தாமதிக்கபடும் நீதி மறுக்கப்படும் நீதியாகும் இதை உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் முதல் இன்று வரை வாயளவு பிரச்சாரமாகமாக மட்டுமே கடை பிடித்து நீதிக்கு தண்டணை வழங்கும் நீதிமன்றங்கள் குறித்து இன்று காண்போமா?
உரிமையியல் விசாரணை முறை விதிகள் : உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 – ன்- கட்டளை 7 – ன் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்கை ( விசாரணைக்கு ஏற்றதும் கட்டளை 5 விதி 1 ( 1 ) -ன் கீழ் பதிலுரையை முப்பது நாட்களுக்குள் தாக்கல் செய்ய கோரி எதிர்மனுதார்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப வேண்டும் .
அழைப்பானை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்ட தேதியில் இருந்து எழு நாட்களுக்குள் மனுதார் அதற்கென நீதிமன்றம் விதிக்கும் கட்டணத்தை கட்டளை 7 விதி 9 – ன் கீழ் செலுத்த வேண்டும் . விதி விலக்காக நீதிமன்றம் குறிப்பிடும் நாளில் அல்லது 90 நாட்களுக்குள் பதிலுரை தாக்கல் செய்யப்பட வேண்டும் .
பதிலுரையை பொருத்து புகாரை மெய்பிக்க தேவையான அல்லது மனுவை பொருத்து மனுவை பொய்பிக்கத்தேவையான ஆவணச்சான்றுகள் குறிப்பிட்டு அவைகளை தாக்கல் செய்து சாண்றாவனமாக குறியிட ஆட்சேபணை ஏதும் இருக்கிறதா எனவும் , எதிர் தரப்பினருக்கு அறிவிப்பு அனுப்பி சார்பு செய்யப்பட்ட . தேதியிலிருந்து 7 நாட்களுக்குள் பதில் அளிக்க கட்டளை 12 விதி 2 – ன் கீழ் கோர வேண்டும் . கட்டளை 12 விதி 2 – ன் * கீழ் அறிவிப்பை பெறும் தரப்பினர் , கட்டளை 12 விதி 2 அ – ன் கீழ் இது குறித்த தெளிவான தமது கருத்தை நீதிமன்றத்திற்கும் , எதிர்தரப்பினருக்கும் தெரிவிக்க வேண்டும் . இவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்தில் அல்லது பதிலில் ஒப்புதல் ஏதேனும் இருந்தால் நீதிமன்றம் தனது விருப்பம் போல் அல்லது தரப்பினர்களின் மனுவை பெற்று பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்பாக ஒப்புதலின் அடிப்படையில கட்டளை 12 விதி 6 – ன் படி உடனே தீர்ப்பு வழங்க வேண்டும் .
இப்படி தீர்ப்பரை வழங்க இயலாத போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள
ஆவணங்களின் அடிப்படையில் வழக்கை விசாரித்து முடிக்கும் பொருட்டு எழு 21 வினாக்களை எழுத வேண்டும் .
அதாவது மனுதார் கோரியுள்ள உரிமை சட்டபடி சரியானது தானா என முடிவு செய்ய தேவையான வினாக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு உருவாக்க வேண்டும் . இப்படி வினாக்களை உருவாக்குவதற்கு வேறு ஆவணம் ஏதும் தேவை என நீதிமன்றம் கருதும் போது அதை வைத்திருப்பவருக்கு அதை தாக்கல் செய்ய கோரி நீதிமன்றம் உத்தரவை அனுப்பி விட்டு வினாக்கள் எழுதுவதை ஏழு நாட்களுக்குள்ளாக கட்டளை 14 விதி 4 – ன் படி ஒத்தி போட வேண்டும் .
இதில் எதிர்மனுதாரர்கள் பலர் இருந்து அதில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் வழக்கை ஒப்புக் கொள்ளும் போது தக்கது எனகருதும் தீர்ப்பை கட்டளை 15 விதி 2 – ன் கீழ் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் . மற்ற எதிர்மனுதார்களுக்கு எதிராக மட்டுமே வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டும் .
எழு வினாக்கள் வனையப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் வழக்கு தரப்பினர்கள் தமது தரப்பில் சாட்சியாக அழைக்கப்பட வேண்டிய அல்லது ஆவணம் தாக்கல் செய்யப்படவேண்டிய சாட்சிகள் குறித்த பட்டியல் மனுவை கட்டளை 16 விதி 1 – ன்கீழ் தாக்கல் செய்ய வேண்டும் .
அப்படி அழைக்கப்படும் சாட்சிகள் தங்களின் வாக்கு மூலத்தை பிரமாணமாக கட்டளை 18 விதி 4 – ன் கீழ் தாக்கல் செய்யலாம் .
இதனை அடுத்து சாட்சிகள் தொடர்ந்து விசாரணை செய்யப்படவேண்டும் . கட்டளை 17 விதி 1 – ன் படி போதிய காரணம் காட்டப்பட்டால் நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைக்கலாம் .
விசாரணைதுவங்கிய பிறகு அதாவது சாட்சிகள் விசாரணை ஆரம்பம் ஆனதும் எந்ததரப்புக்கும் அதிகபட்சமாக மூன்று முறைக்கு மேல் வாய்தா வழங்க கூடாது .
சாட்சிகள் விசாரணைமுடிந்ததும் தரப்பினர்கள் எழுத்து மூலமான தமது வாதுரையைகட்டளை 18 விதி -2 ( 3 – அ ) -ன்கீழ் தாக்கல் செய்யலாம் .
இதற்கான கால நிர்ணயத்தை நீதிமன்றம் தான் கட்டளை 18 விதி 2 ( 3 – ஈ ) முடிவு செய்யும் , வாதுரைதாக்கல் செய்யப்பட்ட பிறகு கட்டளை 20 விதி 1 – ன் படி உடனடியாக அல்லது முப்பது நாட்களுக்கள் தீர்ப்பு பகர வேண்டும் அப்படி இயலாத போது அதிக பட்சமாக 60 நாட்களில் தீர்ப்பு பகர வேண்டும் . தீர்ப்புரை செய்த பிறகு கட்டளை 20 விதி 6 அ – ன் கீழ் உடனே தீர்ப்பானை அல்லது 15 நாட்களுக்குள் தீர்ப்புரை வரைவதை உறுதி செய்ய வேண்டும் .
வழக்குகளில் நகல் பெறுதல் : அனைத்து வழக்குகளிலும் நகல் பெற கால அவகாசம் எவ்வளவு எனசட்ட விதிகள் இருப்பதாக தெரியவில்லை .
எப்படி இருந்தாலும் , எந்த வழக்காக இருந்தாலும் வழக்கை முடிக்கவே குறைந்த பட்ச கால அளவு தான் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் அதிக பட்சம் நகல் வழங்க ஒரு வாரத்திற்குள் தான் கால அவகாசம் இருக்கும் என உறுதியாக நம்பலாம் .
ஏனெனில் வழக்கு தொடர்பான பதிவுகளின் நகலை அப்படியே ஜெராக்ஸாக பெறலாம் .
இப்ப புரியிதுங்களா நாட்டில் நடந்து வருகிற நீதிமன்றங்கள் எல்லாம் நீதிக்கு தண்டணைதான் கொடுத்து வருகின்றன என்று . என்ன யோசிக்கிறீங்க?
கீழ் நீதிமன்றங்களுக்கு தானே இந்த கால அவகாசம் . அப்புறம் எப்படி எல்லா நீதிமன்றமும் நீதிக்கு தண்டணை தான் அப்படீன்னு சொல்ல முடியுங்கிறீங்களா ?
ஏங்க , விசாரணை நீதிமன்றமே இவ்வளவு நாள்ல வழக்க முடிக்கனும் அப்படீங்கும் போது மேல் நீதிமன்றத்துக்கு இதுல என்ன வேலை இருக்கு ? கீழ் நீதிமன்றம் என்னென்ன தவறு செய்திருக்கு அல்லது என்ன விதத்தில் கையாண்டிருக்கு அப்படீன்னு கண்காணித்து முடிவு சொல்ற வேலை தானே ? இதுக்கு குறைந்த பட்ச கால அவகாசம்தானே இருக்க முடியும் ? அதிக பட்சம் இதுக்கு எவ்வளவு இருக்கலாம் ஒன்றரை மாதம் பத்தாதா ?
இந்த கணக்கு படி பாத்தா அமர்வு நீதிமன்றம் , உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கும் சேத்து அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் தானே ?
இதை எதையும் கடைப்பிடிக்காமல் நீதிமன்றங்கள் நடந்தால் அந்த நீதிமன்றத்துக்கு எந்த #நீதிமன்றம் தண்டணைவழங்க போகிறது ?
எனக்கு தெரிய அனைத்து வகையான வழக்குகளும் முடிவடைய அதிகபட்சமாக ஆறு மாத கால அவகாசம் தான் அந்தந்த சட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது . என்ன ஆச்சரியமா இருக்கா ? ஆம் உண்மை தான் .
இதில் இறுதியாக கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 – ல் தான் . இதில் கடந்த 2002 – ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலில் உள்ளது .
இப்படி வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் எல்லாம் மிக சரியாக உள்ளதா என்பதை நீங்களும் தான் சரிபார்த்து கொள்ளுங்களேன் .
சரி பார்க்கிறது மட்டுமில்ல . இதை தவறாம கடைபிடிக்கவும் வேணும் .
இரா.கணேசன்
பாதிக்கப்பட்டோர் கழகம்
அருப்புக்கோட்டை
9443920595