Question and Replies from Police for Barricade | காவல் துறையிடமிருந்து இரும்பு தடுப்புக்காக த.பெ.உ. கேள்விகளும் பதில்களும்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 இந்தியாவில் அதிக இடங்களில் ரோடுகளில் போடப்பட்டுள்ள BARRICADE எனப்படும் இரும்பு தடுப்பால், வாகன ஓட்டிகளுக்கு பலவகையான சிரமங்களும், பல வேளைகளில் விபத்துக்களும்,

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 To take disciplinary action against erring police officers in Tamil Nadu / தமிழகத்தில் தவறு செய்யும் காவல்துறை

சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்கு பதியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம். உத்தரவுசமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்கு பதியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம். உத்தரவு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 12 சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்கு பதியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம். உத்தரவு !!! சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)