அனைவருக்கும் வணக்கம், நான் உங்கள் செல்வம் பழனிசாமி.
சமூக வலைதளமான பேஸ்புக்ல சட்டம் சம்பந்தமாக மத்தவங்க போட்ட பதிவுகளையும் செய்திகளையும் நான் நேற்று சாயங்காலம் பார்த்துட்டு இருந்தேன். கடந்த 2021 வது வருஷத்துல கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ஜி எஸ் சமீரா அவர்கள் வெளியிட்டு இருந்த ஒரு தகவல கோயம்புத்தூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து வெளியிட்டு இருந்தாங்க.
அறுபதுக்கு வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளையும், குறைகளையும், தெரிவிச்சு உதவிகள் பெறுவதற்கு. 14567 ஒன்னு நாலு அஞ்சு ஆறு ஏழு என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்பது தான் அந்த செய்தியோட சுருக்கம்.
ஆனால் 2021 வது வருஷத்துல வெளியிட்டு இருக்காங்க இன்னும் இது செயல்பட்டுக்கிட்டு இருக்கா இல்லையாங்கிறது தெரியலையே என்று யோசிச்சேன். வந்த சந்தேகத்தை உடனே போக்கிட, அந்த எண்ணுக்கு உடனடியாக நான் தொடர்பு கொண்டேன். கொஞ்ச நேரத்துல தொடர்பு கிடைச்சது. நீங்க யாரு? உங்களுடைய பெயர் என்ன? உங்களுடைய வயது என்ன? உங்களுக்கு என்ன உதவி வேணும்னு? அன்பா கேட்டாங்க. நான் என்ன பத்தி அவங்ககிட்ட முழு விவரத்தையும் சொன்னேன். பொறுமையா கேட்டுக்கிட்டாங்க. அதுக்கப்புறம் எங்களுடைய சேவைகளை பத்தி உங்களுக்கு நான் சொல்றேன் கேட்க உங்களுக்கு நேரம் இருக்கான்னு என்கிட்ட கேட்டாங்க. சொல்லுங்கம்மா அதுக்காகத்தான் நான் உங்களுக்கு போன் பண்ணேன் என்று நான் சொன்னேன்.
அதுக்கு அப்புறமா அவங்க முதியோர்களுக்காக செஞ்சுகிட்டு இருக்கிற சேவையை பற்றி விரிவா சொன்னாங்க. இது சம்பந்தமா ஒரு விழிப்புணர்வு வீடியோ போடலாமே என்கிற எண்ணம் எனக்கு வந்தது. இந்த வீடியோ முதியோர்களுக்கு மட்டும் இல்ல சமூக ஆர்வலர்களுக்கும் கண்டிப்பா ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். அதனால நான் சொல்ல போற தகவலை ஸ்கிப் பண்ணாம தயவு செஞ்சு முழுசா பாருங்க.
உலகம் முழுவதும் ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் 1ஆம் தேதி உலக முதியோர்கள் தினத்தை கொண்டாடுறாங்க. நம்ம தமிழ்நாட்டுல கடந்த 2019 வருஷத்துல இந்த உலக முதியோர் தினத்தை முன்னிட்டு வேர்களை தேடி” என்கிற ஒரு அருமையான தொலைநோக்கு திட்டத்தை அப்போ நெல்லை காவல்துறை துணை ஆணையராய் இருந்த திரு எஸ் சரவணன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வீட்டில் தனியாக வசித்துக்கொண்டிருந்த முதியோர்களை எல்லாம் தேடிப் பிடிச்சு கணக்கு எடுத்து அவர்களுக்கு “வேர்களைத் தேடி” என்ற தலைப்பில், ஒரு குறிப்பேட்ட கொடுத்து அவங்களுக்கு சட்ட விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் அளிக்கிறது தான் இந்த திட்டத்தோட நோக்கம். அந்த குறிப்பேட்டில் அவர்களுக்கு தேவையான தகவல்களும், பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷனுடைய நம்பரும்,காவல்துறை கட்டுப்பாட்டு அறையோட நம்பரும் இருந்தது. அவங்க பயன்படுத்திக்கிட்டு இருந்த செல்போன்கள்ல அவசர உதவிக்காக பயன்படக்கூடிய காவல்துறை உருவாக்கி வைத்திருக்கிற காவலன் ஆப்ப பதிவு செஞ்சு கொடுத்தாங்க. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்க.
வசதி உள்ளவங்களா இருந்தா அந்த முதியவர்கள் பாதுகாப்புக்காக அந்த வீட்டில் சிசிடிவி கேமராவை மாற்ற சொன்னாங்க. காமம் கேட்டு இல்ல இல்ல அந்த காம்பவுண்ட் கேட்டையும் மாட்ட சொன்னாங்க.
இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இருக்கிற பொதுமக்களுடைய பாராட்டு கிடைத்தது இந்த தகவல் உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். கடந்த 2021 வருஷத்துல மத்திய அரசும் மாநில அரசும் இணைஞ்சு உருவாக்கி இருக்கிற 14567 ஒன்னு, நாலு, அஞ்சு, ஆறு, ஏழு, இந்த இலவச ஹெல்ப்லைன் திட்டமோ நான் சொன்ன வேர்களை தேடி திட்டமும் ஒன்று போல தான் இருக்கு.எந்த போன்ல இருந்தும் இந்த 14567 ஒன்னு நாலு அஞ்சு ஆறு ஏழு நம்பருக்கு நீங்க தொடர்பு கொள்ள முடியும் கட்டணம் இல்லாத தொலைபேசி நம்பர் இது. இந்த நம்பருக்கு நேத்து நான் தொடர்பு கொண்ட போது என்கிட்ட பொறுமையாகவும், அன்பாகவும், அவங்க சொன்ன விஷயங்களை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு சமூக நலத் துறையில் இருந்து இந்த சேவையை பொது மக்களுக்கு வழங்குகிறார்கள். இந்த இலவச தொலைபேசி நம்பருக்கு வாரத்தின் எல்லா நாட்களிலும் நீங்க தொடர்பு கொண்டு உங்களுடைய குறைகளை சொல்ல முடியும். காலையில் 8:00 மணியிலிருந்து இரவு 8 மணி வரைக்கும் உங்களுடைய குறைகளை கேட்க அதற்கு வழி காட்ட இந்த நம்பர்ல ஒரு உதவியாளர் இருப்பாங்க.
தங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளையும், அவசர மருத்துவ உதவிகளையும், முதியோர் இல்லங்கள் பற்றிய தகவல்களையும், சட்ட உதவிகளையும், பாதுகாப்பு சேவைகளையும், ஆதரவையும், மன ஆறுதலையும், மூத்த குடிமக்கள் இந்த 14567 ஒன்னு நாலு அஞ்சு ஆறு ஏழுங்கற இலவச உதவி எண்ணில் தொடர்பு கொண்டு பெற முடியும்.
சொந்த பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்கள பராமரிக்காமல் வீட்டை விட்டு விரட்டி இருந்தாலும், அவங்க பேர்ல இருந்த சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிட்டு வெளியே துரத்தி இருந்தாலும், கூட இந்த நம்பர்ல அவங்க புகார் அளிக்கலாம். நீங்க போற பாதையில யாராவது முதியோர்கள் கவனிக்க ஆள் இல்லாமல் இருந்தாலோ, சரியான பாதுகாப்பு இல்லாமல் இருந்தாலும், மருத்துவ உதவி தேவைப்படுற நிலையில இருந்தாலோ, சட்ட உதவி வேணுங்குற நிலைமையில் இருந்தாலோ, 14567 ஒன்னு நாலு அஞ்சு ஆறு ஏழு என்ற நம்பருக்கு நீங்களே போன் செய்து அதை சொல்லலாம்.
போன் மூலமா நீங்க சொல்லக்கூடிய தகவல் மாவட்ட சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து உடனடியா அந்த மூத்த குடிமக்களுக்கு உதவி கிடைக்க ஏற்பாடு செய்வாங்க. உதவி செஞ்ச பிறகு அவங்களுக்கு வீடு இருந்தா அந்த வீட்டுக்கு அவங்களை அனுப்பி வைப்பாங்க அப்படி அவங்களுக்கு வீடு எதுவும் இல்லை அப்படின்னா, அரசாங்கம் நடத்துற விடுதிக்கு அவங்கள அனுப்பி வைத்து அங்க வச்சு அவங்கள பராமரிப்பாங்க.
இந்த சேவைகளுக்காக அதிக தன்னார்வலர்கள், அரசாங்கத்துக்கு தேவைப்படுறாங்க, நான் என்னுடைய பெயரை பதிவு செஞ்சுட்டேன் தன்னார்வலராக சேவை செய்வதற்கு உங்களுக்கு ஆர்வம் இருந்தா 14567 ஒன்னு நாலு அஞ்சு ஆறு ஏழு என்கிற இந்த இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள பத்தின விவரங்களை சொல்லி உங்களையும் ஒரு தன்னால தன்னார்வலராக நீங்க பதிவு செய்ய முடியும்.
60 வயது நிரம்பிய மூத்த குடிமகனுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அன்பு நண்பர்களே மிக முக்கியமான அவசியமான செய்தி அனைவரும் பகிரவும்
மூத்த குடி மக்களுக்கு ஒரு நற்செய்தி:
தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சீனியர் சிட்டிசன்களுக்கும் உதவும் முறையில் கைபேசி எண் 14567 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் நான் சிறிது நேரத்திற்கு முன்பு தொடர்பு கொண்டேன் அவர்கள் பேசும்போது நமக்கு என்ன குறை என்று கேட்டார்கள் வயதானவர்களுக்கு பெற்ற பிள்ளைகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என்ற குறையா? அல்லது மருத்துவ ரீதியான குறையா? அல்லது ஓய்வூதியம் பெறுவதற்கான ஏதாவது தடை உள்ளதா? வங்கி சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஏதாவது குறை இருப்பின் கூறுங்கள் என்று கேட்டார்கள்.
இந்த சேவை மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை குறைதீர்க்கும் மையமாக செயல்பட தமிழக அரசு கொண்டு வந்துள்ளது இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு ஒரு வழிகாட்டியாக அல்லது எங்கு சென்றாலும் நிதானமாகவும் பாதுகாப்பாகவும் செல்லக்கூடிய இடங்களுக்கு செல்ல முடியாவிட்டால் மேற்கண்ட எண்ணான 14 567 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கூறினால், நமக்கு எந்தவித கஷ்டமும் இல்லாமல் ஒரு பெரிய வழிகாட்டியாக நமது உயிருக்கு பாதுகாப்பாக அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தமிழக அரசு செய்துள்ளது. அனைத்து மூத்த குடிமக்களும் வரவேற்பு கொடுத்து தமிழக அரசு பாராட்டி வருகிறது இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சேவை மையம் ஆகும்.
அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் எந்த வேலைக்கும் எந்த அச்சமும் இன்றி நம்முடன் எப்பொழுதும் ஒரு உதவியாளர் இருப்பது போல் இந்த தமிழக அரசின் சேவை எண் 14567 யாரும் மறக்க வேண்டாம் என்று அன்புடன் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயன் பெறுங்கள் உதவி கேளுங்கள். வணக்கம்.
நான் சற்றுமுன்பு இந்த நம்பரில் தொடர்பு கொண்டு பேசினேன் எதிர்முனையில் பேசிய பெண்மனி என்னிடம் பெயர், ஊர், விலாசம், கேட்டார்கள் என்னகுறை என்று கேட்டபோது, எனக்கு நான்குமாத D.A அரியர் கிடைக்கவில்லை என்றேன் எங்குவேலை செய்து ஓய்வு பெற்றீர்கள் என்று கேட்டபோது எல்லாவிபரத்தையும் சொன்னே்.
நாளை காலையில் அவர்களுடைய டீம் நேரடியாக SBI JIPMER BRANCH க்கு போய் விசாரனை செய்து நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். உடல்நலம் பற்றியும் உடம்பில் வேறு ஏதாவது குறைபாடுகள் இருந்தால் சொல்லுங்கள் உதவி செய்கிறோம் என்று மிகபரிவுடன் கேட்டார்கள். உங்கள் பிள்ளைகள் உங்களை கவணித்துக்கொள்கிறார்களா? அருகில் இருக்கிறார்களா? தூரத்தில் இருக்கிறார்களா? என்று மிகஅக்கறையுடன் விசாரித்தார்கள் எந்தகுறையிருந்தாலும் சொல்லுங்கள் என்று சொன்னார்கள் இந்த முதியோர் குறைதீர்க்கும் சேவை மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து செயல்படுகிறது என்று சொன்னார்கள் நண்பர்களே உங்களுக்கு ஏதாவது குறையிருந்தால் இந்த 14567 ல் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் உறவினர்,மற்றும் நண்பர்களுக்கு இந்த பயனுள்ள தகவலை அனுப்பி வையுங்கள், நன்றி.