GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் திட்டம் உச்சநீதிமன்றத்தின் ஆணை

தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் திட்டம் உச்சநீதிமன்றத்தின் ஆணை

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் திட்டம் ஏதாவது உள்ளதா?

லட்சமி என்ற சிறுமி அவளது தந்தை மூலமாக உச்சநீதிமன்றத்தில் நீதிப்பேராணை (குற்றவியல்) எண் – 129/2006 என்ற எண்ணில் தாக்கல் செய்த வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 357(A) ன் கீழ் “தமிழ்நாடு பாதிக்கப்பட்டவர் இழப்பீட்டுத் திட்டம் 2013” என்ற ஒரு திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. குற்றத்தினால் இழப்பு அல்லது காயம் ஏற்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் ஆணை.

அதன்படி மத்திய அரசின் துணையுடன் தமிழக அரசு G.O (Ms) No. 1055, Home (Police, XII), II(2)/HO /898(a)/2013 நாள் – 30.11+2013 என்ற அரசாணையை இயற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றியது.

பாதிக்கப்பட்டவர் ஏதாவது ஒரு பிடியாணை வேண்டாக் குற்றத்தில் சம்மந்தப்பட்டிருந்தால் அவருக்கோ அல்லது அவரது வாரிசுகளுக்கோ இந்த தொகை கிடைக்காது. அதாவது பாதிக்கப்பட்டவர் மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இருக்கக்கூடாது.

உண்மையில் குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு தொகையை பெற இந்த திட்டத்தின் தலைவராக இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் ஆணையர் வசம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும்.

இந்த திட்டம் சாதி, மதம் வேறுபாடின்றி அனைவருக்கும் பொருந்தும். பட்டியல் சாதியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இழப்பீடு பெற்றிருந்தாலும்கூட இதிலும் இழப்பீடு பெறலாம். ஆனால் தொகை நேர்விற்கு ஏற்ப கழிக்கப்படும்.

உயிரிழப்புக்கு ரூ 3 லட்சம், கை, கால் அல்லது உடலின் ஏதாவது ஒரு பாகத்தை இழந்தால் அந்த இழப்பு 80% க்கு மேல் இருந்தால் ரூ 2 லட்சம், 50%க்கு கூடுதலாக இருந்தால் ரூ. 1 லட்சம், ஆசிட் வீச்சினால் உயிரிழந்தால் ரூ. 3.5 லட்சம், பாலியல் வல்லுறவுக்கு ரூ 3 லட்சம், கடத்தல், மானப்பங்கம் படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு ரூ. 1 லட்சம் கொடுக்கப்படுகிறது.

கூடுதலாக ஈமச் சடங்குகளுக்கு ரூ. 2000, மருத்துவ செலவுகளுக்கு ரூ. 1.50 லட்சம் வரை காப்பீடு மூலம் வழங்கப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவு 4 அல்லது 6 ன் கீழ் பாலியல் வல்லுறவுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது.

ஆனால் அதே குற்றம் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டத்தின் ன் கீழ் நடைபெற்றிருந்தால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 க்கு ரூ 5 லட்சம், பிரிவு 376(n) க்கு ரூ. 8.25 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும் இவர்கள் விதி 12(5) ன்படி தமிழ்நாடு பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் பலனையும் கூடுதலாக பெறலாம்.

ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்
திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்
செல் – 8870009240

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தகவல் பெரும் உரிமை சட்ட மேல்முறையீட்டு விதிமுறைகள்.தகவல் பெரும் உரிமை சட்ட மேல்முறையீட்டு விதிமுறைகள்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

The Tamil Nadu Agricultural Lands Record of Tenancy Rights Rules, 1969 (Text & pdf)The Tamil Nadu Agricultural Lands Record of Tenancy Rights Rules, 1969 (Text & pdf)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 15 The Tamil Nadu Agricultural Lands Record of Tenancy Rights Rules, 1969 Act 945 of 1969 The

18/10/2024 போக்குவரத்து காவல்துறை, காரைக்கால்…(TRAFFIC POLICE, KARAIKAL) பத்திரிகை செய்தி குறிப்பு.18/10/2024 போக்குவரத்து காவல்துறை, காரைக்கால்…(TRAFFIC POLICE, KARAIKAL) பத்திரிகை செய்தி குறிப்பு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 18/10/2024 போக்குவரத்து காவல்துறை, காரைக்கால்…(TRAFFIC POLICE, KARAIKAL) பத்திரிகை செய்தி குறிப்பு.. காரைக்கால் மாவட்டத்தில் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் சுற்றித்திரிய

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)