GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Jail IAS officers if they defy court orders: Madras HC | நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறை.

Jail IAS officers if they defy court orders: Madras HC | நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறை.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறையில் அடைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு Jail IAS officers if they defy court orders: Madras HC

WP(MD).14135/2020 MATHAVADIYAN Vs. THE REVENUE DIVISIONAL OFFIC Dated : 12/10/2020 https://bit.ly/3arAIGR

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறையில் அடைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மாதவடியான், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: அம்பாசமுத்திரம் தாலுகா கீழாம்பூர் கிராமத்தில் 2004-ல் 3 சர்வே எண்களில் 76 சென்ட் இடம் வாங்கினேன். அந்த இடங்களுக்கு எனது பெயரில் பட்டா கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் ஒரு சர்வே எண்ணில் எனது பெயரிலும், இரு சர்வே எண்ணுக்கு எனது பெயருடன் வேறு சிலரது பெயரையும் சேர்த்துக் கூட்டுப் பட்டாவாக வழங்கப்பட்டது.
இதைச் சரி செய்து தரக்கோரி சேரன்மாதேவி கேட்டாட்சியரிடம் மனு அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நான் 26.9.2020-ல் அளித்த மேல்முறையீட்டு மனு மீது பட்டா பாஸ்புக் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: பட்டா பாஸ்புக் சட்டப்படி, மனு மீது 120 நாட்களில் முடிவெடுக்க வேண்டும். அதன் மீதான மேல்முறையீடு மனு மீது 90 நாட்களிலும், அதன் மீதான சீராய்வு மனு மீது 60 நாட்களிலும் முடிவெடுக்க வேண்டும். இந்தக் காலக்கெடு அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற வழக்குகளைத் தவிர்க்கலாம்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அந்த அதிகாரியின் பணிப்பதிவேட்டிலும் குறிப்பிட வேண்டும். மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியை முடிக்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் அரசு ஒரு மாதத்தில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகளை நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். அந்தக் காலக்கெடுவுக்குள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது யாராவது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்து, அதை விசாரிக்கும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளார் என்ற முடிவுக்கு வந்தால், ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறைக்கு அனுப்ப வேண்டும். அதற்குப் பின்னர்தான் நீதிமன்ற அவமதிப்புச் சட்டப்படி அபராதம் விதிப்பது.
இந்த வழக்கில் மனுதாரரின் மனுவை சேரன்மாதேவி கோட்டாட்சியர் 2 வாரங்களில் தென்காசி கோட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும். தென்காசி கோட்டாட்சியர் 4 மாதத்தில் உரிய முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Source: hindutamil
MADURAI: The Madurai Bench of Madras High Court, in a recent order, observed that IAS officers should be punished with imprisonment if they do not comply with court’s directions.
Justice S Vaidyanathan said that if any IAS officer is found to have deliberately disobeyed the court’s order, he or she should be punished with imprisonment. “Imposition of fine should only be secondary and imprisonment should be primary,” he added.
The judge was hearing a petition filed by one Mathavadiyan seeking direction to the authorities to consider an appeal filed by him to make correction in the entries in his patta. Justice Vaidyanathan stated that officials should adhere to time limit while dealing with applications filed under Tamil Nadu Patta Passbook Act, 1983.
He said that lately several cases are filed before the Court seeking disposal of applications filed under Sections 10 to 13 of the aforementioned Act and if those applications are disposed of in time by the authorities concerned, the applicants need not unnecessarily approach the Court.
“It is not known as to why an order of the Court is required for the authorities to do their job as adumbrated under the Act, for which salary is provided to them,” he further criticised.
Citing a Madras High Court judge, who visited the accident spot before granting compensation to an electrocution victim, as an example, Justice Vaidyanathan said the government authorities ought to conduct spot inspections wherever necessary.
If they cannot, they are unfit to hold the post and should be shown the doors, he said. Recalling a judgment passed by a Division Bench of the court framing guidelines to be followed by revenue officials in various matters, the judge noted it is unsure whether the same has been complied with and gave the aforesaid warning.

Source: newindianexpress.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Sale deed Documents

Sale deed | 16 Important things should be followed while purchasing a property | கிரைய பத்திரம் பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய 16 முக்கிய விஷயங்கள்Sale deed | 16 Important things should be followed while purchasing a property | கிரைய பத்திரம் பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய 16 முக்கிய விஷயங்கள்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 1). ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்காக உற்பத்தி செய்யப்படும் ஆவணம் தான்

RTI Question and Replies from Police

RTI Question and Replies from Police for Barricade | காவல் துறையிடமிருந்து இரும்பு தடுப்புக்காக த.பெ.உ. கேள்விகளும் பதில்களும்.RTI Question and Replies from Police for Barricade | காவல் துறையிடமிருந்து இரும்பு தடுப்புக்காக த.பெ.உ. கேள்விகளும் பதில்களும்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 இந்தியாவில் அதிக இடங்களில் ரோடுகளில் போடப்பட்டுள்ள BARRICADE எனப்படும் இரும்பு தடுப்பால், வாகன ஓட்டிகளுக்கு பலவகையான சிரமங்களும், பல வேளைகளில் விபத்துக்களும்,

போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்களா?போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்களா?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்களா? பொய் வழக்கில் இருந்து உங்களை தற்காத்து கொள்ள கீழ் கண்டவாறு செயல்பட்டால் நீங்கள் உங்களை தற்க்காத்து

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)