GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவான சிறைத் தண்டணை வழங்கக்கூடிய குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை கைது செய்ய வேண்டியதில்லை!

ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவான சிறைத் தண்டணை வழங்கக்கூடிய குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை கைது செய்ய வேண்டியதில்லை!

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

காவல்துறை இயக்குநர் அவர்களின் 30.01.2019 சுற்றறிக்கை

காவல்துறை இயக்குநர் அவர்களின் 30.01.2019 சுற்றறிக்கை
குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41ல், பிடியாணை இல்லாமல், ஒருவரை காவல்துறை அதிகாரி கைது செய்யலாம்! என்பதைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41-A
ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவான சிறைத் தண்டணை வழங்கக்கூடிய குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை கைது செய்ய வேண்டியதில்லை! என்பது பற்றி குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41-Aல் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர், அழைப்பாணையின்படி காவல் அதிகாரியின் முன் ஆஜராகாமலோ, காவல் அதிகாரி நடத்துகின்ற விசாரணைக்கு ஒத்துழைக்காமலோ, இருந்தால் நீதிமன்ற உத்தரவின்படி அவரை காவல்துறையினர் கைது செய்யலாம்.
டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை
அமந்த்தீப்சிங் ஜோஹர் VS தேசிய தலைநகர் பிரதேசம் டெல்லி ANR (உரிமையியல் நீதிப் பேராணை கோரும் மனு எண்:7608/2017 வழக்கில், வழங்கப்பட்ட 07.02.2018 நாளிட்ட தீர்ப்புரையில், குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41-Aன் கீழ், அறிவிப்பு வழங்குவதற்கான மாதிரிப் படிவமும், அதன் உட்பொருளும் மற்றும் அதனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு .சார்பு செய்யும் விதம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு சுற்றறிக்கை
மேற்கண்ட தீர்ப்பின் அடிப்படையில் தமிழக காவல்துறை இயக்குநர் அவர்கள், தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையினை அனுப்பியுள்லார். அதில் ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவான சிறைத் தண்டணை வழங்கக்கூடிய குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை கைது செய்ய வேண்டியதில்லை! என்பது பற்றிய வழிகாட்டுதல்கள் உள்ளது. அந்த சுற்றறிக்கையின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்! என்று மேற்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளவற்றை பின்பற்றாத புலன் விசாரனை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் அர்னேஷ்குமார் எதிர் பீகார் அரசு (2014) 8 SCC 273 வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின்படி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும்! என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்கள் இறுதியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்துபோலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த

பிழை வழக்கு ( counter case) பற்றிய சட்ட விழிப்புணர்வு.பிழை வழக்கு ( counter case) பற்றிய சட்ட விழிப்புணர்வு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 93 🙏பிழை வழக்கு ( counter case) பற்றிய சட்ட விழிப்புணர்வு..! பிழை வழக்கு பற்றி தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் PSO-658

RBI Logo

As per RBI Rule, no lunch interval to banks, வங்கிகளுக்கு RBI விதிப்படி உணவு இடைவேளை கிடையாது.As per RBI Rule, no lunch interval to banks, வங்கிகளுக்கு RBI விதிப்படி உணவு இடைவேளை கிடையாது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு RBI விதி படி உணவு இடைவேளை என்பது கிடையாது.காசாளரோ அல்லது ஊழியர்களோ மதிய உணவருந்த செல்லும் பொழுது

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.