Pocso | How to escape a false Pocso case? | பொய்யான போக்சோ வழக்கிலிருந்து தப்பிப்பது எப்படி?

  • Points / குறிப்புகள்:
  • சங்கர் என்ற ஒரு ஆண் இருக்கிறான்.
  • ஒரு 15 வயது சிறுமி ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துகொண்டு இருக்கிறாள்.
  • சம்பவத்தன்று மேற்படி சிறுமி சைக்கிளில் தன்னுடைய பள்ளிக்கு செல்கிறாள்.
  • அப்போது மேற்படி சங்கர், அந்த சிறுமியை வழிமறித்து, ” நீ ரொம்ப அழகாக இருகிறாய், எனவே, நான் உன்னை கல்யாணம் செய்துகொள்ள ஆசை படுகிறேன்” என்கிறான்.
  • உடனே அந்த சிறுமி, சத்தம்போட்டு கத்தவே, மேற்படி சங்கர், அந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து, “என்னை கல்யாணம் செய்துகொள்ள வில்லையானால், நான் உன்னை கொண்டுவிடுவேன்” என்கிறான்.
  • அந்த நேரத்தில், அந்த இடத்திற்கு நவீன் மற்றும் அவருடன் 5 நபர்கள் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள்.
  • அதைக்கண்டதும், மேற்படி சங்கர் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுகிறான்.
  • அதைதொடர்ந்து, நவீன் மற்றும் நண்பர்கள் அந்த பெண்ணை பள்ளிவரை கொண்டு விட்டுவிடுகிறார்கள்.
  • நடந்த சம்பவத்தை அந்த சிறுமி, தன்னுடைய வகுப்பு வகுப்பு ஆசிரியையிடம் சொல்கிறாள். ஆசிரியை அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் சொல்ல அவர் அந்த பெண்ணில் பெரியப் பாவிடம் சொல்கிறார்.
  • உடனே பெரியப்பா, காவல் நிலையம் சென்று ஒரு புகாரை கொடுக்கிறார்.
  • அந்த புகாரின் அடிப்படியில், மேற்படி சங்கர் மீது IPC-341, IPC-506/2 பிரிவுகளிலும், மற்றும் Women harassment Act ன் படியும் ஒரு FIR போடுகிறார்கள்.
  • அதன் பிறகு, அந்த சம்பவத்தை புலன் விசாரணை செய்து, POSCO Act-7 யை சேர்த்து குற்றபத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள்.
  • அந்த வழக்கை விசாரித்த கிழமை நீதிமன்றம், மேற்படி சங்கருக்கு தண்டனை வழங்கி உத்தரவிடுகிறது.
  • அந்த தண்டனையை ரத்து செய்ய கோரி மேற்படி சங்கர், உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்.
  • அந்த மேல்முறையீட்டில் மேற்படி சங்கர் வைத்த வாதம் என்னவென்றால்.
  • அந்த பெண் பள்ளிக்கு சென்றுகொண்டிருக்கும் போது அவழியாக வந்த நான், அந்த பெண்ணை பார்த்து ” என்னம்மா எப்படி இருகிறாய் என்றுதான் கேட்டேன்.
  • அதை கண்ட அங்கு வந்த நவீன் மற்றும் இதர ஐந்து நபர்களும், எங்க ஊர் பில்லைகிட்டே எப்படிடா நீ பேசலாம் என்று சொல்லி, என்னை கடுமையாக தாக்கினார்கள். அதனால் எனக்கு உடம்பில் காயங்கள் ஏற்பட்டது. நானும் உடனடியாக மருத்துவ மனையில் சேர்ந்தேன்.
  • மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகலும் தெரிவித்தார்கள்.
  • போலீஸ் வந்து என்னிடம் வாக்குமூலம் வாங்கினார்கள். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில், ஒரு வழக்கும் பதிவு செய்தார்கள்.
  • இவற்றை தெரிந்துகொண்ட அந்த பெண் வீட்டார்கள் என்னுடைய புகாருக்கு ஒரு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக, அந்த பெண்ணை பயன்படுத்து, தவறாக என் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
  • இந்த வழக்கை புலன் விசாரணை செய்த போலீஸ், நான் கொடுத்த புகாரை மறைத்துவிட்டனர்.
  • மேலும், நான் அந்த பெண்ணிடம் தவறாக நடந்த விஷயத்தை பற்றி அங்கு இருந்த நவீன் மற்றும் மற்றவர்களிடம் விசாக்கவில்லை.
  • அந்த பெண் பள்ளி ஆசிரியையிடம் சொல்லி, அவர் தலைமை ஆசிரியரிடம் சொல்லி, அவர் பெரியப்பாவிடம் சொல்லி வழக்கு போடப்பட்டுள்ளது, அனால், சாட்சிகளாக அந்த பள்ளி ஆசிரியையை தலை ஆசிரியரை, போலீஸ் விசாரிக்கவில்லை.
  • மேலும், அந்த பெண்ணை நீதித்துறை நடிவரிடம் அழைத்துசென்று 164 ன் கீழ் ஸ்டேட்மன்ட் எதுவும் வாங்கவில்லை.
  • சம்பவம் நடந்ததாக சொல்லபடுவது 22ந்தேதி அனால், FIR பதிவு செய்தது 23 ந்தேதி.
  • மேலும், என்னுடைய FIR பதிவான பிறகுதான் அந்த FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • எனவே, நான் எந்த குற்றமும் செய்யவில்லை, அரசு தரப்பு நான் குற்றம் செய்ததை நிருபிக்கவில்லை.
  • அதே சமயம், என்னுடைய FIR மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அரசு தரப்பு எனக்கு சொல்லவில்லை.
  • நான் கொடுத்த புகாரில் SC ST சட்டத்தின் கீழ் புகார் அளித்தேன், அதை உடைக்க வேண்டும் என்பதற்காக என்னை POSCO சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளார்கள்.
  • எனவே, கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யவேண்டும். என்று மேற்படி சங்கர் தரப்பு கோரிக்கை வைக்கிறார்.
  • மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி, அனைத்து விஷயங்களையும் விசாரித்து, கிழமை நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தார்.
AIARA

🔊 Listen to this Points / குறிப்புகள்: சங்கர் என்ற ஒரு ஆண் இருக்கிறான். ஒரு 15 வயது சிறுமி ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துகொண்டு இருக்கிறாள். சம்பவத்தன்று மேற்படி சிறுமி சைக்கிளில் தன்னுடைய பள்ளிக்கு செல்கிறாள். அப்போது மேற்படி சங்கர், அந்த சிறுமியை வழிமறித்து, ” நீ ரொம்ப அழகாக இருகிறாய், எனவே, நான் உன்னை கல்யாணம் செய்துகொள்ள ஆசை படுகிறேன்” என்கிறான். உடனே அந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *