
Senior Citizens act-2007 | மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம்-2007 (Download pdf & Video)
-
by admin.service-public.in
- 134
- Points / குறிப்புக்கள்: by Automatic Voice to text software.
- இன்றைக்கு நாம்ம மூத்த குடிமக்கள் சட்டம் பற்றி பார்க்கப் போறோம்
- Senior Citizens Act சீனியர் சிட்டிசன்ஸ் சட்டம் இதனுடைய முழுமையான பெயர் Maintainance and Appearance and Senior Citizens Act-2007 அண்ட் அப்பேரன்ஸ் அண்ட் சீனியர் சிட்டிசன்ஸ் அக்ட் 2007 என்பதாகும் அதாவது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல சட்டம் 2007.
- இந்த சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இந்த சட்டத்துக்கு 29 12 2007 இல் கொடுக்கப்பட்டு இந்திய அரசிதழில் 31 12 2007 ல் வெளியிடப்பட்டது
- இந்த சட்டத்தை முக்கிய நோக்கம் மூத்த குடிமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் பராமரிப்பு மற்றும் அவர்களுடைய நலனை உறுதி செய்வது இந்த சட்டத்தை முக்கிய நோக்கமாக சொல்லப்பட்டு இருக்கிறது.
- இந்த சட்டத்தில் முக்கியமான அம்சங்கள் மூன்றாகப் பிரிக்கலாம்
- ஒன்று மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோருடைய பராமரிப்பு மெயின்டனன்ஸ்.
- இரண்டாவது மூத்த குடிமக்கள் தங்களுடைய சொத்துக்களை தானமாக செட்டில்மெண்டாக தங்கள் பிள்ளைகளுக்கோ உறவினர்களுக்கோ யாருக்கோ தங்களை வருங்காலத்தில் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையில் எழுதி வைத்து விட்டால் அதன் பிறகு அந்த சொத்தை பெற்ற நபர் அந்த நம்பிக்கைக்கு உரியவராக நடந்து கொள்ளாவிட்டால் அந்த தான செட்டில்மென்ட் செல்லாது என்று அறிவிக்க கூடிய அதிகாரம் ஆர்டிஓ நீதிமன்றத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
- மூன்றாவது அரசாங்கத்துக்கும் இந்த சட்டத்தின் கீழ் சில கடமைகள் சொல்லப் பட்டிருக்கின்றன.
- முதலில் இந்த சட்டத்தின் கீழ் பாதுகாப்பு யார் யாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
- பெற்றோர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் இந்த சட்டத்தின்கீழ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது அவர்களை பராமரிக்க வேண்டிய கடமை பிள்ளைகளுக்கும் அந்த மூத்த குடிமக்கள் உடைய உறவினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த இடத்தில் பிள்ளைகள் என்று சொல்லும்போது, மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் எல்லாருக்குமே அந்த கடமை கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த பெற்றோர் என்பவர்கள் சொந்த பெற்றோராக தான் இருக்க வேண்டும் என்பது இல்லை.
- சொந்த பெற்றோர் மற்றும் அந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து பெற்றோருக்கும் இந்த சட்டத்தின் கீழ் இந்த பராமரிப்புக்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
- இந்த சட்டத்தின் கீழ் பெற்றோர் தாத்தா பாட்டி அல்லது மூத்த குடிமக்கள் பராமரிப்பு தொகை தரக்கூடிய உரிமை அவர்களுக்கு இருக்கிறது.
- குழந்தை இல்லாத ஒரு மூத்த குடிமகன் இருந்தார் என்று சொன்னால் அவருக்கு உறவினர்கள் அவரை பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது.
- எந்த உறவினர்கள் என்று சொன்னால் அவருடைய சொத்தை அடைந்த உறவினர்கள் அல்லது அடையப்போகும் உறவினருக்கு அந்த மூத்த குடிமக்களை பாதுகாக்க கூடிய கடமை சொல்லப்பட்டிருக்கிறது.
- மூத்த குடிமக்கள் என்று சொல்லும்போது இந்த சட்டத்தில் 60 வயது கடந்தவர்கள் மூத்த குடிமக்கள் என்ற ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
- பராமரிப்பு, அல்லது மெயின்டனன்ஸ் என்றால் உணவு, உடை, இருப்பிடம் மருத்துவம், இவையெல்லாம் பராமரிப்பில் அடங்கும்.
- பராமரிப்பு செய்ய வேண்டிய மகனோ, மகனோ, பேரனோ, பேத்தியோ, இந்த பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களை கவனிக்கவில்லை அவளுக்கு தேவையான பராமரிப்பை செய்து கொடுக்க வில்லை என்றால்.
- அந்தப் பெற்றோரோ அல்லது மூத்த குடிமக்களோ தன்னைத்தானே பராமரித்து கொள்ள முடியாத நிலையில் இருந்தால்,
- அவர்கள் இந்த மெயின்டனன்ஸ் த்ரிபுனல் Maintainance Tribunal என்று சொல்லக்கூடிய இந்த பராமரிப்பு தீர்ப்பாயத்தை அணுகி அவர்கள் பராமரிப்பு தொகை மெயின்டனன்ஸ் அமௌன்ட் கேட்டு மனுதாக்கல் செய்யலாம்.
- தமிழகத்தைப் பொருத்தவரை ஆர்டிஓ நீதிமன்றத்துக்கு அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு மனுத்தாக்கல் செய்து இந்த பராமரிப்பு தொகையை பெறலாம்.
- அப்படி இந்த மனுவினை தாக்கல் செய்யும்போது 90 நாட்களுக்குள் அந்த ஆர்டிஓ அதை விசாரித்து எதிர் மனுதாரர்களை அழைத்து, உரிய விசாரணை நடத்தி, அதில் முடிவு எடுக்க வேண்டும்.
- 90 நாட்களுக்கு மேல் தேவை ஏற்பட்டால் மேலும் ஒரு மாதம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்.
- இதற்கிடையே இடைக்கால பராமரிப்பு தொகை வழங்கும் அந்த ஆர்டிஓ கோர்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை மாத பராமரிப்பு தொகை தரவேண்டும் என்று ஆர்டிஓ உத்தரவிட முடியும்.
- அப்படி ஆர்டிஓ ஒரு உத்தரவு பிறப்பித்தால், யார் அந்த பராமரிப்பு தொகை கட்ட வேண்டும் என்று சொல்கிறாரோ அவர் ஒரு மாதத்துக்குள் இந்த பராமரிப்புத் தொகையை செலுத்த வேண்டும்.
- அப்படி அவர் ஒரு மாதத்துக்குள் செலுத்தவில்லை என்றால் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வாரண்ட் பிறப்பிக்க அந்த தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
- அவர் பணம் செலுத்தும் வரை அல்லது ஒரு மாதம் இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை அவரை சிறையில் அடைக்க இந்த தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தை பொருத்தவரை இந்த மெயின்டனன்ஸ் கேட்டு எந்த இடத்தில் இந்த மனு தாக்கல் செய்யலாம் என்றால்,
- அந்த மூத்த குடிமக்கள் வசிக்கும் இடத்திலோ அல்லது ஏற்கனவே வசித்த இடத்திலோ அல்லது எதிர்மனுதாரர் வசிக்கும் இடத்திலோ வசித்த இடத்திலும் இந்த மனுவினை தாக்கல் செய்யலாம்.
- இதுதான் இந்த மெயின்டனன்ஸ் பற்றி இந்த மூத்த குடிமக்கள் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
- அரசாங்கத்துக்கு என்று சில கடமைகள் சொல்லப்பட்டு இருக்கிறது.
- இந்த அரசாங்கம் மாநில அரசாங்கம் மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்களை ஏற்படுத்தி 150 மூத்த குடிமக்கள் வரை அவர்களை தங்க வைக்க கூடிய ஒரு கெபாசிடி உள்ள முதியோர் இல்லங்களை மாவட்டம்தோறும் ஏற்படுத்த வேண்டும்.
- அதுபோல அரசு மருத்துவமனைகளிலும் அரசு உதவிபெறும் மருத்துவமனையிலும் இந்த சீனியர் சிட்டிசன்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த மூத்த குடிமக்களுக்கு தனியான ஒரு வரிசைக்கு வசதி ஏற்படுத்துவது அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை செய்து கொள்ள, அரசாங்கத்தின் கடமையாக சொல்லப்பட்டுள்ளது.
- மூத்த குடிமக்களை யாராவது கைவிட்டு விட்டால் தங்கள் பராமரிப்பில் உள்ள மூத்த குடிமக்களை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டால் அந்த தவறு செய்த நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
- இந்த சட்டத்தை ஒரு முக்கியமான பகுதிக்கு வருவோம் பிரிவு இருபத்திமூன்று இந்த பிரிவு 23 இப்படி இந்த மூத்த குடிமக்கள் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அதை இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த 2007ம் ஆண்டுக்குப் பிறகு,
- ஒரு தானம் மூலமாகவோ அல்லது ஒரு செட்டில்மெண்ட் போன்ற ஆவணங்கள் மூலமாகவோ தங்களுடைய பிள்ளைகளுக்கு மகன் மகள் பேரன் பேத்திகளுக்கு அல்லது உறவினர்களுக்கோ ஒரு சொத்தை தானமாக கொடுத்து இருந்தால், தங்களை இவர்கள் பார்த்துக்கொள்வார்கள் தங்களுக்கு தேவையானவற்றை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் கொடுத்திருந்தால்,
- அந்த சொத்தினை பெற்றுக் கொண்ட நபர் அந்த கடமையை செய்யத் தவறினால் இந்த மூத்த குடிமக்களுக்கு ஒரு ஆப்ஷன் கொடுக்க உள்ளது.
- இந்த ஆர்டிஓ நீதிமன்றத்தை அணுகி, அந்த தானம் அந்த சொத்தை கொடுத்தது அல்லது செட்டில்மெண்டாக கொடுத்தது செல்லாது என்று அறிவிக்க கேட்டு மனுதாக்கல் செய்யலாம்.
- அந்த ஆர்டிஓ நீதிமன்றமும் அதை விசாரித்து அந்த தானம் அல்லது செட்டில்மெண்ட் செல்லாது என்று அறிவிக்கலாம் ரத்து செய்யலாம்.
- இது ஒரு முக்கியமான ஒரு அதிகாரம் இந்த மூத்த குடிமக்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
- இதில் செக்சன் 23 ரை ஒரு மூன்று விஷயங்களாக பிரிக்கலாம்,
- ஒன்று, இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்ட சொத்துக்களுக்கு தான் இந்த பிரிவு 23 என்பது பொருந்தும்.
- இதற்கு முன்பு கொடுக்கப்பட்ட சொத்துக்களுக்கு அது பொருந்தாது.
- இரண்டாவது, அந்த கொடுக்கும் போது இவர் என்னை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையோடு கொடுத்திருக்க வேண்டும் என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு கொடுத்திருக்க வேண்டும்.
- மூன்றாவதாக அந்த சொத்தினை பெற்றவர் அந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யாமல் இருக்க வேண்டும், அதாவது, அந்த மூத்த குடிமக்களை பார்த்துக் கொள்ளாமல் அவர்களுக்கு தேவையானவற்றை செய்யாமல் இருக்க வேண்டும்.
- இந்த மூன்று நிபந்தனைகளை பூர்த்தி ஆனால் தான் இந்த ஆர்டிஓ நீதிமன்றத்தில் மூத்த குடிமக்கள் மனு செய்து, கொடுக்கப்பட்ட தானமோ, செட்டில்மேண்டோ செல்லாது என்று அறிவிக்க கோரலாம்.
- அந்த நம்பிக்கையை அவர்கள் ஏமாற்றிவிட்டால் அந்த தானும் பெற்றவர்கள் அந்த நம்பிக்கை ஏமாற்றிவிட்டாள் அந்த தானம் பெற்றதே செல்லாது அது பிராட் மூலமாக ஏமாற்றி வற்புறுத்தி பெறப்பட்டதாக கருதப்பட்டு அது செல்லாது என்று அறிவிக்கப்படும்.
- ஒரு சின்ன சந்தேகம் இந்த முதல் 2007ம் ஆண்டுக்குப் பிறகு செய்யப்பட்ட தானங்களுக்குத்தான் இது பொருந்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- அது போல அந்த தானம் பெற்ற நபர்கள் இந்த மூத்த குடிமக்களை பாதுகாக்காமல் இருந்தால்தான் அந்த மூத்த குடிமக்கள் இந்த பிரிவினை பயன்படுத முடியும்.
- இரண்டாவது சொன்ன அந்த கண்டிஷன் சொல்கிறார் இல்லையா அந்த கண்டிஷன் என்பது பாத்திரத்திலேயே இடம் பெற்று இருக்க வேண்டுமா அல்லது அவர்கள் அந்த நம்பிக்கையோடு செய்தார்கள் என்று இருந்தால் போதுமா என்ற ஒரு குழப்பம் இருக்கிறது.
- சட்ட நிபுணர்கள் இடையே ஒரு கருத்து வேறுபாடு இருக்கிறது. என்பதை கவனித்துக் கொள்ள வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் இருந்தால்தான் செல்லாது என்று அறிவிக்க முடியும் என்று சில சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.
- சில சட்ட நிபுணர்கள் சொல்லும்போது, அந்த நம்பிக்கையில்தான் எழுதிக் கொடுக்கிறார்கள் அதனால், அதைப் பத்திரத்தில் அந்த வாசகங்கள் இடம் பெறவில்லை என்றாலும் கூட அது செல்லாது என்று அறிவித்து ரத்து செய்யலாம் என்று சொல்கிறார்கள்.
- இது சம்பந்தமாக உயர் நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு கொடுத்திருக்கிறார் அதாவது அந்த வழக்கில் என்ன சொல்லி இருக்காங்கன்னு கேரள உயர் நீதிமன்றம் அந்த நிபந்தனைகள் அந்த பக்கத்திலேயே இடம்பெற்றிருக்க வேண்டும் என்னை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை எனக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அந்த நிபந்தனை அந்த பாத்திரத்திலேயே இடம் பெற்றிருந்த அந்த தானம் பெற்றவர் செயல்படுததா விட்டால்தான் ரத்து செய்ய முடியும் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்.
- ஆனால் இந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யப்பட்டு மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
- எனவே உச்ச நீதிமன்றம் இது குறித்து ஒரு தீர்க்கமான முடிவை சொன்ன பிறகுதான் நாம் இது பற்றி தெளிவாக சொல்ல முடியும்.
- இப்போதைக்கு இந்த சட்டத்தை நாம் பார்க்கும் போது அதில் கண்டிஷன் இருந்தால்தான் அது செல்லாது என்று அறிவிக்க முடியும் என்பது போலத்தான் இந்த சட்டத்தை நேரடியாக படிக்கும்போது அப்படித்தான் தெரிகிறது.
- இதுபோன்ற ஒரு சட்டங்கள் போட்டு நம்முடைய பெற்றோரையும் மூத்த குடிமக்களை பாதுகாக்க வேண்டும் என்பதே நமக்கு ஒரு வருத்தத்திற்குரிய செய்தியாகும் இருக்கிறது.
- இது சொத்து இருக்கிறதோ இல்லையோ மூத்த குடிமக்களை பாதுகாக்க வேண்டியது நம்முடைய பெற்றோர் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை இருந்தாலும் அது சட்டத்தில் என்ன இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்பதற்காக தான் இந்த மனவேதனையுடன் நமது நாட்டில் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்ற ஒரு வேதனை தான் சொல்கிறேன்.
- அதனால் என் பெற்றோரையும் மூத்த குடிமக்களையும், சொத்து இருக்கிறதோ இல்லையோ நம்முடைய அடிப்படை கடமை என்பதை சொல்லி இந்த வீடியோவை முடித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்.
- Courtesy: R Mugunthan “SATTAM ONLINE”
30-06-2022 அன்று மெட்ராஸ் உயர்நீதி மன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு, இந்த சட்டத்தை இன்னும் உறுதி செய்கிறது.

🔊 Listen to this Points / குறிப்புக்கள்: by Automatic Voice to text software. இன்றைக்கு நாம்ம மூத்த குடிமக்கள் சட்டம் பற்றி பார்க்கப் போறோம் Senior Citizens Act சீனியர் சிட்டிசன்ஸ் சட்டம் இதனுடைய முழுமையான பெயர் Maintainance and Appearance and Senior Citizens Act-2007 அண்ட் அப்பேரன்ஸ் அண்ட் சீனியர் சிட்டிசன்ஸ் அக்ட் 2007 என்பதாகும் அதாவது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள்…