சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
பொதுத் தொல்லையை (Public Nuisance) எதிர்த்து விசாரணைமுறைச் சட்டப்பிரிவு 91ன் கீழ் எவரும் வழக்குத் தொடரலாம்.
பொது வழியை அடைத்து வீடு கட்டியவர் மீது பொது மக்கள் தொடுத்த வழக்கு இது. பொதுத் தொல்லை கொடுக்கும் எந்த நபர் மீதும் எந்த நபரும் வழக்குத் தொடுக்கலாம் என்பதை இத்தீர்ப்பு விளக்குகிறது.
சென்னை உயர்நீதிமன்றம்.
முன்னிலை : நீதியரசர் – கனகராஜ் இரண்டாம் மேல்முறையீடு எண் 549/1993, 15.6.2004.
பெருமாள் நாயக்கர்.
எதிர்.
மேல்முறையீட்டாளர்
ரத்தின நாயக்கர் மற்றும் ஒருவர்.
-எதிர்மனுதாரர்கள்.
உரிமை வழக்கு விசாரணை முறைச் சட்டம் 1908 – பிரிவு-91.
எதிர் மனுதாரர்கள் அவர்கள் தரப்பிலும் மற்றும் பேரம்பாக்கம் கிராமத்தார்கள் சார் பாகவும், பொது நடைவழிபாதையில் கட்டிடம் கட்டுவதை தடைசெய்யக் கோரியும், ஏற்கனவே கட்டப்பட்ட சுவற்றை இடிக்கக் கோரியும் மேல்முறையீட்டாளர் மீது விளம்புகை, மற்றும் நிரந்தர செயலுறுத்தக் கட்டளை கோரி வழக்கு தொடர்ந்ததில், விசாரணை நீதிமன்றம் அவர்கள் கோரியபடியே தீர்ப்பாணை வழங்கியது. முதல் மேல்முறையீட்டு நீதிமன்றமும் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது – இந்த இரண்டாம் மேல்முறையீட்டில் எதிர்வாதி உரிமை வழக்கு விசாரணை முறைச் சட்டம் பிரிவு91 தனக்கு உதவிட உரிமை பெற்றதாக எடுத்துரைக்கிறார்.
இந்த பிரிவு பொதுத் தொல்லை வழக்குக்கு வகை செய்கிறது.
வார்த்தை விளக்கம்
பொதுத் தொல்லை – தனிப்பட்ட நபருக்கு தீமை விளைவிப்பது, அவருக்கு இடையூறு ஏற்படுத்துவது தொல்லை யாகும். இதை தை பொது இடத்தில் நிகழ்த்தி னால் அது பொதுத் தொல்லையாக (Public nuisance) கருதப்படும்.
தனிப்பட்ட நபரின் பொதுத் தொல்லை குறித்து வழக்குத் தொடரும் உரிமையை இச்சட்ட பிரிவு பாதிக்காது. பொது தொல்லை காரணமாக பாதிக்கப்பட்ட எந்த ஓர் நபரும், அதை குறித்து வழக்கு தொடுத்து விளம்புகை நிரந்தர மற்றும் செயலாற்றும் உறுத்துக் கட்டளை ஆகிய சட்டப்படி பரிகாரங்கள் பெறலாம். வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுநடை வழிப் பாதையை எதிர்வாதி ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி பொதுத் தொல்லை ஏற் பட்டதை எதிர்த்து வாதி வழக்கு தொடர இப்பிரிவு வகை செய்கிறது.
திரு.மோகன் -மேல்முறையீட்டாளரின்
வழக்கறிஞர்
திரு.சிவகுமார் – எதிர்மனுதாரர்களின் வழக்கறிஞர்
உத்தரவு
22.7.1987இல் காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தால் அசல் வழக்கு στούσι. 215/1981 வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணை எதிர்த்து தொடுக்கப்பட்ட முதல் மேல்முறை யீட்டு எண். 37/1988இல் விசாரணை வழக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணை உறுதி செய்து வழங்கப் பட்ட காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் தீர்ப்பாணை யையும் எதிர்த்து இந்த இரண்டாவது மேல் முறையீடு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
2.உரிமையியல் அசல் வழக்கில் எதிர் வாதியானவர் எந்த சந்தர்ப்ப சூழ்நிலை யில் இந்த இரண்டாவது மேல்முறையீட்டை (second appeal) தாக்கல் செய்துள்ளார் என்பதை பார்க்கையில், எதிர்வாதி (defendant)யின் பாட்டிக்கு பேரம்பாக்கம் கிராமத்தில் சர்வே எண் 132இல் 4 செண்டு அளவு கொண்ட நிலம் பட்டா செய்து கொடுக்கப்பட்டதென்றும், அவர் காலமான பின் எதிர்வாதி அந்த நிலப்பரப்பையும் அதற்கு அருகில் உள்ள சர்வே 153/2இல் உள்ள நிலத்தினையும் ஆக்கிரமித்து அதன் வழியாகச் செல்லும் பொது வழிநடை வண்டிப்பாதையில் (பிராது வரைப்படத்தில் இ.எப்.ஜி.எச் என்று குறிப்பிடப்பட்டது) 27 x 15′ அளவுக்கு கட்டிடம் கட்டி அந்த பொது வழி நடைவண்டிப் பாதையில் பொது தொல்லைக்கு காரணமானவராகிறார். பிரதி வாதியின் அத்து மீறிய செயலால் கிராமத்து மக்கள் அந்த ஆக்ரமித்த பொதுவழி நடைபாதை வழியாக பள்ளிக்கூடம், ஆறு மற்றும் சுடுகாடு ஆகிய இடங்களுக்கு போக முடியாதவாறு தடைபட்டிருக் கிறார்கள். ஆகவே எதிர்மனுதாரர்கள் (Re- spondents) எதிர்வாதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விளம்புகை (declaration) நிரந்தர உறுத்துக்கட்டளை (Permanent injunction) மற்றும் றும் செயலுறுத்துக்க செயலுறுத்துக் கட்டளை (manda- tory injunction) ஆகிய சட்ட பரிகாரங்கள் கேட்டுள்ளார்கள். மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆக்ரமித்த
இடத்தை பார்வையிட்டு அதை நீக்குமாறு உத்தரவு பிறப்பித்து, எதிர்வாதி அதை செயல்படுத்தவில்லை. ஆகவே மேற்கண்ட வாறு உரிமை இயல் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது.
3.மேல்சொல்லப்பட்டவைகளை மறுத்த பிரதிவாதி மேலும் கூறுவது என்ன வென்றால், வழக்கில் சம்பந்தப்பட்ட பொது வழிபாதை ஏதும் இல்லை என்றும், தான் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்றும், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டிடம் கட்டப்பட்டது என்றும், தம்வசம் உள்ள கிழக்கு – மேற்கு 30 சங்கிலி மற்றும் தென்- வடக்கு 11 சங்கிலி சொத்து அனுபவ எதிரிடை உரிமையுடன் இருந்து வரு கின்றது என்றும் சொல்கிறார். வழக்கு சொத்து எதிர்வாதியின் அனுபவத்திலும், சுவாதீனத்திலும் இருந்து வருவதால் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டியதாகும்.
4.விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கில் ஐந்து எழுவினாக்களை தொடுத்து வாதி மற்றும் எதிர்வாதிகளின் தரப்பில் சாட்சியம் கொடுக்க அனுமதிக்கப் பட்டது. வாதி தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 3 ஆவணங்களை சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
5.எதிர்வாதி தரப்பில் அவரும், மற் றொருவரும் வாய்மொழி சாட்சியம் அளித்தார் கள். ஆவண சாட்சி ஏதும் முன் வைக்க வில்லை. நீதிமன்றத்தால் நிய மிக்கப்பட்ட ஆணையர் அவரின் அறிக் கையும் அவர் தயாரித்த வரைப்படம் நீதிமன்ற தரப்பு காட்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
- இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பொது வழி நடைபாதை எதிர்வாதியின் வீட்டிற்கு கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசை நோக்கி திரும்பி பிறகு “சிடிஎப்ஐசிஜி” வழியாக சென்று “எப்” என்ற இடத்தில் இருந்து தெற்கு வழியாக சென்று பள்ளிக் கூடம் மற்றும் ஆற்றை அடைகிறது என்பதை நீதிமன்ற ஆவண சாட்சியம் சி1, சி2 மற்றும் ஏ3 (கிராமத்து வரைப்படம்) கியவற்றை கருத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம் மேலே குறிப்பிட்ட வாறு தீர்வுக்கு அடிப்படையாக எடுத்துக்
- பொதுவழி நடைபாதை சி என்ற இடத்தில் 8 அடி அகலம் உள்ளதாக இருக்கிறது என்று விசாரணை நீதிமன்றம் கண்டறிந்து உண்மை அம்மாதிரி பொது வழி நடைபாதை இல்லை என்ற எதிர்வாதி யின் கூற்றை றை பொய் பெ என்று நிரூபணம் செய் துள்ளது. மேலும் ஏ-1 என்ற ஆவணத்தில் எதிர்வாதியின் வீட்டிற்கு கிழக்கு மற்றும் தென்புறமும் நன்கு போடப்பட்ட பொது வழிநடை பாதை இருப்பதாக தெளிவுப் படுத்தப்பட்டது என்று விசாரணை நீதிமன்றம் தன் தீர்ப்பில் சொல்லியுள்ளது. இந்த ஆவண சாட்சியத்தை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கான காரணம் எதிர்வாதி தரப்பில் ஏதும் கூறப்படவில்லை.
- எதிர்வாதி தன் வாதுரையில் தன்
கட்டிடம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்டது என்ற கூற்றை அவரே தன் வாய் மொழி சாட்சியத்தால் தவறு என்று தெளிவுப்படுத்தியுள்ளார். 1976ஆம் ஆண்டு தான் கட்டிடம் எழுப்பியதாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆகவே எதிர்வாதி 1976ஆம் ஆண்டுக்கு முன் கட்டிடம் கட்டியிருக்க இயலாது. இதை குறித்து அனுபோக உரிமை கொள்ளுவதற்கில்லை. (adverse possession) வா.சா.2 மற்றும் வா.சா.3 (pw2 & pw3) சாட்சியத்தின் மூலம் அந்த பொது வழி நடை பாதையின் வழி யாகத்தான் கிராமத்து மக்கள் பள்ளிக்கூடம் ஆறு, சுடுகாடு ஆகியவற்றுக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது என்றும் அதில் பொது தொல்லை செய்வதற்கு எதிர் வாதிக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் கண்டறிந்த விசாரணை நீதிமன்றம் வாதி கோரியபடி சட்டப்பரிகாரங்கள் கொடுக்க தீர்ப்பும் மற்றும் தீர்ப்பாணையும் வழங்கியது.
9.விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து எதிர்வாதி காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், அந்த நீதிமன்றம் சாட்சியங்களை பரிசீலித்து, வழக்கு சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு விசாரணை நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணையை உறுதி செய்து எதிர்வாதியின் மேல்முறையீட்டை தள்ளு படி செய்தது. ஆகவே எதிர்வாதி இந்த தீர்ப்பை எதிர்த்து சில சட்ட நுணுக்கங்களை முன்வைத்து இந்த இரண்டாம் மேல்முறை யீட்டை தொடுத் துள்ளார். இந்த மேல்முறையீட்டினை
விசாரிக்க கொண்டது. இந்நீதிமன்றம் ஏற்றுக் எதிர்வாதியால் முன் வைக்கப்பட்ட சட்ட நுணுக்கங்கள் இதன டியில் விவரிக்கப்பட்டுள்ளன.
[1] பொது வழிநடை பாதையில் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்களை நீக்க கோரி செயலுறுத்துக் கட்டளை கோரி வாதிகள் கிராமத்து மக்கள் சார்பாக பிரிவு 91 உரிமை வழக்கு விசாரணை முறைச்சட்டப்படி வழக்கு தொடுக்க உரிமை உள்ளதா?
[2] பொதுநடை வழிபாதை இருக் கிறதா அல்லது இல்லையா என்பதை குறித்து எழுவினா தொடுக்காமல் விளம் புகை (declaration) பரிகாரம் கோரி வழக்கு தொடுக்க உரிமை உண்டா?
(3) வாதி பொது நடைவழியை வசதி வழியுரிமை (casement) என்ற சட்டத்தில் கோராமல் வழக்கு தொடுத்திருப்பது சட்டப்படி செல்லதக்கதல்ல?
- உரிமை வழக்கு விசாரணை முறைச் சட்டம் பிரிவு91ன் சட்ட நுணுக்கத்தை ஆராய்ந்தால், பொது தொல்லை (public nuisance)என்பது உரிமையியல் மற்றும் குற்றவியல் ஆகிய இரண்டு சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கலாம். ஆகவே பொது தொல்லைப்பற்றி உரிமையியல் நீதி மன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றங் களில் அதற்காக வழக்கு தொடர்ந்து சட்டப்படி பரிகாரங்களை பெறலாம் என்பதை சொல்லத் தேவை இல்லை. ஒருவருக்கு தடை ஏற்படுத்துதல், தீமை விளைவிப்பது, ஆபத்து ஏற்படுத்துதல் அவருக்கு தொல்லை உண்டாக்குவதாகும். இச்செயல்களை அந்தநபருக்கு பொது இடத்தில் ஏற்படுத்தினால் அது பொது தொல்லை எனப்படும். தனிப்பட்ட நபர் களுக்கு எவ்வித நட்டமும் ஏற்பட வில்லை என்றாலும், பொது தொல்லை நடவடிக் கையை அகற்றகோரி, தலைமை வழக்கறிஞர் மூலமாக அல்லது நீதிமன்றத் தின் அனுமதியுடன் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் விளம்புகை மற்றும் உறுத்துக் கட்டளை கோரி வழக்கு தொடர உரிமை வழக்கு விசாரணை முறைச் சட்டம் பிரிவு91 வகை செய்கிறது.
- பொது தொல்லையால் பாதிக்கப் பட்ட தனி நபர் அதை குறித்து வழக்கு தொடரும் உரிமையை உரிமை வழக்கு விசாரணை முறைச் சட்டம் 1908 பிரிவு 91 குறைப்பதாக எடுத்துக் கொள்ள இயலாது. பொதுதொல்லையால் பாதிக்கப்பட்ட எந்தநபரும் எந்தநபரும் அதை நீக்கக்கோரி, வழக்கு தொடர்ந்து விளம்புகை உறுத்து கட்டளை மற்றும் செயலுறுத்தும் கட்டளை ஆகிய சட்டப்படி பரிகாரங்கள் பெறுவதற்கு உரியவராகிறார். பொது தொல்லையால் வாதிகள் மிகவும் பாதிக்கப்பட் திக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய சொத்து பொதுதொல்லை ஏற்படுத்தப்பட்ட இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த பொதுவழிநடை மற்றும் வண்டிப் பாதை மிகவும் முக்கியத் துவம் வாய்ந்தது. அதன் வழியாகத் தான் ஆறு, பள்ளிக்கூடம், சுடுகாடு ஆகிய இடங்களுள்ளது. பொதுமக்கள் செல்ல இந்த வழித்தடத்தில் ஏற்படுத்திய பொதுத் தொல்லை தடங்கல் களை எந்த ஒரு தனி நபரும் எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று தெரிகிறது. அவ்வாறு வழக்குத் தொடருவதற்கு மேற்படிசட்ட பிரிவு 91 எவ்வித தடையும் சொல்லவில்லை. மேல்குறிப்பிட்ட காரணங்களால் எதிர்வாதி தரப்பு வாதத்தை ஏற்பதற்கில்லை. இப்பிரிவு 91 மேற்கண்ட வாறு சட்ட நுணுக்கம் தெளிவுப்படுத்த வேண்டியிருக்கிறது. எதிர்வாதிக்கு எதிராக இந்த சட்டப் பிரச்சினையில் தீர்ப்பளிக்கப் படுகிறது.
- மேற்கண்ட தீர்வுக்கு தொடர்பாக 2
மற்றும் 3 சட்ட பிரச்சனைகளில் எதிர் வாதிக்கு சாதகமாக
தீர்ப்பளிப்பதற்கில்லை. னென்றால் பொதுவழி நடைபாதை இருப்பது உண்மை என்றும் அது பொது மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அதன் பொருட்டு வாதிகள் அதில் ஏற்படுத்தப்பட்ட பொது தொல்லை தடங்கல்களை அப்புறப்படுத்தக் கோரி வழக்கு தொடர சட்டப்படி உரிமை உடையவர்கள் என்றும் கீழ்நீதிமன்றங்கள் ஒருமித்த கருத்துடன் தீர்பளித்துள்ளன. இந்நீதிமன்றமும் எதிர்வாதியால் எழுப்பப் பட்ட சட்ட பிரச்சனை 2 மற்றும் 3லும் அவருக்கு எதிராக தீர்பளிக்கிறேன்.
(1) தீர்ப்பின் முடிவு: இந்த இரண்டாம் மேல்முறையீட்டின் மூலம் எதிர்வாதிக்கு எவ்வித சட்டபடியான பரிகாரங்கள் கொடுக்க வழி இல்லை. ஆகையால் அதை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறேன்.
[2] காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம் அசல் வழக்கு 215/1981ல் அளித்த தீர்ப்பை உறுதி செய்த காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றம் முதல் மேல்முறையீடு 37/ 1988இல் வழங்கிய தீர்ப்பையும், தீர்ப்பாணையையும் இந்த நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளிக்கின்றது.சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு செலவுத் தொகை இல்லாமல் தீர்ப்பு வழங்கப்பட்டது.