மதிப்புமிகு….தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உங்களின் இரண்டாம் மேல்முறையீடு அல்லது புகார் மனு ஆகியவற்றிற்கு வீணான காலதாமதம் செய்து வந்தால் நினைவூட்டு் கடிதம் அனுப்பும் மனு மாடல்..
மனுதாரர் :
……………………………….
……………………………….
………………………………..
…………………………………
பெறுநர் :
திரு . தலைமை தகவல் ஆணையர் அவர்கள் ,
தமிழ்நாடு தகவல் ஆணையம் ,
சென்னை 600035.
மதிப்பு மிகுந்த அய்யா /அம்மையீர்,
பொருள்:
நீதிமன்ற சாசனமாம் இந்தியச் சாட்சியச் சட்டம்1872 இன் 159வது பிரிவுப்படி பார்வையில் கண்டுள்ள எனது மனுவிற்கு எந்த ஒரு பதிலும் வழங்காமல் இருந்து வருவது குறித்து நினைவூட்டும் முகமாக விண்ணப்பம்.
பார்வை:
மனுதாரரின் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு இரண்டாம் மேல்முறையீடு/புகார் நாள்:……………………………..
1) மனுதாரர் ஆகிய நான்…………………………………….மாவட்டம் வட்டம்………………………………………….கிராமம்…………………………………………..தெரு…………………………. கதவு எண் என்ற முகவரியில் குடியிருக்கும்…………………………………………….என்பவரின் மகனான………………………………………………….. வயது………………….. ஆகிய நான் நீதியின் நோக்கம் நிறைவேற பணிந்து அனுப்பும் (அபி்டவிட்டு) சத்திய பிரமாணம் யாதெனில்………
2) பார்வையில் காணும் மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீடு /புகார் மனுவிற்கு கடந்த…………………………தேதி முதல்………………………………….தேதி வரை ஆக மொத்தம்………………………………..நாட்கள் வரை எந்த ஒரு பதிலும் வழங்காமல் இருந்து வருகிறீர்கள் என்பதையும்……..
3) தமிழ்நாடு அரசாணை நிலை எண் 73 / 2018 நாள் : 11.06.2018 இல் பொதுமக்களின் குறை தீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் – அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது –
தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூலில் அத்தியாயம் 22 இல் பத்தி 167 பிரிவு (ii) க்கு திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மனுக்களை பெற்றுக் கொண்ட 3 தினங்களுக்குள் மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் உடனடியாக அனுப்பப்பட வேண்டும் என்றும்
மனுவைப் பெற்றுக் கொண்ட 30 தினங்களுக்குள் குறை தீர்க்கப்பட வேண்டும் என்றும்
மனுதார் அம்மனு தொடர்பாக அலுவலகத்திற்கு நேரில் வந்து கேட்கும் போது அம்மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவித்தல் வேண்டும் என்றும்
ஏதேனும் காரணங்களுக்காக மனுவை இறுதி செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என்றால் அது குறித்து மனுதாருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும்
மனுதாரின் கோரிக்கையை ஏற்க இயலாத நிகழ்வில் அதற்குரிய காரணத்துடன் கூடிய பதிவை சம்பந்தப்பட்ட மனு தாருக்கு 30 தினங்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும்
தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை இயற்றியுள்ளது இந்த அரசாணையை ஆனது மதிப்பு மிகுந்த தங்கள் அலுவலகத்திற்கும் பொருந்தும் என மனுதாரரால் கருதப்படுகிறது.
4) மேலும் மதிப்பு மிகுந்த நீதிமன்றங்களின் தீர்ப்புகள் / மத்திய/ மாநில தகவல் ஆணையங்களின் தீர்ப்புகள்/ ஒரு மாநில அரசின் அரசாணை ஆகியவற்றை சட்டமாக மதிக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 இன் 13(3) இல் தெளிவுபடுத்தியுள்ளது. மேற்காணும் இந்த அரசாணையானது எனது இந்த வழக்கிற்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 இன் 14 வது பிரிவுப்படி பொருந்தும் என மனுதாரர் ஆகிய என்னால் கருதப்படுகிறது.
5) ஆகையால் இம்மனுவை நினைவூட்டும் விண்ணப்பமாக ஏற்றுக்கொண்டு இவ் விண்ணப்பம் தங்களுக்கு கிடைத்த 15 தினங்களுக்குள் மனுதாரர் ஆகிய எனக்கு தகுந்த பதில் வழங்கத் தவறும் பட்சத்தில் தங்களின் பதில் எனக்கு திருப்தி அளிக்காத பட்சத்திலும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மீது நீதியின் நடவடிக்கை மேற்கொள்ள இதுவே ஆவணம் ஆகி விடும் என்பதையும் மேலும் அதற்காகும் செலவினங்கள் வேலை இழப்பு வீண் அலைச்சல் மன உளைச்சல் ஆகியவற்றிற்கு தாங்களே தார்மீக பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதையும் இதன் மூலம் நினைவூட்ட படுகிறது
தங்கள் உண்மையுள்ள
தேதி:
இடம்:
இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 70வது பிரிவு படி இதையே பிரமாணமாக இதில்…………………………… தேதி அன்று என்னால் எனது இல்லத்தில் வைத்து கையொப்பம் செய்யப்படுகிறது.