ஒவ்வொரு இந்திய பிரஜையும் எவ்வளவு நிலம் விலைக்கு வாங்க முடியும் என்பதற்கான சட்டம் நில உச்ச வரம்பு சட்டம்
எவ்வளவு வேண்டுமானாலும் நிலத்தை விற்கலாம். ஆனால் நிலத்தை வாங்குவதற்கு கட்டுப்பாடு உண்டு 22.5 ஏக்கர் நஞ்சை நிலமே வாங்க முடியும். அதுக்கும் மேல வாங்கினால் 1971ல் கலைஞர் கொண்டுவந்த நில உச்ச வரம்பு சட்டப்படி அரசு எடுத்துக்கொள்ளும் உங்கள் குடும்பத்தில் 5 பேர் வரை இந்த அளவு அதற்குமேல் இருக்கும் ஒரு நபருக்கு 7.5 ஏக்கர் அனுமதிக்கப்படும்.
தமிழ்நாடு விவசாய நில உச்ச வரம்பு சட்டம் 1961ன்படிநஞ்சை நிலம் 5 standard acre வரை வைத்துக்கொள்ளலாம். Standard acre நிலத்தின் தரம் கொண்டு நிர்ணயம் செய்யப்படும்,.
1961 ல் நில உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சி அதில் ஐந்து நபர்கள் உள்ள குடும்பத்துக்கு 30 ஸ்டேண்டர்ட் ஏக்கர் வைத்துக் கொள்ளலாம் என இருந்ததை கலைஞர் கருணாநிதியால் 1972 ம் ஆண்டு தமிழ்நாட்டில் அமுல் படுத்தப்பட்ட நில உச்ச வரம்பு சட்டப்படி 15 ஸ்டேண்டர்டு ஏக்கர் 5 நபர் உள்ள இந்து கூட்டு குடும்பத்துக்கு அதற்கு மேல் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் ஒரு நபருக்கு 5 ஸ்டேண்டர்டு ஏக்கர் வைத்து கொள்ளலாம் என்பதே தற்போதைய சட்டம். ஒரு ஸ்டேண்டர்டு ஏக்கர் என்பது நஞ்சையாயிருந்தால் 1.5 ஏக்கர் புஞ்சையா இருந்தால் 3 ஏக்கர் ஒரு ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் என்று 1972 ல் தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு சட்டம் வந்துள்ளது.