கட்சிக்காரர் ஒரு வழக்கறிஞரை நியமித்து வழக்கை தாக்கல் செய்கிறார். பிற்பாடு ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக வாய்தா நாளில் வழக்கறிஞரால் மேற்படி வழக்கில் ஆஜராக முடியவில்லை. அதனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்யவோ அல்லது எக்ஸ்பார்ட்டியாக உத்தரவோ பிறப்பிக்க முடியுமா?
பெரும்பாலும் நீதிமன்றங்கள் வாய்தா தேதியன்று வழக்கில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்று தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது. வழக்கறிஞர் கட்சிக்காரரின் முகவராக செயல்படுகிறார். அதாவது கட்சிக்காரருக்காக வழக்கறிஞர் வழக்கில் ஆஜராகிறார்.
வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்று கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய முடியாது.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் ” Malkiat singh and Others Vs Joginder singh and Others (1997- 3 – CTC – CIVIL – 619)” என்ற வழக்கில் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு வழக்கில் வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் வழக்கறிஞரை நியமித்து முறையாக வழக்கு நடத்தி வரும் நிலையில், அவர்களுடைய வழக்கறிஞர், வழக்கு நடத்துவதிலிருந்து விலகிக் கொண்டால் வழக்கு தரபெபினர்களுக்கு அதுகுறித்து அறிவிப்பு அனுப்ப வேண்டும். அவ்வாறு ஒரு அறிவிப்பை அனுப்பாமல் வழக்கை மேற்கொண்டு நடத்தக்கூடாது. தள்ளுபடி செய்யக்கூடாது, ஒருதலைப்பட்சமாக தீர்ப்பளிக்கக்கூடாது.
எனவே இனி வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் அல்லது ஒருதலைபட்சமாக தீர்ப்பளிக்கப்பட்டால் வழக்கை மேற்கொண்டு விசாரணைக்கு ஏற்க கோரி மனுத்தாக்கல் செய்யும்போது இந்த தீர்ப்பை மனுவில் சுட்டிக்காட்டினால் நிச்சயமாக வழக்கு மீண்டும் கோப்பிற்கு எடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்
திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்
செல் – 8870009240