- Points / குறிப்புகள்:
- ஒரு வழக்கில் நமக்கு விருப்பமில்லாத வழக்கறிஞரை மாற்றிக்கொள்ளலாம்.
- அதற்கு, நாம் ஏற்கனேவே வக்காலத்து கொடுத்து இருந்த வழக்கறிஞரிடம், மாற்று வக்காலத்து நேரில் சென்று கேட்டு பெறலாம். அதில் இந்த வழக்கை வேறொரு வழக்கறிஞரிடம் மாற்றுவதில் ஆட்சேபனை ஏதுமில்லை என்று சொல்லப் பட்டிருக்கும்)
- இதற்கு அவர் மறுப்பாறேயானால், அதே வழக்கறிஞருக்கு பதிவு தபால் மூலம், தன விருபத்தை சொல்லி, தன்னுடைய வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்கும்படி கேட்கலாம்.
- இந்த நிலையில், எந்த வழக்கறிஞரும் நமக்கு மறுப்பு தெரிவிக்காது, செயல்பட வேண்டியது அவர்களின் கடமை.
- அப்படி அவர் செயல்பட மறுத்தால், நமது வழக்கு நடக்கும் அதே நீதிமன்றத்தில், வக்கலத்தை மறுத்தல் அல்லது வக்கலத்தை திரும்ப பெறுதல் (Cancelation of VAKKALAT or Revoke of VAKKALAT) செய்ய ஒரு AFFIDAVIT மனு அளிக்கலாம்.
- வக்காலத்தை திரும்பப் பெற்றதால், வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை தர, ஒரு வழக்கறிஞர் மறுத்தால், நீதி மன்றத்திலும் புகார் அளிக்கலாம், அல்லது BAR COUNCIL வழக்கறிஞர் சங்கத்தில் புகார் அளிக்கலாம்.
- அதிலும், ஆவணங்கள் கிடைக்காத பட்சத்தில், நமது வழக்கு நடக்கும் அதே நீதிமன்றத்தில், நகல் கேட்டு மனு செய்து பெறமுடியும்.
- Courtesy: S. M. RAZIAQ ALI, MA, MBA, ML, DLL, PGDCA, Advocate, Notary. 35/3 Siyali Street, Pudupet, Chennai 600002 Phone 044 28591882 Cell: 9444085595
Change a Lawyer to your Case?, Changing Advocate | வழக்கில் எப்படி வழக்கறிஞரை மாற்றிக்கொள்வது?
Categories:
ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.