Landlord-Tenant Dispute | வாடகைத்தாருக்கும், இட உரிமையாளருக்கும் இடையேயான தகராறு.
-
by admin.service-public.in
- 86
- Points / குறிப்புகள்:
- பொதுவாக ஒரு வாடகைதாரர், தவறாது வாடகை கொடுத்து வரவேண்டும்.
- ஒரு உரிமையாளர், ஒரு வாடகைதாறரை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால், அவர் முதலில் வாடகை வாங்குவதில் இருந்து தன்னுடைய குளறுபடிகளை தொடங்குவார்.
- அந்த நிலையில், தொடர்ச்சியாக வாடகை வாங்க வரமாட்டார், அல்லது நேராக சென்று கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள மாட்டார்.
- உரிமையாளர் வாங்க மறுத்தாலும் ஏதாவது ஒரு வழியில் வாடகை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வழிகள்: உரிமையாளரிடம் அவருடை வங்கி கணக்கு கேட்டு கடிதம் அனுப்பி பெறலாம். அல்லது வங்கி கணக்கு ஏற்கனேவே தெரிந்தால் , அந்த வங்கியில் டெபாசிட் செய்துகொண்டு வரலாம்.
- வங்கி வசதி கிடைக்காத நிலையில், அந்த வாடகை பணத்தை MONEY ORDER அஞ்சல் வழியாக அனுபலாம்.
- மேற்படி மூன்று வழிகளிலும் உரிமையாளர் வாடகையை பெற மறுத்தால், அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து, நீதி மன்றத்திலேயே வாடகையை செலுத்தி வரலாம்.
- சில உரிமையாளர்கள், வாடகையை வாங்கிகொண்டு, அதற்கான பற்றுச்சீட்டு தராமல் இருப்பார்கள், அப்படி விடாமல் பற்றுச்சீட்டு கேட்டு பெறவேண்டும்.
- அல்லது, வங்கி காசோலையாக வாடகையை செலுத்தி, ஆதாரமாக்கி கொள்ளவேண்டும்.
- ஒரு இடத்து உரிமையாளர், ஒரு வாடைதாரரை என்னென்ன காரங்களுக்கு காலி செய்ய சொல்லலாம்?
- 1. வேண்டுமென்றே வாடகை பாக்கி வைத்து இருப்பவரை காலி செய்ய சொல்லலாம்.
- 2. இடத்து உரிமையாளருக்கே அந்த இடம் உண்மையாக தேவை பட்டால் காலி செய்ய சொல்லலா.
- 3. தொந்தரவுகள் உண்மையாக இருக்குமேயானால், காலி செய்ய சொல்லலாம்.
- 4. வாடகைதாரர் இருக்கும் கட்டடம் மிகவும் பழயதாகவோ, இடிந்து விழும் நிலையில் இருந்தாலும் காலி செய்ய சொல்லலால்.
- 5. மாற்று உபயோகம் செய்தல் , அல்லது கீழ் வாடகைக்கு விட்டால் காலி செய்ய சொல்லலாம்.
- மேற்படி காரணங்கள் உண்மையெனும் பட்சத்தில், அவற்றை நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும். ஒரு இடத்து உரிமையாளர், வேண்டுமென்றே, தண்ணீரை தடுப்பது, மின்சாரத்தை துண்டிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கலாமா?
- மின்டாரம் மற்றும் தண்ணீர் துண்டிக்க பட்டால், அதை உடனே திருப்பி வழக்கவேண்டும் என்று, நீதிமன்றத்தை நாடலாம், ஓரிரு நாட்களில் இடைக்கால மறு சீரமைப்பு முறையில் அதற்கு பரிகாரம் கிடைக்கும்.
- அப்படி நீதிமன்ற ஆர்டரையும் மதிக்காமல், உரிமையாளர் தடை செய்த மின் இணைப்பையோ, தண்ணீர் இணைப்பையோ மீண்டும் தர மறுத்தால், உரிமையாளர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடலாம்.
- நீதி மன்ற அவமதிப்பு தொடரப்பட்டால், அது குற்றவியல் வழக்காகிவிடும் எனவே, அதற்கான தண்டனையை வாங்கி கொடுக்கலாம்.
- அல்லது, நீதிமன்றம் மூலமாக ஒரு அமீனா நிர்ணயிக்கபட்டு, நேரடியாக அவர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன், துண்டிக்கப்பட்ட விஷயத்தை திரும்ப பெறமுடியும்.
- அதற்கான செலவுத்தொகையை வாடகையில் கழித்துகொள்ளலாம்.
- கீழமை நீதி மன்றங்களில் தீர்வு கிடைக்காத பட்சத்தில், உயர்நீதி மன்றத்திற்கும், அதைத்தொடர்ந்து உச்ச நீதி மன்றத்திற்கும் வழக்கை கொண்டு சென்று தீர்வு காணமுடியும்.
- RCOP, RCA, REVISION, SLP போன்ற நான்கு வகைகளில் வழக்கை கையாளலாம்.
- ஒரு வாடகை தாரர் பல வருடங்கள் ஒரு இடத்தில் இருந்துவிட்டால், அவர் அந்த இடந்து உரிமை கொண்டாட முடியுமா?
- ADVERSE POSSESSION அனுபவ பாத்தியம் சட்டம் வாடகை தாரருக்கு பொருந்தாது.
- நீதிமன்றத்திற்கு சென்றால் எவ்வளவு காலம் பிடிக்கும்?
- பழைய காலம் போல, ரொம்ப காலங்கள் எடுக்காது, சில காலங்களில் முடிவடைந்துவிடும் என்று நம்பலாம்.
- Courtesy: S. M. RAZIAQ ALI, MA, MBA, ML, DLL, PGDCA, Advocate, Notary. 35/3 Siyali Street, Pudupet, Chennai 600002 Phone 044 28591882 Cell: 9444085595.

🔊 Listen to this Points / குறிப்புகள்: பொதுவாக ஒரு வாடகைதாரர், தவறாது வாடகை கொடுத்து வரவேண்டும். ஒரு உரிமையாளர், ஒரு வாடகைதாறரை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால், அவர் முதலில் வாடகை வாங்குவதில் இருந்து தன்னுடைய குளறுபடிகளை தொடங்குவார். அந்த நிலையில், தொடர்ச்சியாக வாடகை வாங்க வரமாட்டார், அல்லது நேராக சென்று கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள மாட்டார். உரிமையாளர் வாங்க மறுத்தாலும் ஏதாவது ஒரு வழியில்…