GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் General Diary | காவல்துறை பொது நாட்குறிப்பிலுள்ள தகவல்களை பெற முடியுமா?

General Diary | காவல்துறை பொது நாட்குறிப்பிலுள்ள தகவல்களை பெற முடியுமா?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

காவல்துறை பொது நாட்குறிப்பிலுள்ள தகவல்களை பெற முடியுமா?

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பொது நாட்குறிப்பு (Station General Diary/Daily Diary) ஒன்று தினசரி எழுதி பராமரித்து வரவேண்டும். அதில் காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் நடைமுறைகள் குறித்த விவரங்களை பதிவுசெய்து வரவேண்டும். இதனை காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் முதலில் எழுதி ஆரம்பித்து வைக்க வேண்டும்.
⧭ ஒவ்வொரு நாளும் தினமும் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்.
⧭ ஒவ்வொரு நாளும் காலை பொதுநாட்குறிப்பை ஆரம்பிக்கும்போது கையிருப்பிலுள்ள ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள், புகைவண்டி மற்றும் பேருந்து பயணச்சீட்டுகள் மற்றும் கையிருப்பு பணம் பற்றிய விவரங்களை தணிக்கை செய்து குறிப்பிடப்பட வேண்டும்.
⧭ அன்று வரிசை அழைப்பில் எடுக்கப்பட்ட வகுப்பு மற்றும் முக்கிய அறிவுரைகள் குறித்து குறிப்பெழுத வேண்டும்.
⧭ வரிசை அழைப்பு நடத்தப்பட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.
⧭ காலை 8 மணிக்கு காவலர்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
⧭ மனுக்கள் பெறப்பட்ட விவரங்களை பெற்ற நேரம் & தேதியுடன் பதிவு செய்ய வேண்டும்.
⧭ வழக்கு பதிவு செய்த விவரங்களை தேதி, நேரம், எதிரிகள் கைது, பிணை மற்றும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய விவரங்களை பதிவு செய்யவேண்டும்.
⧭ பதிவு ஏதும் இல்லாவிட்டால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை விசேஷம் ஏதும் இல்லை என குறிப்பு எழுத வேண்டும்.
⧭ ஒவ்வொரு பதிவின் முடிவிலும் பதிவு செய்தவர் முழு கையொப்பம் செய்து தனது பதவி நிலையை குறிப்பிட வேண்டும்.
⧭ பொது நாட்குறிப்பை துவக்கி விவரங்கள் எழுதி பொறுப்பில் வைத்துள்ளவர், காவல் நிலையத்தை விட்டு வெளி அலுவல்களுக்கு செல்லும் போது அந்த விவரத்தை எழுதி பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்படுகிறதோ அவரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
⧭ வெளி அலுவல் முடிந்து காவல் நிலையம் திரும்புகையில், காவல் நிலையத்தில் இடைப்பட்ட நேரத்தில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளை படித்து பார்த்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
⧭ காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டது முதல் காவல் நிலையம் திரும்பும் வரை செய்த அலுவல் விவரங்களை முழுமையாக பதிவு செய்யவேண்டும்.
⧭ இரவு மற்றும் பகல் ரோந்து அனுப்புகையில் அலுவல் செய்ய வேண்டிய விவரம், தணிக்கை செய்யப்பட வேண்டிய நபர்கள் பற்றியவிவரங்களை ஆகியவை குறித்து குறிப்பெழுத வேண்டும்.
⧭ வழக்கு விசாரணை அல்லது மனு அளிக்க யாரேனும் காவல் நிலையம் வந்தால், அவர்களை விசாரணை செய்த விபரம் /திருப்பி அனுப்பிய விவரம் போன்றவற்றை இதில் பதிவு செய்ய வேண்டும்.
⧭ வழிக்காவலில் கைதி உணவிற்கோ அல்லதுகழிப்பிட வசதிக்காகவோ காவல் நிலையம் அழைத்து வரப்பட்டது மற்றும் திரும்ப சென்ற விவரம் குறித்து பதிவு செய்ய வேண்டும்.
⧭ அதேபோல் ரோந்துப்பணி முடித்து வருகையில் அலுவல் புரிந்த விவரங்களை தெளிவாக எழுதவேண்டும்.
⧭ பொது நாட்குறிப்பு முடிக்கப்பட்டவுடன் நிலைய அறிக்கையுடன் (SR) இணைத்து வட்ட ஆய்வாளர் / துணை காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பவேண்டும்.
⧭ பொது நிறுவனங்கள் புத்தகம் முடிந்ததும் தொகுதி (Volume) எண் மற்றும் எந்த தேதி முதல் எந்த தேதி வரை என்று குறிப்பிட்டு நிலைய ஆவண பதிவேட்டு அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
⧭ பொது நாட்குறிப்பில் அடித்தல் மற்றும் திருத்தல் இருக்கக்கூடாது.
⧭ அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதவேண்டும்.
⧭ பக்க எண்கள் குறிப்பிட்டு எழுதவேண்டும்.
⧭ உடனுக்குடன் எழுத வேண்டும்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு – 172
குற்ற விசாரணை முறைச் சட்டத்தில் பிரிவு – 172ல், கூறப்பட்டவாறு, புலனாய்வு செய்யும் அதிகாரிகளின் நடவடிக்கைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நாட்குறிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது..
பொது நாட்குறிப்பைப் பெறுவதால் என்ன பயன்?
பொதுமக்கள் அளிக்கக்கூடிய நியாயமான புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும்கூட காவல்துறையினர் அதன்மீது வழக்குப் பதிவு செய்வதில்லை. (Mistake of Fact) பிழை வழக்கு என்று எழுதி அந்த புகாரை முடித்து வைத்து விடுவார்கள். இது போன்ற சூழ்நிலையில் காவல்துறையில் பராமரித்து வரப்படுகின்ற நாட்குறிப்பின் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கின் மனுதாரர் (மட்டும்) கேட்டுப் பெறலாம். அதன் மூலம் காவல்துறையினர் புலன்விசாரணை செய்த விபரத்தை அறிந்து கொள்ளலாம். நமது வழக்கு நியாயமான முறையில் விசாரணை செய்யப்படவில்லை என்றால், அதற்கான ஆதாரங்களை அதில் இருந்தே திரட்டி, புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரியின் மீது நடவடிக்கை எடுத்து, நமது வழக்கிற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கலாம்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

மனு ஆயுதம் (மனுக்கள் எழுதும் முறைகள்) pdfமனு ஆயுதம் (மனுக்கள் எழுதும் முறைகள்) pdf

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 courtesy: டாக்டர், நல்வினை விஸ்வராஜு (பத்து ரூபாய் இயக்கம்) குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின்

CRPC Criminal Procedure Code

CRPC | Criminal Procedure Code | குற்றவியல் நடைமுறை சட்டம். (Download)CRPC | Criminal Procedure Code | குற்றவியல் நடைமுறை சட்டம். (Download)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல்?விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல்?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 17 *விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல் – வழக்கும் தீர்வும்* Husband name change birth certificate la

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)